02-04-2005, 12:50 PM
எல்லோரும் நாங்கள் தவறு செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டு எமது கருத்துக்களை முன்வைத்துள்ளோம். எங்கள் எல்லோருக்கும் யாழ் களத்தை தூய்மையானதாகவும், புதுமையானதாகவும் பேணவேண்டும் என்ற கடப்பாடு இருக்கிறது என்பதும் விளங்கியிருக்கிறது. ஆனால் இன்று ஏன் இப்படி ஒரு தலைப்பில் விவாதம் நடத்தவேண்டியிருக்கிறது என்பதை ஒரு கணம் எல்லோரும் நிதானமாக சிந்திக்கமுன்வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
நாங்கள் தான் எழுதுகிறோம். வெட்டி ஒட்டுகிறோம். வேறு இடங்களில் படித்ததை சேர்க்கிறோம். நாங்கள் படித்ததை, அறிந்ததை எமது கள நண்பர்களும் அறியவேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் இவற்றைச் செய்கிறோம்.
நாங்கள் எங்கே தவறு விடுகிறோம்? இதனை நாங்கள் அனைவரும் சிந்தித்தால் களத்தில் வேண்டாத விடயங்கள் நடைபெறுவது தானாக நின்றுவிடும். நாங்கள் தேவையற்ற அலட்டல்கள், விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்று எங்கள் மனதளவில் உறுதி எடுத்துக்கொள்வோம். சரி முற்றுமுழுதாகத் தான் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் தொடர்ந்து முயற்சிப்போம். வெற்றியடைவோம்.

--
--
--