08-17-2003, 01:37 PM
sethu Wrote:மட்டக்களப்பு ஈ.என்.டி.எல்.எவ் கட்சியை புனரமைக்கும் நடவடிக்கைகள் சந்திவெளி மாமா என அழைக்கப்படும் மகேந்திரன் மற்றும் றாமறாச்(TBC RADIO MD) ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பிலுள்ள மாற்றுத்தமிழ் குழுக்களிலிருந்து விலகிய நபர்கள், ராசிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சில நபர்களுடனும் இவர்கள் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
சந்திவெளி மாமா புளட் இயக்கத்தில் இருந்து விலகி இந்தியப் படையினரின் காலத்தில் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தில் இணைந்து தமிழ் விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்.
பின்னர் இந்தியப்படை வெளியேறியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து அங்கு இடம்பெற்ற சில கொலைக்குற்றச் சாட்டுகள் காரணமாக அந்த நாட்டு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் கொழும்பு வந்துள்ளார்.
தற்போது புளட் மோகனுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

