02-03-2005, 09:43 PM
இன்றைய யாழ்கள கருத்துக்கள், கருத்தாளர்கள் சம்பந்தமான எனது மனதில் பட்டதை உங்களோடு பகிர விரும்புகிறேன். இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்காகவோ அல்ல, மாறாக யாழ்கள சிறந்த கருத்தாடல்கள் மூலம் பலரையும் கவர வேண்டுமென்பதே!
என்னைப் பொறுத்தவரை இங்குள்ள கருத்தாளர்களை.....
1) எங்கிருந்தாவது வெட்டியொட்டும் ஒரு சிலர்.
2) தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் கருத்தெழுதும் ஒரு சிலர்.
3) கருத்துகளுக்கு தேடித்தேடி "நன்றி", "நன்றி அண்ணா", ... எழுதும் ஒரு சிலர்.
4) கருத்தேயற்று எழுத முற்படும் ஒரு சிலர்.
5) சுய விளம்பரதாரிகள்.
6) குழப்பவாதிகள்.
7) ஆங்கில மோகவாதிகள்........
இப்படிப் பல வகைகள். இப்படியானவற்றிலிருந்து எப்படியாக கருத்துக்களத்தை ஒரு ஆரோக்கியமான களமாக மாற்றுவது? உங்கள் கருத்துக்களைஆரோக்கியமாக பகிருங்கள்.
இன்று பல நாடுகளிலிருந்து பலராலும் கருத்துக்களம் பார்வையிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக "இளைப்பாறுகளம்", "அறிவியற்களம்" போன்றன மிகத்தரமான பக்கங்களாகவே இருக்கும் போது "சிந்தனைக்களம்", "தமிழ்க்களம்" ஏதோ திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை நாமெல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் "யாழ் களத்தை" ஓர் ஆக்கபூர்வமான, முதல்தர தமிழ்த் தகவல் இணையமாக மாற்றலாம்.

" "