02-03-2005, 06:29 PM
Thusi Wrote:பெண்களுக்குச் சுதந்திரம் வேணும் சுதந்திரம் வேணும் என்று எல்லோரும் தொண்டை கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அவர்களிலை அநேகர் அந்தச் சுதந்திரம் என்பது எது என்பதை வரையறை செய்யத் தவறிவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.
முதலில் பெண்களுக்குச் சுதந்திரம் யாரிட்டை இருந்து கிடைக்வேணும்? அநேகமாய் எல்லோரும் ஆண்களிடமிருந்துதான், ஆணாதிக்கத்திடமிருந்துதான் என்று சொல்கிறார்கள். அது எவ்வளது தூரத்திற்கு உண்மையான நிலைப்பாடு. உதாரணமாக வரதட்சனை என்ற விடயத்திலை மாமியார்களின் கொடுமைகள்தான் அதிகளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
மற்றது இங்கை தாயகத்தைப் பொறுத்தவரையில் அநேகமாய் பெண்விடுதலைப் பற்றிக் கதைப்பவர்கள் அமெரிக்காவிலை பெண்கள் இப்படி இருக்கினம். லண்டனிலை அப்படி இருக்கினம். இங்கை நாங்கள் மட்டும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஒப்பிதடுதல் சரியா? மேலைத்தேய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பவற்றோடு எமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பெண்விடுதலை பேசுதல் சரியா?
இதைத்தான் அக்கா நானும் சொன்னனான். ஆனா உங்களை மாதிரி கோர்வையாக சொல்லத் தெரியேல்லை.
பெண் சுதந்திரம் அடைய வேணும் எண்ட கருத்தே பிழை ஏனெண்டா பிறக்கேக்க எல்லாரும் சுதந்திரமாய்தான் பிறக்கிறம்.
சட்டமும் அப்படித்தான் சொல்லுது. ஆனா இந்த சுதந்திரம் நடைமுறை வாழ்க்கையில ஏன் ஆளுக்கு ஆள் வேறுபடுது..
. .
.
.

