02-03-2005, 06:24 PM
சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று தான். அதனை நாம் உபயோகிக்கும் முறையில் தான் மற்றைய விடயங்கள் அமைகின்றன. எவரும் எவரையும் அன்பால் கட்டிப் போடலாமேயன்றி அதிகாரத்தால் ஒன்றும் செய்து விட முடியாது. பல விடயங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது குறைவு. மேலெழுந்த வாரியாக பார்த்து விட்டு முடிவெடுக்கின்றோம். பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒரு ஆண் கெட்டுப் போய் விட்டால் அது அவனை மட்டுமே பாதிக்கின்றது. ஆனால் ஒரு பெண் கெடடுப் போய் விட்டால் அது அவளைச் சேர்ந்த அனைவரையும் பாதிக்கின்றது. அதனால்த்தான் முன்னோர்கள் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதைக் கூட தாய்மார்களே செய்கின்றார்கள். உண்மையை கூறுங்கள் ஒரு பெண் பிள்ளை மீது கட்டுப்பாடுகள் போடுவது வீட்டில் அப்பாவா? அம்மாவா? அது கூட அவர்களின் பாதுகாப்பிற்காகத்தான். ஆனால் திருமணத்தின பின் பெண் தான் மகாராணி. எங்கே மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வீட்டில் அம்மா மீதா அப்பா மீதா கூடுதல் பிரியம் வைத்திருக்கின்றோம். எல்லா அம்மாக்களும் எம்மை மிரட்டி வைக்க பாவிக்கும் சொற்பதம் அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றே போட்டு விடுவார் என்று சொல்லிச் சொல்லியே அப்பாவைப் பற்றி ஒரு வில்லன் இமேஜ் உருவாக்கி விடுவார்கள். பிள்ளைகளும் அதை நம்பி அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவர்களை அறியாமலேயே பயம் வரும் அதனால் அம்மா தான் தெய்வம். இப்படி பெண்கள் ஆண்களின் பல பலவீனங்களை வைத்து நிறைய தமது விடயங்களை வென்றெடுக்கின்றார்கள். அப்படியிருந்தும் பெண்கள் திருப்தியடைவதில்லை. பிரச்சினைகளுக்குக் காரணமானவர்களே பிரச்சினை பிரச்சினை என்றால் பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது? தாய்க் குலங்களே ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்து சிந்திப்பீர்களா??????????

