02-02-2005, 04:40 AM
anpagam Wrote:இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அடுத்த நிலையிலேயே ஜப்பான்
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக் கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரை உதவியளித்த நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் ஜப்பான் உள்ளது.
ஆகக்கூடுதலான தொகையாக இரண்டாயி ரத்து 724 கோடி ரூபாவை இந்தியாவே வழங் கியுள்ளது. இரண்டாவது நிலையில் ஜப்பான் இரண்டாயிரத்து 560 கோடி ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. ஆழிப் பேரலை அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் இழப்புகளும் சுமார் 13 ஆயிரம் கோடியிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபா வரை இருக்கலாம் என உத்தேசமாக மதிப்பிடப்பட் டுள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வ தேச நாணய நிதியம் மற்றும் இந்தியா ஜப்பான் அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் என்பன 13 ஆயிரத்து 694 கோடி ரூபா வரை வழங்கி உதவ முன்வந்துள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்தியாவே ஆகக் கூடுதலாக வழங்கியுள்ளது.
அமெரிக்கா 134 கோடி ரூபா நோர்வே 115 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஆயிரத்து 400 கோடி ரூபா என வழங்கியுள்ளன. மேலும் உதவிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக் கின்றன என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: உதயன்
செய்திக்கு நன்றி

