02-02-2005, 03:11 AM
KULAKADDAN Wrote:நங்கள் எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கும்
என்ன ஆதாரம்......... :?: அதாவது ஆரியம் திராவிடம் என்ற வேறுபாட்டிற்கு காரணம் என்ன :?:
சரி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான விடைகள் தராவிட்டாலும் கீழ்வருவன உதவி செய்யும் என நம்புகிறேன்.
நாங்கள் திராவிடர் என்பதற்கு ஆதாரம் எமது தோற்றமும், மொழியும், பழக்கவழக்கங்களும்தான். இவை ஆரியர் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியரிலும் வேறானவை.
சிங்களவர் ஆரியர் இல்லை; அவர்களும் திராவிட வழிவந்தவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. விஞ்ஞானரீதியாக இலங்கை வரலாறு ஆராயப்படாமல் எழுதப்பட்டதால் சிங்களவர் ஆரியர் என்ற கூற்று நிலைத்துவிட்டது.
பூசகர்கள் (இலங்கையில் உள்ளவர்கள்) ஆரிய திராவிடக் கலப்பினர். எனினும் தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் தங்களை ஆரியர் என்றுதான் நம்புகின்றனர்.
ஆரிய திராவிட வேறுபாடிற்கு முதன்மையான காரணம் இரு சமூகங்களுமே வெவ்வேறான மக்கட் சமுதாயாமாக உள்ளதுதான்.
வட இந்தியர் ஐரோப்பிய-ஸ்லாவிய, பாரசீக கலப்பினர். தென்னிந்தியர் (அந்தமான் தீவுகளிலுள்ள பழங்குடியினரையும் சேர்த்து) சிந்துவெளி நாகரிக காலத்தில் மொகஞ்சதாரோ, கரப்பாவில் இருந்தவர்கள். காலத்திற்கு காலம் நடந்த ஆரிய படையெடுப்புகளால் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள்.
இவையெல்லாம் மேற்கூறிய புத்தகத்தில் ஆங்காங்கே காணப்பட்ட தகவல்கள்தான். :wink:
<b> . .</b>

