02-02-2005, 02:43 AM
KULAKADDAN Wrote:[]இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....[/quote]
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink:
வணக்கம்,
என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்நாட்களில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பின் எஞ்சிய மேட்டு நிலப்பகுதிகள். இந்த தீவுகளில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்கள். எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆராட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.
திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றிருக்கலாம். இதி சரியான ஆராய்வுகள் இன்றி உறுதிப்படுத்த மிடியவிலலை.
அன்புடன்
மதுரன்


