Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது
#20
ராமதாஸை திட்டிய ஜெவுக்கு கமல் நன்றி!

சென்னை:

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ் திருமாவளவன் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரி வரும் பாமக நிறுவனர் ராமதாஸும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரையும்இ எஸ்.ஜே. சூர்யாவின் பி.எப் படப் பெயரையும் தமிழில் மாற்றாவிட்டால் படத்தை ஓட விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

இந்த இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததோடு படங்களை ஓட விடாமல் தடுக்க முற்பட்டால் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடவே திமுக தலைவர் கருணாநிதிக்கும் டோஸ் விட்டார்.

ராமதாஸ் திருமாவளவன் ஆகியோரை கண்டித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்

தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவு கூட அரசியல் தெரியாது.

அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம் அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்.


ஏற்கனவே சண்டியர் பட டைட்டில் தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியால் பிரச்சனை எழுந்தபோது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை கேட்டார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு படத்தின் பெயரையும் மாற்றினார்.

ராமதாசுக்கு பாஜக கண்டனம்:

இதற்கிடையே ராமதாஸ் திருமாவளவனுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழ்த் திரையுலகம் நொடிந்து போயுள்ளது. இந் நிலையில் அரசியல்வாதிகள் தலையீடு கலைத் துறையின் வளர்ச்சிக்கு உதவாது. இது கண்டனத்துக்குரியது.

திரைத் தொழிலை நம்பியிருக்கும் ஏராளமான குடும்பத்தினரின் வாழ்க்கையை சீரழிக்க முயலக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் படங்களைத் தடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறியிருக்கிறார். கலைத் துறையினர் சுதந்திரமாக படம் எடுப்பதையும் தயாரிப்பதையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பது பணத்தைப் போட்டு முதலீடு செய்பவர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடக் கூடாது.

முன்பு தாதாக்களின் பிடியில் சிக்கி மும்பை திரையுலகம் தவித்தது. அதுபோல அரசியல்வாதிகளின் கையில் சிக்கி தமிழ் திரையுலகம் சிக்க சீரழிய அனுமதிக்கக் கூடாது.

சட்டத்தைக் கையில் எடுக்க ராமதாஸ் திருமாவளவனுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

கோடம்பாக்கத்தில் சில படங்களுக்கு ராதாகிருஷ்ணனும் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் லீக் கண்டனம்:

அதே போல தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூது அளித்த பேட்டியில்இ ராமதாஸ் திருமாவளவன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.

ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் மொழி கெட்டுப் போய் விடாது. வியாபாரத்துக்காகத்தான் அவ்வாறு பெயர் வைக்கிறார்கள். இதை ¬முடக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.

-----------------------------------------------------------------------------------

ஜனவரி 31 2005

ராமதாஸின் பெயர் "தமிழ்க் குடிதாங்கி": திருமாவளவன் சூட்டினார்!

சென்னை:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நாங்கள் 'தமிழ்க் குடிதாங்கி' என்றுதான் அழைக்கிறோம். அது¬முழுமையான தமிழ் பெயர் தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.


தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து ராமதாஸ்இ திருமாவளவன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களை திரையிடுவதை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் ராமதாஸ் என்ற பெயரே தமிழ்ப் பெயர் கிடையாதே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் திருமாவளவன் இது குறித்துக் கூறுகையில்

தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸை யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. மருத்துவர் அய்யா என்றுதான் அழைக்கிறார்கள். நாங்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) 'தமிழ்க் குடிதாங்கி' என்றுதான் அழைக்கிறோம். இது முழுமையான தமிழ் பெயர் ஆகும்.

பாமகவினரும் இனிமேல் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் ராமதாஸை அழைக்க வேண்டும். இந்தியாவில் மொழிக்காக உயிரிழந்த வரலாறு கொண்ட ஒரே இனம் தமிழர் இனம்தான்.

திரையுலகினர் பூச்சாண்டி காட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களது வேண்டுகோளை மீறி பிற மொழி பெயர் சூட்டினாலோ தமிழ் சீரழிவு காட்சிகளை அமைத்துப் படம் எடுத்தாலோ உயிரை விலையாகக் கொடுத்தாவது தடுப்போம் என்றார்.

-------------------------------------------------------------------------------

பிப்ரவரி 01 2005

தமிழில் படப் பெயர்: ஜெவுக்கு ராமதாஸ் பதில்

சென்னை:

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று ஜெயலலிதா சட்டம் போடும் நிலை வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருமாவளவனும் ராமதாஸும் வற்புறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கமல்ஹாசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திரைப்படங்களை தடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று திருமாவளவன் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். இந் நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடைகள் வர்த்தக நிறுவனங்களில் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகøள் தமிழில் எழுதக் கோரி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல கட்ட போராட்டத்தை சமீபத்தில் நடத்தினோம்.

அந்த சமயத்தில் திடீரென 1983லிலும் 84லிலும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சுட்டிக் காட்டி அந்த உத்தரவுகளின்படி தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டதாக செய்தி வந்தது.

திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லவோ ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்று இன்றைக்கு முதல்வர் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அன்றைக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை.

நாங்கள் இப்படித்தான் எழுதி வைப்போம் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை எழுதுவோம் என்று யாரும் சொல்லவில்லை குதர்க்கம் பேசவில்லை. அன்று எம்.ஜி.ஆர். எந்த உணர்வுடன் இந்த உத்தரவுகளைப் போட்டாரோ அதே உணர்வுடன்தான் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று கோரினோம்.

எங்களது போராட்டத்தை ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் என விஷமப் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அண்ணாவின் கொள்கைக்கு எதிரானது என்று முதல்வரும் கூறியுள்ளார்.

அண்ணாவின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்றாலு தமிழ் ஆட்சி மொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி வந்தார்.

எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தவர்தான் ஜெயலலிதா. இப்போது பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.

ஆளுநர் உரையை தமிழில் படிக்கவே மாட்டோம்என்று சொன்னார்கள். இப்போது மாற்றிக் கொண்டு படித்துள்ளார்கள். அதுபோலவே தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று கூறும் இவர்களே அதற்காக ஒரு சட்டம் கொண்டு வரும் நாளும் விரைவில் வரும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

------------------------------------------------------------------------------------------------

பிப்ரவரி 01 2005

வேட்டி கட்டி ரவிக்கை அணிவாரா கமல்? திருமா

சென்னை:
தமிழ் உணர்வாளர்களின் எச்சரிக்கையை மீறி மும்பை எக்ஸ்பிரஸ் பிஎப் ஆகிய படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தாவது அதைத் தடுப்போம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.

தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாமக தலைவர் ஜிகே மணி விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்இ மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் உடனிருந்தார்.

நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

வரும் மார்ச் 12ம் தேதி முதல் தமிழுக்கான எங்களது மூன்றாவது போராட்டத்தை நடத்த இருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் ஜெயலலிதா எங்கள் போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி.

நாங்கள் திரைத்துறையை எதிர்த்து போராடுவதாக சித்தரிப்பது வேதனையாக உள்ளது. எங்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டில் 80 படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டன. ஆகவே திரைத்துறையில் 95 சதவீதம் பேர் எங்களை ஆதரிக்கின்றனர்.

இதனால் பயந்து போன ஜெயலலிதா அவர்கள் எங்களை திரைத்துறையினருக்கு எதிரானவர்கள் போல காட்டி அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி விட முயல்கிறார்.

எங்கள் வேண்டுகோளை மீறி கமல்ஹாசன் அவர்கள் தனது படத்துக்கு பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் பெயர் வைப்பேன் என்று அறிவித்துள்ளார். இது வேட்டி கட்டிக் கொண்டு ரவிக்கை போடுவது மாதிரி.

இயக்குனர் எஸ்ஜே சூர்யா மிகவும் ஆணவத்துடனும் திமிருடனும் என் விருப்பப்படி தான் பெயர் வைப்பேன் அது தவறு என்றால் பார்ப்பவர்களின் பார்வையில் தான் கோளாறு என்று திமிர்ப் பேச்சு பேசியிருக்கிறார்.

தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள் எச்சரிக்கையை மீறி இந்தப் படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தும் தடுப்போம். எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தமிழ் உணர்வு எங்கள் ரத்தத்தில் கலந்தது. யாரையும் மிரட்டவோ பேரம் பேசவோ இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை.

யாரிடமும் தம்பிடி காசு கூட நாங்கள் நன்கொடை வாங்கியதில்லை. கலாச்சார சீர்கேட்டையே எதிர்க்கிறோம்.

எஸ்ஜே சூர்யாவிடம் படம் காம வக்கிரம் பிடித்ததாக உள்ளது. கேவலமாக அருவெருப்பாக உள்ளது. பி.எப். என்ற சொல்லே எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் போட்டோக்கள் கூட 'நீல'மாகத் தான் உள்ளன.

தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலை தமிழ் மண்ணை வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம். பம்பாய் தான் பழைய பெயர். ஆனால் பால் தாக்கரேவுக்கு பயந்து அதை மும்பை என்று கமல் எடுத்து வருகிறார். தாக்கரேவுக்கு பயப்படும் கமல் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மறுப்பது ஏன்?

தமிழ் உணர்வுகளையும்இ மரபுகளையும் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது.

தமிழர்களை ஜாதியின் பெயரால் எப்படி பிரித்தாளுகிறார்கள் என்பதற்கு ஐயா படம் நல்ல உதாரணம். அந்தப் படத்தை பார்க்குமாறு எங்கள் தொண்டர்களிடம் கூறியிருக்கிறோம். உள்ளக் கடத்தல் படத்தை நாங்கள் பார்க்க இருக்கிறோம்.

தமிழுக்காகத் தான் போராட்டமே தவிர எந்த மொழிக்கும் எதிராக அல்ல. தொன்மையான மொழி நம் மொழி. அந்தப் பெருமையை உணர்ந்து அதைக் காக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தொலைக்காட்சிகளுக்கும் வைத்துள்ளோம். எந்தத் தொலைக்காட்சிக்கும் நாங்கள் பயந்து ஓட மாட்டோம் என்றனர்.

சேதுராமன் அறிக்கை:

முன்னதாக சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ராமதாசின் பெயரில் வட மொழி கலப்பு ('தாஸ்') இருப்பதாக தமிழ் பண்டித்தியம் மிக்கவர் போல வாய் நீளம் காட்டும் ஜெயலலிதாவின் பெயரில் முன் எழுத்தான 'ஜெய' என்பது வடமொழி தானே? அதை நீக்க ஜெயலலிதா தயாரா?

தமிழர்கள் எழுச்சி பெற்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதை கண்டு அஞ்சி ஜெயலலிதா புலம்புகிறார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. அதிமுகவுடன் கூட்டு சேர ஒரு கட்சியும் தயாராக இல்லை. இதனால் சினிமாகாரர்களையாவது பிடித்து வைத்துக் கொள்வோம் என்ற சுய நல நோக்கத்துடன் தமிழ் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பவர்கள் சீறிப் பாய்கிறார் ஜெயலலிதா. தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்வோம் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழப் பாதுகாப்பு இயக்கதினருக்கு எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நேற்று கமல் வெளியிட்ட அறிக்கையில்

தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவு கூட அரசியல் தெரியாது.

அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம் அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

-------------------------------------------------------------------------------

நன்றி: thatstamil
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-31-2005, 02:22 AM
[No subject] - by Mathuran - 01-31-2005, 06:27 AM
[No subject] - by Nitharsan - 01-31-2005, 08:19 AM
[No subject] - by Jude - 01-31-2005, 11:04 AM
[No subject] - by Mathuran - 01-31-2005, 12:13 PM
[No subject] - by Thaya Jibbrahn - 01-31-2005, 04:13 PM
[No subject] - by Nitharsan - 01-31-2005, 06:37 PM
[No subject] - by aathipan - 01-31-2005, 09:36 PM
[No subject] - by Nitharsan - 01-31-2005, 09:38 PM
[No subject] - by kuruvikal - 01-31-2005, 10:09 PM
[No subject] - by Mathan - 01-31-2005, 10:23 PM
[No subject] - by shiyam - 01-31-2005, 10:47 PM
[No subject] - by yarlmohan - 02-01-2005, 12:26 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 04:15 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 06:20 AM
[No subject] - by Mathuran - 02-01-2005, 06:56 AM
[No subject] - by Nitharsan - 02-01-2005, 09:33 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 12:31 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 12:56 AM
[No subject] - by Jude - 02-02-2005, 04:30 PM
[No subject] - by tamilini - 02-02-2005, 04:33 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 09:56 PM
[No subject] - by tamilini - 03-04-2005, 10:10 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 03:34 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 03:42 PM
[No subject] - by stalin - 04-12-2005, 04:24 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 04:31 PM
[No subject] - by sayanthan - 04-12-2005, 04:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)