![]() |
|
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது (/showthread.php?tid=5522) Pages:
1
2
|
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது - Aalavanthan - 01-31-2005 <b>படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாதுநடிகர் விஜயகாந்த் பேட்டி</b> படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். நடிகர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„- தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கக்கூடாது என்று கூறி வந்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை நடிகர் சங்கம் சார்பிலும், எனது சார்பிலும் வரவேற்கிறேன். ஆங்கிலத்தில் வைக்கப்படும் தமிழ் படங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் டி.வியில் வரும் ஆங்கில விளம்பரங்களை மாற்றச் சொல்வார்களா? குளியல் சோப், பற்பசை போன்றவற்றுக்கு ஆண்டு கணக்கில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் உள்ளன அதை மாற்ற போராடுவார்களா? கார், பஸ், சைக்கிள், செயின், டிக்கெட், பாஸ், நோட்டீஸ், பிரியாணி, பாயா இதெல்லாம் என்ன பெயர்? அதற்கு தமிழில் பெயர்களை சொல்லி அப்படி அவர்கள் சொல்லத் தயாரா? டாக்டர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் ஆங்கிலத்தில்தானே மருந்து பெயர்களை எழுதுகிறhர்கள். அப்படி எழுதப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் தமிழில் நேரடியாக மொழி பெயர்த்து எழுதுவார்களா? அப்படி எழுதினால் மருந்து கொடுப்பவரால் படிக்க முடியுமா? டி.வியில் எப் சானல் என்ற ஒரு சானல் வருகிறது. அதில் வருபவர்கள் அரைகுறை ஆடையுடன் வருகிறhர்கள். குடம்பத்தோடு அதை பார்க்க முடிகிறதா? அதை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுவிடமாட்டார்களா? அதையெல்லாம் மாற்றுவதற்கு போராடி மாற்றிக்காட்டுங்கள். என்னைப்பொருத்தவரை நான் என்றைக்கும் எனது மன்றத்தின் மூலம் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, வீழ்வது நாமாக இருந்தாலும வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற வார்த்தையை நான் எல்லா மேடைகளிலும் சொல்வேன். அதை கலைஞர் பாராட்டி இருக்கிறhர். கமல்ஹாசன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறகிறhர்கள். கமல்ஹாசன் தமிழ் தெரியாதவரா? அவர் சுத்த தமிழில் பேசக்கூடியவர். அதை ஏன் தடுக்கிறீர்கள். இன்னும் எவ்வளவோ கேட்கலாம். நாங்கள் எங்களது தொழிலைதான் செய்கிறோம். அந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதன் மூலம் தமிழ் அழிந்துவிடாது. இவ்வாறு கூறினார். <b>சினிமாவுக்கு தமிழில் பெயர்„ ராமதாஸ்-திருமாவளவன் மீது ஜெயலலிதா கடும் பாய்ச்சல் ……போராட்டம் நடத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்.</b> திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும்படி போராடி வரும் ராமதாஸ்-திருமாவளவன் ஆகியோர் மீது ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது„- தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது, அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் …தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டு திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்தப்படங்களை தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது, திரையிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தி இருக்கிறார்கள். திரைப்படத் தயாhpப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக்கொள்ளலாம். இந்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதற்கோ, இந்தப் பெயரை வைக்கக்கூடாது என் பதற்கோ யாருக்கும் உhpமை இல்லை. மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு எந்த விதமான சட்டமும் கிடையாது. இவை எல்லாம் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் தெரியாதா? தெரியும் ஆனால் தங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவர்கள் திடீர் தமிழ் அபிமானிகளாக ஆகியிருக்கிறhர்கள்* இவர்களுடைய போராட்டம் வேடிக்கையானது. இத்தனை காலம் இல்லாத தமிழுணர்வு இவர்களுக்கு திடீ ரென்று பொங்கிப் புறப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம் தானே காரணம்? இந்த திடீர்த்தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா? திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் முழங்கி இருக்கிறhர். எங்கே? ஒரு நு}ல் வெளியீட்டு விழாவில்* நு}லின் பெயர் என்ன? …பேனா என் ஆயுதம்†* இதில் …பேனா† தமிழா? …ஆயுதம்† தமிழா? இல்லை. பேனா - ஆங்கிலம், ஆயுதம்- சமஸ்கிருதம்* …என்† என்பது மட்டும் தமிழ்* ஒரு பெயாpன் மூன்று சொற்களில் 2 சொற்கள் பிறமொழி சொற்கள். அடடே* என்னே இவர்களது தமிழ் உணர்வு. தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத்துறைக்கு எதிராக வன் முறையை தூண்ட நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது. தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல் துறை தனது கடமையைச் செய்யும். போலிப் போராட்டவாதிகள் இதைப் புhpந்துக்கொள்ளட்டும். இவ்வாறு கூறியுள்ளார். தினகரன் - shiyam - 01-31-2005 அதுசரி ரயனிக்கடுத்ததா உவர் ஒருத்தர் இந்தாவாறன் அந்தாவாறன் என் டமில் என்மக்(கு)கள் எண்டு தொடங்கியிருக்கிறார்.பாப்பம் - Mathuran - 01-31-2005 வணக்கம், நல்ல ஒரு விடயத்த கண்டு பிடிச்சிருக்கினம். அதென்னவென்றால் திரைபடத்தின் பெயரை மாற்ற சொன்னால், பற்பசயின் பெயரை மாற்றுங்கள் நாங்கள், திரை படத்தின் பெயரை மாற்றுகின்றோம் என்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது. அடுத்தவன் ஊரில் உள்ளவர்களை கொல்கின்றான் என்பதற்காக, நீயும் கொலை செய்வதுதான் ஞாயமா? சரி இராமதாசும் திருமாவளவனும் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கினால் தானே நாம் கோடு வரைய முடியும். இராமதாசும் திருமாவளவனும் திரைபடபெயரை மட்டும் மாற்ற சொல்லவில்லையே, தமிழ்கத்தில் இருக்கின்ற அறிவிப்பு விளம்பரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தமிழில் இருகவேண்டும் என்றும்தானே அறிவித்து இருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும் என்றும்தானே சொன்னார்கள். அது என்ன கமலகாசன் மட்டும் முதலில் ஒரு மேடை பேச்சில், எனது அடுத்த படத்துக்கு நான் பாதி தமிழிலும் பாதி ஆங்கிலதிலும்தான் பெயர் வைதுகொள்வேன் என அறிவித்தமையின் பின்னணி என்ன? ஏன் மற்றவர்கள் இருக்க கமல் மட்டும் முந்திக்கொண்டு இப்படி அறிவித்தார்? பின்னாளில் தனது படத்திற்கு ஆங்கிலத்தில் மட்டும் பெயர் வைத்தமைக்கான காரணம் என்ன? நீங்கள் தமிழில் பேசுகின்றீர்கள் என்பதற்காய் தமிழ்னாகி விட முடியுமா? உங்களுக்குள் தமிழ் உண்ர்வு இருக்க வேண்டாமா? உங்கள் அரசியலுக்கும் வர்தகத்துக்கும் மட்டும் தான் தமிழ் பயன் படுமா? தமிழுக்காய் நீங்கள் பயன் பட மாடிர்களா? தமிழ் மொழி ஆரம்ப கட்டாய பயிற்று மொழியாக்க படவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேட்டுகொன்ட போது, அதனை எதிர்தவர்கள், ஆங்கிலத்தின்பால் மோகம் கொண்டவர்கள், அரசியலுக்காய் தமிழை விற்று பிழைப்பவர்கள், திருமாவளவனையும் இராமதாசுவயும் கேள்வி கேட்பது வெட்கக் கேடானதுவே. திருமா வளவன் இராமதாசின் கோரிக்கைகளை ஏற்று, உலகத்தமிழ் இளஞ்ஞர்கள் அணி திறள வேண்டும். அன்புடன் மதுரன் - Nitharsan - 01-31-2005 ஐயொ அரசியல் பேசிறதுக்கு தமிழை நல்ல வளைக்க விஜயகாந் கற்றுக் கொண்டு விட்டார். ஒவ்வொரு மேடைகளிலும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழ் என்றவர் இப்போ என் வாழ்விற்காய் தமிழ்ப் படத்திற்க்கு ஆங்கிலப் பெயர் வைக்கலாம் அது மட்டுமல்ல அது தவறு என்று எனக்கு தெரியும் அனால் நான் செய்ய மாட்டேன் ஏனென்றால் அது எனது வருங்கால அரசியல் எதிரிகளின் கோரிக்கை எனவே தான் இப்படி தொப்பியைப் பிரட்டி விட்டேன் என்று சொல்லாமல் ஏதொ தமிழுணர்வின் உச்சியில் தான் இருப்பதாய் கனாக் கண்டு கொண்டு உருக் கொரு இளைஞர் அணியை தனது மன்றம் என்ற பெயரில் அரசியல் எதிரிகளுக்கு அரசியலுக்கு வரமுன்னமே பிரச்சினையைக் கொடுக்கும் விஜயகாந் தமிழைப் பற்றி பேசுகின்றார். இவரை நடிகர் சங்க தலைவர் என்று சொன்னவுடன் அவர் தவறாய் தமிழகத்தின் தலைவன் என்று எண்ணி விட்டார் பொல..திரைப்படத்திற்க்கு தமிழ் பௌர் வைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் திருமாவளவனும் ராமதாசும் அரசியலக்காய் மக்களை விற்றவர்கள் அல்ல. அவர்கள் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் ஏசிக்காரில் ஏறி போலி முகத்தோடு வாழும் சினிமாக் காhரர்கள் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பொ திடீரென் அரசியலில் குதித்தவர்களே அல்லது அரசியலுக்கு வரமுன்னரெ அதைப் பற்றி பெசியவர்களn அல்ல.. அவர்கள் தமது உழைப்பினால் முன்னுனேறியவர்கள். அவர்களை மக்கள் நேசிக்கின்றனர். அதனை ஒடுக்கவெ விஜயகாந் முனைகிறார். கடந்த வருடம் மெடையில் பெசிய போதும் ராமதாசுக்கு எதிராக மக்களை தூண்ட விஜயகாந் எடுத்த முயற்சி அவரக்கே தீங்கானது.. இதை அவர் உணரவேண்டும் சினிமாவிலும் மேடையிலும் தமிழ் பெசுவதை விட்டு விட்டு நல்ல ஆக்க பூர்வமான முயற்ச்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். மன்றத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதை விட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் பாடசாலையை எவருமே தமிழ் சொல்வதில்லை காரணம் அவர்களுக்கு அதற்க்குரிய தமிழ் தெரியாது ஸ்க்கூல் என்பதே அங்கு தமிழாகியுள்ளது. அதே போல இன்னும் ஏராளமான வார்த்தைகள் ஆங்கிலத்திற்க்கும் அதே நேரம் கிந்திக்கும் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்க்குள் கட்டாய கிந்திக் கல்வியும். இதற்க்கு அடிப்படை காரணம் என்ன?? பெரும்பாலன அரசியல் வாதிகள் எதுவுமே பேசுவதில்லை. அதையும் மீறிப்பேசுபவர்கள் இப்படியான சந்தர்ப்பவாதிகளால் எதிர்க்கப்படுகின்றனர். ஏன் தமிழகத்தின் மிகப் பெரும் மூதறிஞர் என்று போற்றப்படம் கலைஞரின் உறவினரான் கலாநிதி மாறனில் தொலைக்காட்சியின் பெயர் என்ன?? சண் ரீ.வி. அதை சு10ரியன் தொலைக் காட்சி என்று வைத்தால் என்ன? இப்படி பலபல உதாரணங்களைச் சொல்லாலம். அவர்கள் கதைப்பதை நாம் கணக்கெடுக்கத்தேவையில்லை. ஆனால் நிச்சயம் தமிழக மக்கள் இதை ஆரயவேண்டும் இப்படியான சந்தர்ப்பவாதிகள் அரசியலில் இறங்கும் கனவை அடீயோடு இல்லாமல் செய்ய வேண்டும்.. நன்றி நேசமுடன் நிதர்சன் - Jude - 01-31-2005 Mathuran Wrote:வணக்கம், Aalavanthan Wrote:வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா? ராமதாஸின் பெயர் தொடங்குவதற்கேற்ற நல்ல புள்ளிதான். இல்லையா மதுரன்? - Mathuran - 01-31-2005 Jude Wrote:Mathuran Wrote:வணக்கம், வணக்கம், தாராளமாக தொடங்கி இருக்கலாம். என்ன அதர்க்குமுன் அவர்கள் திரைப்படம் என்னும் புள்ளியில் இருந்து தொடங்கி இருக்கின்றார்கள். எனவே அதில் இருந்து கீற தொடங்குவோம். நீங்கள் போடுவது புதிய புள்ளி அல்லவா ஜீட் அண்ணா? எனவே தமிழ் பாதுகாப்பு இயக்கம் போட்டுள்ள பழய புள்ளியில் இருந்து ஆரம்பிதால் ( மும்பை எக்ஸ் பிரஸ்ஸ்) தொடக்கம் சண்தொலைகாட்சி, ராமதாசு, ஜெயலலிதா, ஸ்டலின், ஜுட், சுரேஸ் ரமேஸ் என பல கரும்புள்ளிகளை அளித்து நல்ல தமிழ் புள்ளிகளை இணைக்கலாம். நீங்கள் யாவரும் தயாரோ இதற்கு. அப்படியாயின். நாமும் தயார். இவைகள் தமிழ் பெயர்கள் அல்ல இவைகள் சமஸ்கிருத பெயர்கள்: ஜெயலலிதா விஜயகாந்த் கமலகாசன் சாருகாசன் றஜனிகாந்த் சுந்தர் சுரெஷ் இராமதாஸ் மேற்கு நாட்டவர் பெயர்கள்: ஸ்டலின் ஜுட் ஜொன்சொன் பீற்றர் இவைகள் மத்திய கிழக்கு நாட்டவர் பெயர்கள்: முஸ்தப மொகமெட் ஜிப்ரன் இவைகள் தமிழ் பெயர்கள்: மகிழன் அறிவுமதி அறிவொளி கண்மனி பூங்குழல் பகலவன் அன்புடன் மதுரன் நாமும் சிறிது விழிப்படைவோமா? - nirmalan - 01-31-2005 இன்று தமிழ்நாட்டில் முக்கியமாக பேசப்படுகிற விடயம் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடுவது. தற்போது அது தொடர்பாக திரையுலகத்தினருக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சரும் திருவாய் மலர்ந்திருக்கிறார். மலர்ந்திருப்பதோடு மட்டுமல்லாது அதனை முன்னெடுக்கிற இராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இது திரையுலகத்தினருக்கு மிகவும் மகிழச்சியைக் கொடுத்திருக்கிறது. அதிலும் நடிகர் கமலஹாசன் முதல்வரை மிகவும் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த இடத்தில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் சற்று விழிப்படைந்து தூய தமிழ்த் திரைப்படங்களை எடுத்தால் தான் புலம்பெயர் நாடுகளில் வெளியிடலாம் என்று ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியாதா? நாம் தமிழ் சினிமாவை புறக்கணிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். கடைசி இப்படியான அழுத்தங்களையாவது நாம் பிரயோகித்து புலம்பெயர் தமிழர்களின் பலத்தை தமிழ் சினிமா உலகத்தினருக்கு காட்டலாம் இல்லையா? தூய தமிழ்ப் பெயர் இட வேண்டும் என்று இராமதாஸ் மற்றும் திருமாளவன் குழுவினர் வேண்டுவது சரியாகவே தென்படுகிறது. கன்னடர்களுக்கு, ஹிந்திக்காரர்களுக்கு ஏன் சிங்களவர்களுக்கு இருக்கின்ற ஒரு சதவீத மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இல்லாமல் போகிறது? இந்த பார்வையில் ஏன் தமிழ் சினிமா சிந்திக்க முனையவில்லை? கன்னடர்கள் தமது மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே ஓட முடியும் என்கிறார்கள். இதனை பார்த்தாவது இவர்களுக்கு மொழிப்பற்று வந்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லையே. யாழ் கள நண்பர்களே இதில் நாம் எழுதுவதனால் எதுவும் நடந்துவிடாது என்று நினையாதீர்கள். நாம் சிறிது இதற்கு ஆதரவு கொடுத்தால் எதிர்காலத்தில் இதற்கு பெரும் ஆதரவு கிடைக்கும். <b>தமிழ் நீஷ பாஷை என்று கூறிய ஜெயேந்திரர் இன்று சிறையில் தமிழில் படம் எடு என்று கூறியவனுக்கு நேரடி எச்சரிக்கை! தமிழா நீ ஏன் இன்னும் விழிப்படையவில்லை?</b> - Thaya Jibbrahn - 01-31-2005 நிர்மல் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவர்கள் போல வெறும் கோசங்களால் எதையும் சாதிக்கமுடியாது. அத்துடன் அவர்கள் கோசம் போடுவதும் தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகவே. அது சரி நிர்மலன் எனக்கொரு கேள்வி? சினிமாவிற்கு பெயர் சு10ட்டி வளர்;க்கும் நிலையிலா நம் தமிழ் மொழி இருக்கின்றது. ?? புரியவில்லை. உலகத்திற்கே நாகரீகம் கற்றுத்தந்த மொழி நம்முடையதல்லவா? அதற்கான சான்றுகள் இன்னமும் இருக்கின்றன. மற்றையது மொழி வளர்வதற்கு சில நெகிழ்வுத் தன்மைகளும் அவசியம். கால வளர்ச்சியுடன் புதிதுபுதிதாக மொழியும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழில் இப்போது அந்த முயற்சிகள் ஆரோக்கியமாகவே உள்ளன. தமிழ் என்றைக்கும் சாகாது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அத்துடன் தமிழகததைப் பொறுத்த வரை அது ஒரு முதலாளித்துவ கோட்டை. அதற்குள் நடக்கும் சில காரியங்கள் எம்மை போன்றவர்களுக்கு நன்மை பெற்றுத்தருவதற்கானவை போல தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவையெல்லாம் அவர்கள் முதலாளித்துவ போட்டியின் சில வடிவங்கள். தமிழ் தமிழ் எள கோசம் போட்ட ராமதாசிற்கு இவ்வாறான முதல்வர் அறிக்னை தேவையானது தான். திரைப்படங்கள் ஆபாசமானவை மொழியை கெடுப்பவை என்பது உண்மையாகவே இருந்தாலும் இவர் எப்படி ஒரு பேட்டை ரவுடி போல சவால் விட முடியும். தமிழை வைத்து வயிறு வளர்க்க நினைக்கும் இவர்களுக்கு இது போன்ற அங்குசப் பிடிகள் அவசியம் தான் . நிர்மலன் ! நீங்கள் ஒனறுக்கம் யோசிக்க வேண்டாம். எங்கள் தேச விடுதலை எனும் பெரு விருட்சம் எங்கள் மொழிக்கும் சாகாவரம் கொடுக்கும் - இந்தியர்கள் போல கோசம் போடும் வேலைகளில் நீங்களும் இறங்கி விடாதீர்கள். - Nitharsan - 01-31-2005 இக்கருத்து - வேறோர் தலைப்பின் கீழ் கருத்தாடப்பட்டபோது தெரிவத்தேன். இப்போது இரு தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளதால் அக்கருத்தை திருத்தியுள்ளேன் நேசமுடன் நிதர்சன் - aathipan - 01-31-2005 சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சாதனம். ஆகவே அது எந்த மொழியில் தலைப்பிடப்படுகிறது என்பது பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை. கொடுத்த பணத்திற்கு மகிழ்விக்கிறதா ?என்று பார்த்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏன் ? என்றால் இவை வியாபாரத்திற்காக வெளிவரும் படங்கள். இதில் நாம் என்ன திருத்தம் செய்ய முடியும்?. ஒரு பாடப்புத்தகத்தை திருத்தி அமைக்கலாம் ஒரு மஞ்சள் பத்திரிகையில் தமிழ் சரியாக இல்லை என்று திருத்தி அமைத்து என்ன பயன்?. வேண்டுமானால் கலையம்சம் கொண்ட நல்ல தமிழ்ப்படங்களை ஊக்கப்படுத்தலாம். தலைப்பபைப்பற்றி சிந்திக்கிறோம். உள்ளே படத்தில் பாத்திரங்கள் 50 வீதத்திற்கும் மேல் ஆங்கிலத்தைக்கலந்து பேசுகிறனவே இதற்கு என்ன செய்வது? அரசியல் வாதிகளுக்கு (யாராக இருந்தாலும்) இது பகுதிநேர பொழுதுபோக்கு அவ்வளவுதான். எங்கள் பலத்தை இங்கே நிருப்பிக் வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்காக இல்லை என்றாலும் அவர்கள் படம் எடுத்துத்தான் செய்வார்கள். ஆங்கிலத்திலும் தலைப்பு வைக்கத்தான் செய்வார்கள். படம் நல்லதாக இருந்தால் எமது மக்கள் தேடிப்பிடித்துப்பார்ப்பார்கள். எதற்கு வீண் வம்பு. டாக்டர் இராமதாஸ் அவர்களின் வேலையை அவரே செய்யட்டும். - Nitharsan - 01-31-2005 Aalavanthan Wrote:ராமதாஸின் பெயர் தொடங்குவதற்கேற்ற நல்ல புள்ளிதான். இல்லையா மதுரன்? Quote:[b] நேசமுடன நிதர்சன் - kuruvikal - 01-31-2005 ஏங்க இனி எல்லாச் சினிமாப் படங்களையும் ஆங்கிலப் படம் என்று நினைச்சுப் பாருங்க...விசயம் முடிஞ்சுது...! நாங்க முன்னரே சொல்லிட்டம் சினிமா என்பது ரசிப்பதோடு கழிக்க வேண்டியதே அன்றி ருசிக்க வேண்டிய ஒன்றல்ல...! அதுவும் தமிழ்நாட்டில் மொழிக்கலப்பு என்பது வரையறை இல்லாமல் நிகழ்ந்துவரும் போது அதைச் சினிமா உள்வாங்காது என்று எதிர்பார்ப்பதும் அதைத்தடுக்கக் கோரிக்கைவிடுவதும் வெறும் செய்திகளுக்கு விளம்பரத்துக்கு உதவலாம் செயலுருப் பெற உதவாது...! தாங்கள் ஆங்கில படித்து ஆங்கில அறிவோடு இருப்பதால்தான் உலகெங்கும் செல்வாகுச் செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்படுவதாக தமிழக இளைஞர்களும் யுவதிகளும் மார்தட்டும் போது நாம் மட்டும் ஏன் அவர்களின் சினிமாவுக்காக கவலைப்பட வேண்டும்...! அவர்களே அதை ஆதரிக்கும் போது நாம் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்...! அப்படி எதிர்ப்பதால் அவர்கள் எங்களை மொழி வெறியர்கள் என்றுதான் பார்க்கின்றனர்....! தங்களுக்கு சர்வ மொழியும் சம்மதமாம்...இதற்கு நீங்க என்ன சொல்லுறீங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathan - 01-31-2005 உண்மைதான், இந்த தமிழில் படத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்று எழும் கோசம் தமிஔழை வாழ வைப்பதற்காக அல்ல, தமது அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் தமது இருப்பை தக்க வைக்கவுமே, - shiyam - 01-31-2005 இந்த தமிழில் படத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்று எழும் கோசம் தமிஔழை வாழ வைப்பதற்காக அல்ல தமிழ் ஒன்றும் இப்ப பிறந்த குழந்தையில்லை அதை வளர்க்க தமிழின் பெயரை சொல்லி மற்றவர்கள் வயிறு வளர்க்காமல் இருந்தாலே போதும்[/quote] - yarlmohan - 02-01-2005 Nitharsan Wrote:இப்போது இன்னுமொரு தலைப்பில் இவ்விடையம் கருத்தாடப்படுகிறது.இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது - Mathuran - 02-01-2005 வணக்கம், நண்பர்கள் போல கயவர்கள் ஐயன் வள்ளுவன் சொன்னதனை, திருமாவள்வன், சொன்னவைதான் இப்பொழுதும் ஞாபகத்துக்கு வருகின்றது. நீங்கள் யாவரும் நன்றாக கவனித்துப்பாருங்கள். இங்கு உங்களுக்கு இருக்ககூடிய அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு காலுக்குமேல் கால் போட்டுக் கொண்டு உங்கள் நாக்குகள் எவ்வாறெல்லாம் புறள்கின்றதோ அவ்வாறு பேசிக்க்கொல்ல முடியும். திரை என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் அவ்வள்வுதான், என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு இருந்துவிடுவீர்கள். அனால் அதன் தாக்கம் புரியாத குழந்தைகள் அல்லர் நீங்கள். வேண்டும் என்றே நித்திரை போல் நடிக்கின்ற உங்களிடம் நிச்சயமாய் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அந்த திரைப்படத்துறையிடம் இருந்து தமிழை மீட்டெடுக்க திருமாவிற்கும் தெரியும், தமிழ் குடிதாங்கிக்கும் தெரியும். நீங்கள் தயவு செய்து உதவி புரியாவிடினும் உபத்திரவம் புரியாமல் இருத்தல் நன்று. உங்களை என்னவென்று சொல்லுவது. தமிழ் எதிர்ப்பு ஊடகங்களில் வரும் கட்டுரைகளை படித்து இப்படியான சிறுபிள்ளை தனமான. இந்திய அரசியல் வாதிகள் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரையும் சிறுமைப்படுத்தி சொல்லுகின்றீர்களே, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினரை கேவலப்படுத்தும் அற்பத்தனமான காரியங்களை செய்யாதீர்கள். காலத்தின் தேவை அறிந்து செயல் படவேண்டும். என்ன செய்வது? தமிழன் திரிசாவின் இடுப்பை பார்பதில், தமிழ் அன்னையையே மறந்துவிடுகின்றான். அற்பத்தனங்களுக்காக எம் மாவீரர்கள் உயிர்கொடுத்து காத்த எம் ஈழ்த்தாயயும் காட்டிகொடுக்கிறான். ஜெயலலிதா சொல்வது இவனுக்கு வேதமோ? தமிழ்குடிதாங்கி சொல்வது இவனுக்கு சாபமோ? கமலகாசனுக்காய் உயிரை கொடுப்பானோ? இல்லை கன்னித்தமிழ் அன்னை தனை மீட்டு எடுப்பானோ? அன்புடன் மதுரன் - Mathuran - 02-01-2005 Mathuran Wrote:வணக்கம், - Mathuran - 02-01-2005 Thaya Jibbrahn Wrote:நிர்மல் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவர்கள் போல வெறும் கோசங்களால் எதையும் சாதிக்கமுடியாது. அத்துடன் அவர்கள் கோசம் போடுவதும் தங்கள் தங்கள் சுயநலன்களுக்காகவே. அது சரி நிர்மலன் எனக்கொரு கேள்வி? சினிமாவிற்கு பெயர் சு10ட்டி வளர்;க்கும் நிலையிலா நம் தமிழ் மொழி இருக்கின்றது. ?? புரியவில்லை. உலகத்திற்கே நாகரீகம் கற்றுத்தந்த மொழி நம்முடையதல்லவா? அதற்கான சான்றுகள் இன்னமும் இருக்கின்றன. மற்றையது மொழி வளர்வதற்கு சில நெகிழ்வுத் தன்மைகளும் அவசியம். கால வளர்ச்சியுடன் புதிதுபுதிதாக மொழியும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழில் இப்போது அந்த முயற்சிகள் ஆரோக்கியமாகவே உள்ளன. தமிழ் என்றைக்கும் சாகாது. வணக்கம், கன்னடத்தில் கன்னட அரசியல் வாதிகளும் ராஜ்குமார் ரசிகர் மன்றங்களும் பேட்டை ரவுடிகள் போல் செய்வது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ? கன்னடத்தில் தமிழ் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்த பின் சில வாரங்கள் களித்தே பிறமொழி திரைப்படங்கள் திரையிடப்பட முடியும் என சொன்னபோது. தொலுங்கு நடிகர்கள் அடுத்த நாட்களிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனால் இன்று திருமாவும் தமிழ்குடிதாங்கி ஐயாவும் திரைபடத்தின் பெயரை மாற்ற சொன்னதும், தமிழ் திரைப்படதுறையினருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்ததுவோ? எங்கே இந்த கோபத்தை கன்னட திரையினர் மீது காட்டுவீர்களா? யாரையா பேட்டை ரௌடி? தமிழ்திரை திரையிட தடை கர்னாடகாவில் வந்தபொழுது, ரமேஸ் அரவிந்துடன் நட்பை பரிமாறிகொண்ட கமலகாசனா? இல்லை தமிழ்குடிதாங்கி ஐயா வா? அன்புடன் மதுரன் - Nitharsan - 02-01-2005 இங்கு கரத்தாடுபவர்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் திரைப்படத்திற்கு தமிழ் பெயரை வைப்பதை விரம்புகின்றீர்களா? அப்படியாhயிய் விஜயகாந் சொன்னதிற்க்கு ஆதரவு தருகின்றீர்களா? இல்லையேல் நீங்கள் அதை எதிர்க்கின்றீர்கள் ஆனால் ராமதாசும் திருமாவளவனும் அரசியல் ஆதாயத்திற்காக இதை முன்வைக்கின்றார்கள் என்று சொல்கின்றீர்களா? சினிமா ஒரு பொழுது போக்கு ஆனால் நீங்கள் ஒன்றை மறந்த விட்டீர்கள் அந்த சினிமா ரசிகர்களுக்குள் புகுத்தும் நஞ்சை. தமிழ் நாட்டில் ஆங்கிலத்தை விரும்பிப் படிக்கின்றனர் என்றால் அதற்க்கு காரணம் என்ன? தமிழ் நாட்டு அரசின் பாடசாலைகளை விட தனியார் ஆங்கிலப் பாடசாலைகளே இன்று தமிழ் நாட்டில் அதிகம். இதற்க்கு அனுமதியளித்தது வேறு யாருமல்ல முன்னாள் கவாச்சி நடிகையும் இன்னாள் கள்ள முதல்வருமான ஜெயலாலிதா. அவருக்கும் தமிழுணர்விற்க்கும் சம்பந்தமே இல்லை காரணம் அவர் தமிழரல்ல அவரும் ஒரு கன்னடத்தி. இவரது ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் தமிழுணர்வு மழுங்கடிக்கப்பட்டது எனலாம். திருமாவளவனுக்கு இயற்கையாகவே தமிழ் உணர்வு உண்டு என்பது ஈழத்தமிழர்களுக்கு தெரியாது இருப்பின் நான் என்ன செய்ய ராமதாசு அரசியல் பேசுபவாராக இருப்பினும் அவர் ஓர் நல்ல அரசியல் வாதி. தமிழ் உணர்வாளர் விஜயகாந் போல சந்தர்ப்பவாதியல்ல. சினிமா அரசியலை நிஜத்தில் காட்ட முனையும் விஜயகாந் போன்றவர்களுக்கும் அதே பாணியில் ஆட்சி நடத்தும் ஜெயாவிற்க்கும் ராமதாசு திருமாவளவன் போன்றவர்களின் கோரிக்கை விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கும். இரும்பினும் இவர்களது ஆரம்பம் இளைஞர்களை விழிப்படைய வைக்குமாயின் தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் சினிமா என்ற பிணி தொலையும் என்பதில் ஐயமில்லை நேசமுடன் நிதர்சன் - anpagam - 02-02-2005 ராமதாஸை திட்டிய ஜெவுக்கு கமல் நன்றி! சென்னை: தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ் திருமாவளவன் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரி வரும் பாமக நிறுவனர் ராமதாஸும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரையும்இ எஸ்.ஜே. சூர்யாவின் பி.எப் படப் பெயரையும் தமிழில் மாற்றாவிட்டால் படத்தை ஓட விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளனர். இந்த இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததோடு படங்களை ஓட விடாமல் தடுக்க முற்பட்டால் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடவே திமுக தலைவர் கருணாநிதிக்கும் டோஸ் விட்டார். ராமதாஸ் திருமாவளவன் ஆகியோரை கண்டித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவு கூட அரசியல் தெரியாது. அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம் அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் கமல். ஏற்கனவே சண்டியர் பட டைட்டில் தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியால் பிரச்சனை எழுந்தபோது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை கேட்டார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு படத்தின் பெயரையும் மாற்றினார். ராமதாசுக்கு பாஜக கண்டனம்: இதற்கிடையே ராமதாஸ் திருமாவளவனுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழ்த் திரையுலகம் நொடிந்து போயுள்ளது. இந் நிலையில் அரசியல்வாதிகள் தலையீடு கலைத் துறையின் வளர்ச்சிக்கு உதவாது. இது கண்டனத்துக்குரியது. திரைத் தொழிலை நம்பியிருக்கும் ஏராளமான குடும்பத்தினரின் வாழ்க்கையை சீரழிக்க முயலக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் படங்களைத் தடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறியிருக்கிறார். கலைத் துறையினர் சுதந்திரமாக படம் எடுப்பதையும் தயாரிப்பதையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பது பணத்தைப் போட்டு முதலீடு செய்பவர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடக் கூடாது. முன்பு தாதாக்களின் பிடியில் சிக்கி மும்பை திரையுலகம் தவித்தது. அதுபோல அரசியல்வாதிகளின் கையில் சிக்கி தமிழ் திரையுலகம் சிக்க சீரழிய அனுமதிக்கக் கூடாது. சட்டத்தைக் கையில் எடுக்க ராமதாஸ் திருமாவளவனுக்கு அதிகாரம் இல்லை என்றார். கோடம்பாக்கத்தில் சில படங்களுக்கு ராதாகிருஷ்ணனும் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் லீக் கண்டனம்: அதே போல தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூது அளித்த பேட்டியில்இ ராமதாஸ் திருமாவளவன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம். ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் மொழி கெட்டுப் போய் விடாது. வியாபாரத்துக்காகத்தான் அவ்வாறு பெயர் வைக்கிறார்கள். இதை ¬முடக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார். ----------------------------------------------------------------------------------- ஜனவரி 31 2005 ராமதாஸின் பெயர் "தமிழ்க் குடிதாங்கி": திருமாவளவன் சூட்டினார்! சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நாங்கள் 'தமிழ்க் குடிதாங்கி' என்றுதான் அழைக்கிறோம். அது¬முழுமையான தமிழ் பெயர் தான் என திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து ராமதாஸ்இ திருமாவளவன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திரைப்படங்களை திரையிடுவதை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் ராமதாஸ் என்ற பெயரே தமிழ்ப் பெயர் கிடையாதே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந் நிலையில் திருமாவளவன் இது குறித்துக் கூறுகையில் தமிழ்நாட்டில் டாக்டர் ராமதாஸை யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. மருத்துவர் அய்யா என்றுதான் அழைக்கிறார்கள். நாங்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) 'தமிழ்க் குடிதாங்கி' என்றுதான் அழைக்கிறோம். இது முழுமையான தமிழ் பெயர் ஆகும். பாமகவினரும் இனிமேல் தமிழ்க் குடிதாங்கி என்றுதான் ராமதாஸை அழைக்க வேண்டும். இந்தியாவில் மொழிக்காக உயிரிழந்த வரலாறு கொண்ட ஒரே இனம் தமிழர் இனம்தான். திரையுலகினர் பூச்சாண்டி காட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களது வேண்டுகோளை மீறி பிற மொழி பெயர் சூட்டினாலோ தமிழ் சீரழிவு காட்சிகளை அமைத்துப் படம் எடுத்தாலோ உயிரை விலையாகக் கொடுத்தாவது தடுப்போம் என்றார். ------------------------------------------------------------------------------- பிப்ரவரி 01 2005 தமிழில் படப் பெயர்: ஜெவுக்கு ராமதாஸ் பதில் சென்னை: தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று ஜெயலலிதா சட்டம் போடும் நிலை வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருமாவளவனும் ராமதாஸும் வற்புறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கமல்ஹாசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திரைப்படங்களை தடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார். ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று திருமாவளவன் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். இந் நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடைகள் வர்த்தக நிறுவனங்களில் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகøள் தமிழில் எழுதக் கோரி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல கட்ட போராட்டத்தை சமீபத்தில் நடத்தினோம். அந்த சமயத்தில் திடீரென 1983லிலும் 84லிலும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சுட்டிக் காட்டி அந்த உத்தரவுகளின்படி தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டதாக செய்தி வந்தது. திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லவோ ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்று இன்றைக்கு முதல்வர் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அன்றைக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை. நாங்கள் இப்படித்தான் எழுதி வைப்போம் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை எழுதுவோம் என்று யாரும் சொல்லவில்லை குதர்க்கம் பேசவில்லை. அன்று எம்.ஜி.ஆர். எந்த உணர்வுடன் இந்த உத்தரவுகளைப் போட்டாரோ அதே உணர்வுடன்தான் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று கோரினோம். எங்களது போராட்டத்தை ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் என விஷமப் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அண்ணாவின் கொள்கைக்கு எதிரானது என்று முதல்வரும் கூறியுள்ளார். அண்ணாவின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்றாலு தமிழ் ஆட்சி மொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி வந்தார். எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தவர்தான் ஜெயலலிதா. இப்போது பிரச்சினையைத் திசை திருப்புகிறார். ஆளுநர் உரையை தமிழில் படிக்கவே மாட்டோம்என்று சொன்னார்கள். இப்போது மாற்றிக் கொண்டு படித்துள்ளார்கள். அதுபோலவே தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று கூறும் இவர்களே அதற்காக ஒரு சட்டம் கொண்டு வரும் நாளும் விரைவில் வரும் என்று கூறியுள்ளார் ராமதாஸ். ------------------------------------------------------------------------------------------------ பிப்ரவரி 01 2005 வேட்டி கட்டி ரவிக்கை அணிவாரா கமல்? திருமா சென்னை: தமிழ் உணர்வாளர்களின் எச்சரிக்கையை மீறி மும்பை எக்ஸ்பிரஸ் பிஎப் ஆகிய படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தாவது அதைத் தடுப்போம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் எச்சரித்துள்ளது. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பாமக தலைவர் ஜிகே மணி விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்இ மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் உடனிருந்தார். நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: வரும் மார்ச் 12ம் தேதி முதல் தமிழுக்கான எங்களது மூன்றாவது போராட்டத்தை நடத்த இருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் ஜெயலலிதா எங்கள் போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி. நாங்கள் திரைத்துறையை எதிர்த்து போராடுவதாக சித்தரிப்பது வேதனையாக உள்ளது. எங்கள் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டில் 80 படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டன. ஆகவே திரைத்துறையில் 95 சதவீதம் பேர் எங்களை ஆதரிக்கின்றனர். இதனால் பயந்து போன ஜெயலலிதா அவர்கள் எங்களை திரைத்துறையினருக்கு எதிரானவர்கள் போல காட்டி அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி விட முயல்கிறார். எங்கள் வேண்டுகோளை மீறி கமல்ஹாசன் அவர்கள் தனது படத்துக்கு பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் பெயர் வைப்பேன் என்று அறிவித்துள்ளார். இது வேட்டி கட்டிக் கொண்டு ரவிக்கை போடுவது மாதிரி. இயக்குனர் எஸ்ஜே சூர்யா மிகவும் ஆணவத்துடனும் திமிருடனும் என் விருப்பப்படி தான் பெயர் வைப்பேன் அது தவறு என்றால் பார்ப்பவர்களின் பார்வையில் தான் கோளாறு என்று திமிர்ப் பேச்சு பேசியிருக்கிறார். தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள் எச்சரிக்கையை மீறி இந்தப் படங்களை வெளியிட்டால் என்ன விலை கொடுத்தும் தடுப்போம். எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தமிழ் உணர்வு எங்கள் ரத்தத்தில் கலந்தது. யாரையும் மிரட்டவோ பேரம் பேசவோ இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. யாரிடமும் தம்பிடி காசு கூட நாங்கள் நன்கொடை வாங்கியதில்லை. கலாச்சார சீர்கேட்டையே எதிர்க்கிறோம். எஸ்ஜே சூர்யாவிடம் படம் காம வக்கிரம் பிடித்ததாக உள்ளது. கேவலமாக அருவெருப்பாக உள்ளது. பி.எப். என்ற சொல்லே எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் போட்டோக்கள் கூட 'நீல'மாகத் தான் உள்ளன. தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலை தமிழ் மண்ணை வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம். பம்பாய் தான் பழைய பெயர். ஆனால் பால் தாக்கரேவுக்கு பயந்து அதை மும்பை என்று கமல் எடுத்து வருகிறார். தாக்கரேவுக்கு பயப்படும் கமல் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மறுப்பது ஏன்? தமிழ் உணர்வுகளையும்இ மரபுகளையும் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது. தமிழர்களை ஜாதியின் பெயரால் எப்படி பிரித்தாளுகிறார்கள் என்பதற்கு ஐயா படம் நல்ல உதாரணம். அந்தப் படத்தை பார்க்குமாறு எங்கள் தொண்டர்களிடம் கூறியிருக்கிறோம். உள்ளக் கடத்தல் படத்தை நாங்கள் பார்க்க இருக்கிறோம். தமிழுக்காகத் தான் போராட்டமே தவிர எந்த மொழிக்கும் எதிராக அல்ல. தொன்மையான மொழி நம் மொழி. அந்தப் பெருமையை உணர்ந்து அதைக் காக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தொலைக்காட்சிகளுக்கும் வைத்துள்ளோம். எந்தத் தொலைக்காட்சிக்கும் நாங்கள் பயந்து ஓட மாட்டோம் என்றனர். சேதுராமன் அறிக்கை: முன்னதாக சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராமதாசின் பெயரில் வட மொழி கலப்பு ('தாஸ்') இருப்பதாக தமிழ் பண்டித்தியம் மிக்கவர் போல வாய் நீளம் காட்டும் ஜெயலலிதாவின் பெயரில் முன் எழுத்தான 'ஜெய' என்பது வடமொழி தானே? அதை நீக்க ஜெயலலிதா தயாரா? தமிழர்கள் எழுச்சி பெற்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதை கண்டு அஞ்சி ஜெயலலிதா புலம்புகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. அதிமுகவுடன் கூட்டு சேர ஒரு கட்சியும் தயாராக இல்லை. இதனால் சினிமாகாரர்களையாவது பிடித்து வைத்துக் கொள்வோம் என்ற சுய நல நோக்கத்துடன் தமிழ் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பவர்கள் சீறிப் பாய்கிறார் ஜெயலலிதா. தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்வோம் என்று கூறப்பட்டிருந்தது. தமிழப் பாதுகாப்பு இயக்கதினருக்கு எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நேற்று கமல் வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவு கூட அரசியல் தெரியாது. அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம் அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. ------------------------------------------------------------------------------- நன்றி: thatstamil |