02-01-2005, 11:29 PM
குருவியண்ணா ஒரு சட்டத்தைப் பிரகடனப்படுத்துங்கள். அதை முதலில் நடைமுறைக்கும் கொண்டு வாருங்கள். ஆண்களும் தாலி அணிய வேண்டும் ää சந்தனம் நெற்றியில் இட வேண்டும் ää காலுக்கு மெட்டிமாட்ட வேண்டும் ää குளிரிலும் வேட்டி அணிய வேண்டும்.
அதென்னண்ணா பெண் மட்டும் நீங்கள் சொல்லும் தாலியை சுமக்க வேண்டும் ?
பெண்ணுக்கு கணவனின் நினைவுப்பரிசாக தாலியென்றால் ää நீங்கள் ஆண்களெல்லாம் உங்கள் மனைவிகளின் நினைவுப்பரிசாக எதைச் சுமக்கிறீர்கள் ?
இந்திராகாந்தி உலகமெல்லாம் சேலைகட்டித்திரிந்தா ஏற்றுக்கொள்கிறேன். மகாத்மாகாந்தி கட்டித்திரிந்த வேட்டியை யாரண்ணா கட்டுகிறீர்கள் ? உங்களுக்கு அதுவென்றால் இதுவென்றும் இதுவென்றால் அதுவென்றும் வாதிடும் திறமையுள்ளது அதற்காக பெண்ணின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையெல்லாம் நீங்கள் சட்டமிடவோ ää இதுதான் தமிழர் பாரம்பரியம் இதைப்பெண்கள் செய்தால்தான் அடையாளம் காக்கப்படும் என்று சட்டம் வகுக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது.
தாலத்தால் (பலையோலையால்) ஒரு காதலன் தன்காதலிக்கு முன்னொருகாலத்தில் (தாலியல்ல) ஆபரணம் ஒன்று செய்து போட்டு அழகுபார்த்தானாம் அதுதான் காலப்போக்கில் நம்மவர்களால் மஞ்சளிலிருந்து ää மஞ்சள் கயிற்றிலிருந்து தற்போது உங்கைளப்போன்ற ஆண்கள் தங்கள் நிறையின் அளவுக்கு தாலிசெய்வித்து மனைவிக்குக்கட்டி அழகுபார்க்கவில்லை அந்தப்பெண்களுக்கு கழுத்துவலியையல்லவா கொடுக்கிறீர்கள்.
திருமண வைபமொன்றுக்குச் செல்வதானால் ஆண்கள் கோட் - சு10ட் ஆனால் அவனுடைய மனைவி முழுச்சேலையும் ää மகள் அரைதாவணியும் உடுத்த வேணும்.
தற்காலத்துப் பெண்பிள்ளைகள் தங்கத்தை அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அப்பாக்களின் கௌவரத்தை காட்டுவதற்காக பிரியமில்லாத பொன்னைக்கூட போட்டுத்தொலைக்க வேண்டிய சாபம் இக்காலப்பெண்பிள்ளைகளுக்குக்கூட.
மகள் பவுண்போடாவிட்டால் அம்மாவின் வளர்ப்பில் குறைசொல்லும் அப்பாக்கள் உங்களைப்போன்ற ஆண்கள்தான்.
மகளின் கணவன் இக்கால இளைஞனாக தன்மனைவியுடன் உங்கள் கிடுகுவேலிகளை விட்டு வெளியில் வர அனுமதித்தாலும் அந்த இளைஞனின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஓடித்திரியும் அப்பாமாரும் ää அண்ணன்மாரும் உங்களைப்போன்று இருக்கிறார்கள்.
இப்படியான குறிப்பிட்ட சிலரை வைத்துக்கொண்டு ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் என்று உங்களைப்போல் தான்சார்ந்த தவறைமறைக்க நீங்கள் போடும் நடிப்பை நானும் செய்யவில்லை.
காலநிலைகளுக்கேற்ற உடைகள் கட்டாயம் அணியப்பட வேண்டும். உங்கள் கட்டுப்பெட்டித்தனங்களை உங்கள் மகளுக்கும் மனைவிக்கும் நடைமுறைப்படுத்துங்கள். என்ன செய்வது அவர்கள் தங்கள் விதியென்று அழட்டும். ஆனால் உங்கள் வரட்டுவாதச் சிந்தனைக்கு எல்லோரையும் வாவென்று அழைக்காதீர்கள். உங்களஇ மனைவி மகள் ஆனாலும் அவர்களம் பெண்கள்தான் ஆனால் உங்களது சிந்தனை வரட்சிக்கு அவர்கள் உங்களுக்குப்பலியாகும் சாபத்தை என்ன செய்வது.

:::: . ( - )::::