02-01-2005, 04:18 PM
sinnachi Wrote:பிள்ளை உந்த ஆம்பிளையள் தானம் முந்தி மெட்டிபோட்டவையாம். அது போட்டதாலை இவையள் கலியாணம் செய்தவையென்டு மற்றவைக்கு தெரியுது என்று நைசாக கழட்டிவிட்டுட்டினம். போட்டிருந்தால் அவை ஏமாற்றி வேறு கலியாணம் செய்ய முடியாதெல்லோ?.
பிள்ளை உந்த ஆம்பிளையள் கலாச்சாரங்களுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு வேட்டியுடன் வரலாம்தானே?
அவை கட்டமாட்டினம் கோட்டு சூட்டுப் பொட்டுக்கோண்டுதான் வருவினம். காலம் காலமாக பிள்ளை எங்களை ஏமாத்திக் கொண்டிருக்கினம். எத்தனை ஆம்பிளைகள் ஒரு பெண்ணுடன் திருப்தி படுகினம் தங்களுடைய மனைவி கற்புடன் இருக்கவேணும் ஆனால் தாங்கள் அடுத்தவனுடைய மனைவியை மேயவேணும். உங்கை இலண்டனிலை ஒரு ஐயர் பெண்ணை வில்லங்கப்படுத்தி இப்ப உள்ளே இருக்கிறாராம். அவருக்கு மனிசியும் இருக்கு
ஆம்பிளையள் சேறு கண்ட இடத்திலை மிரிச்சு தண்ணி காணுகிற இடத்திலை கழுவுகிறவை பிள்ளை. அவையள் தங்கடை சார்பாகத்தான் கதைப்பினம்
சின்னாச்சி நீங்க எல்லாம் அம்பிளையளையும் இப்படிச் சொல்ல முடியாது கற்பு என்பது ஒரு நெறி...அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...நெறி தவறினால் தண்டனை என்னவோ அதுதான் விதிப்பு...நீங்க ஈழத்தில இருக்கேக்க..உப்படி நெறி தவறின ஆம்பிளையளுக்கும் பொம்பிளையளுக்கும் மரணதண்டனை கொடுத்தது அறிஞ்சிருப்பியள் தானே...அதுதான் சமூகம் நெறி தவறாமல் இருக்கச் சரியான வழி...! அதற்காக தாலி அவமானம் பொட்டு அவமானம் என்பதெல்லாம் பம்மாத்து....அதன் தார்ப்பரியம் விளங்கின ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் மதிப்பும் புரியும்...புரியாததுகளுக்குப் புரிய வையுங்க...! ஆம்பிளையளுக்கும் ஆசை இருக்கும் தன் மனைவிதர தான் அணிய...என்ன கொடுக்கிறாங்க இல்லையே....அது யார் குற்றம் சொல்லுங்க...கொடுத்தும் அணியல்ல என்றா தட்டிக் கேளுங்க....! அதைவிட்டுட்டு எல்லாம் ஆம்பிளையளையும் ஒரே தட்டில் வைச்சுப் பாக்காதேங்க.. இப்ப சின்னப்பு குடிக்கிறது தப்பு...அதை நீங்க சமாளிச்சுக்கிறீங்க தானே...இப்படித்தான் பெண்கள் தங்கள் தலையிலே தாங்களே மண்வாரிப் போட்டுக்கிறாங்க...! நாளைக்கு அப்பு கொஞ்சம் ஓவரா அடிச்சுட்டு புத்தி தளம்பி உளங்க மின்னிட்டா...அது அவர் தப்பு மட்டுமல்ல உங்க தப்பும் தான்...அதை வளர்விட்டது நீங்க தானே....! முளையிலையே ஏன் கிள்ளி எறியாமல் வளரவிட்டீங்க....! இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

