02-01-2005, 11:42 AM
shiyam Wrote:தமிழனின் தனித்துவ அடையாளங்களில் பொட்டும் தாலியும் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நக புச்சும் இதழ் கண்மை எல்லாம் ஊரான் சொத்தல்ல எமது பாரம்பரிய பெண்களின் அலங்கார வகையில் அடங்குகிறது இன்று இவை மேலை நாட்டவரால் நவீனத்துவ பட்டிருக்கின்றன அவ்வளவுதான்
ஒமோம் இதுவும் சொல்லுவீங்க இன்னும் சொல்லுவீங...உங்கட பூஞ்சு கஸ்தூரி மஞ்சள் தான்...அதை இப்பவும் பூசுறீங்களோ...கைப்பூச்சு மருதாணிதான் அதை இப்பவும் பூசுறீங்களோ...தலைப்பூச்சு கறிவேப்பிலை எண்ணெய்தான்...அதைத்தான் இப்பவும் பூசிறீங்களோ...நீங்க இப்ப பூசுறதுகளுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல...! அனைத்தும் அசேதன, சேதனச் சேர்வைகளால் ஆனவை...சூழல் மாசாகிறத்திற்கு (ஓசோன் சிதைவுக்கு) முக்கிய காரணமான CFC யை தாராளமாக வெளியேற்றிய பெருமைக்குரியவை...!
தாலி அவமானச் சின்னமல்ல...அடையாளச் சின்னம்...கணவனை நினைவுபடுத்தும் சின்னம்...அவன் தன் கூடவே எப்போதும் இருக்கிறான் என்று நினைவுபடுத்தும் சின்னம்..மேற்கில் கூட ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு...காதலிக்கு நெக்கிளஸ் அணிவிப்பார்கள்...அவர்கள் அதை அவர்களின் அன்புப்பரிசாக அடையாளச் சின்னமாக பாவித்து அணிவார்கள்...மோதிரம் அணிவார்கள்...ஆக நீங்க தான் இப்போ புதிசா தாலி அவமானச் சின்னம் தடை எங்கிறீர்கள்...! இருக்கும் இருக்கும் கணவன் இருக்கத்தக்கதாகவே இன்னொருத்தனோட நெருங்கிப் பழக அது தடையாத்தான் இருக்கும்...அவன் கேட்பான் இல்லா இது யாருடைய என்று....இல்ல இது என்ன என்று... அப்ப மேலும் சில பொய்கள் சொல்லிச் சமாளிக்க வேண்டிய அவஸ்தை போலும்...குறிப்பாக பெண் விடுதலை பேசுவோர் இரண்டை முதலில் விட்டெறியச் சொன்னனர்...ஒன்று பொட்டு... இரண்டாவது தாலி....இரண்டு பெண்களை அடையாளப்படுத்தும் சின்னங்கள்... அவற்றை விட்டெறிந்துவிட்டால் தங்கள் ஏமாற்று வித்தைகளுக்கு செளகரியம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்....! அதனால் நன்மை பெறும் ஆண்களும் அதற்கு கொடிபிடிக்கின்றனர்...! ஒரு பொட்டும் ஒரு தாலியும்...உங்களுக்கு என்ன செய்து போடும்.. அவையென்ன அவ்வளவு பாரமா...இல்ல அணிவதற்கு நேரமா எடுக்கும்...இல்ல அணிவதால் ஏதாவது உடல் நலப்பாதிப்பா அல்லது உள நலப்பாதிப்பா வருகிறது... வந்திருந்தால் எங்கள் பாட்டா பாட்டி அப்பா அம்மா எல்லாம் லூசுகளாக எல்லோ இருந்திருப்பர்....!
பொலீஸ்காரன் ஏன் சின்னம் அணிகிறான்...இராணுவ வீரன் ஏன் சின்னம் அணிகிறான்...புலிவீரன் ஏன் சின்னம் அணிகிறான்....கொடி வைத்திருக்கிறான்...அவமானத்துக்கல்ல...அடையாளத்துக்கு....அந்த வகையினதே இவையும்...ஆண்கள் கூட இப்போ திருமணத்தின் பின் கைமாறி மோதிரம் அணிவார்கள்...அது உலகெங்கும் தற்போதும் கூட பெண்களுக்கு ஒரு ஆண் பற்றிய அடையாளச் சின்னமாக விளங்குகிறது...எங்கள் ஆண்கள் மேலதிகமாக ஒன்றைக் கழுத்தில் மாட்டினால் கூடத் தவறில்லை....பாவம் மனைவி எனது அடையாளத்தைச் சுமக்கிறாளே என்று நீங்க கருதினால்...உண்மையான அன்புக்குரியவானாய் இருந்தால் அவள் அடையாளச் சின்னமாய் அவள் விரும்புவதை நீங்களும் அணிவீர்களே அன்றி...விட்டெறி என்று கோசம் போட மாட்டீர்கள்....! உங்கள் கோசங்களுக்குப் பின்னால் ஏதோ ரகசியக் காரணக்கள் இருக்கு...மற்றும் படி இவை வெற்றுக் கோஷங்கள்...!
அண்மையில் ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை சந்தித்து உரையாடிய போது தனது கணவன் இறந்து 20 வருடங்கள் ஆகியும் அவர் தந்த நெக்கிளசும் மோதிரமும் தன்னை எப்போதும் அவரின் நினைவோடையே இருக்க வைத்துவிட்டதாகக் கூறி அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டினார்...! நெக்கிளசையும் கொண்டு வந்து காட்டினார்...அவர் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த விதமே அவருக்கு அவர் கணவன் மீதிருந்த அன்பை அக்கறையை பாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது...!
இன்று என்ன நடக்கிறது... காதலர்கள்.. பாய் பிரண்ட் என்று திருமணத்தின் முன்னும் பின்னும் சுத்தும் கட்டாக்காலி நாய்களுக்கு (நாய்க்குக் கூட பட்டி கட்டிய சமூகம்) வக்காளத்து வாங்கிவிட்டு பெண் கற்பழிப்பு... பாலியல் துன்புறுத்தல்...கணவன் மோசக்காரன்..ஆண் ஆதிக்கம்...ஆண் வெறியன் என்று பட்டம் சூட்டி தங்கள் வக்கிரங்கள் தீர்த்துக்கொள்ள வழிதேடுகின்றனர்...! தாலி ஒரு சின்னமாய் மட்டுமன்றி ஒரு பெண்ணின் அலைபாயும் மனதை அவள் கணவனுக்கு நிகராய் இருந்து சீரிய பாதையில் ஒழுக்கம் நோக்கிய உயர்வாழ்வியல் கோலத்துக்கு வழிநடத்தும் வழிகாட்டியும் கூட....எங்களைக் கேட்டால் சொல்லுவம் பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கும் ஒன்றை கழுத்தில் மாட்டுங்கள்....அதற்காக தாலி ஒருபோதும் அவமானச் சின்னமாக இருந்ததில்லை...இருக்கப் போவதும் இல்லை.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

