02-01-2005, 04:14 AM
shiyam Wrote:kuruvikal Wrote:பொட்டும் சேலையும் பாதிப்பில்லாத விடயம்தான் நீர் சந்தண பொட்டுடனும் வேட்டியுடனுமா திரிகிறீர்??shiyam Wrote:Quote:சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது
குருவியாரோ நானும் உம்மை ஏதோ புது யுகத்தின் நவீன இறக்கை கட்டி பறக்கும் பதிய குருவி என நினைத்து ஏமாந்து விட்டேன் நீரும் பத்தோடு பதினொன்றாக பழைய குருவியா???hock:
இறக்கை கட்ட வேண்டியது பொட்டுக்கும் பூவுக்கும் அல்ல வேட்டுக்கும் சால்வைக்கும் அல்ல அறிவுக்கு...! பொட்டையும் பூவையும் வேட்டியையும் சால்வையும் கலற்றி எறிந்து விட்டதென்பது நவீனத்துவத்தின் சின்னமாகாது...! நவீனமாய்க் கற்றுத் தேறுவதே சிறந்தது... தேவையான பாதிப்பில்லா தனித்துவ அடையாளங்களை அறிவீனம் என்று தூக்கி வீசவது அறிவல்ல அறிவீனம்...! :wink:
சந்தனம் விபூதி சமயச் சின்னக்கள்...கோவிலுக்குப் போனால் சாள்சும் தான் பூசுறார் நாமும் தான் பூசுறம்...!
ஏன் கையுக்கு நகப்பூச்சும் வாய்க்கு இதழ்பூச்சும்...கண்ணுக்கு கண்மையும்...உங்க வீட்டுச் சொத்தா...ஊரான் சொத்துத்தானே...அவற்றை எப்படி உங்கடை ஆக்கினீங்கள்...???! அவையெல்லாம் உங்களுக்கு நாகரீகமாகப்பட உங்க வீட்டுப் பொட்டுமட்டும் அந்நியமாய்ப் படுகுதோ...???! வெள்ளைக்காரி வைச்சுக்காட்டிட்டா ஒட்டித்திரிவியளாக்கும்....நாகரிகம் அவை போதிச்சாத்தான் உங்களுக்கு விளங்குமென்றால்...நாளைக்கே நாலு மொடலைப் பிடிச்சு பொட்டு ஒட்டி அனுப்புறத்துற்கு கொஞ்ச டொலர் போதும்...செய்யுறம்...!
முதலில எதை எதைப் பின்னபற்ற வேணும்...எது எங்கட தனித்துவ அடையாளம்...அதைப் பின்பற்றுவதால் என்ன தீமை வரப்போகுது என்று ஆராய்ஞ்சிட்டு கதைக்கிறது நல்லது...உபயோகமானது...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: