08-16-2003, 08:27 AM
முத்தமிட்டால் படத்தில் விடுபட்ட காட்சி.சுஜாதா எழுதியது.
நல்லவேளை விடுபட்டது என்பது எனது கருத்து<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இதுதான் அந்த விடுபட்ட காட்சி பற்றி சுஜாதா எழுதியது
ஓரிரு எண்ணங்கள்
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்காக பல காட்சிகள் எழுதப்பட்டு பல்வேறு காரணங்களால் முக்கியமாக படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்டன. அவற்றில் எனக்கு முழுதும் திருப்தியளித்த காட்சி இது. படத்தில் கிளைமாக்சுக்கு மிக அருகில் இருந்ததால் படத்தின் வேகம் கருதி மனசில்லாமல் நீக்கினேன் என்று மணிரத்னம் சொன்னார். சினிமாவில் இந்த விபத்துகள் தவிர்க்க முடியாதவை. படம் பார்த்திருப்பவர்கள் இந்தக் காட்சி எங்கே வருவதற்காக எழுதப்பட்டது என்பதை சுலபமாக யூகிக்கலாம். படம் பார்க்காதவர்கள் சீன் அமைப்பைப் பற்றிய ஒரு எளிய பாடமாக இதைக் கொள்ளலாம்.
விக்ரமசிங்கேயும் அமுதாவும் தனியாக வீற்றிருக்கும்போது விக்ரம் அவளுக்கு உணவு ஸ்பூனிலிருந்து கொடுக்கிறார்.
அமுதா: அங்கிள் உங்களை ஒண்ணு கேக்கணும்.
விக்ரம் (நிமிர)
அமுதா: எதுக்காக இந்த சண்டை?
விக்ரம்: சண்டையா? எங்க சண்டை? அத்தை இங்க எங்கயாவது சண்டை நடக்குதா என்ன?
அமுதா: (அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க)
விக்ரம்: அமுதா சினிமாலதாம்மா சண்டை. அப்புறம் நீ அம்மாகூட போடற சண்டை. வேற என்ன சண்டை?
அமுதா: அங்கிள் அப்ப நான் பார்த்ததெல்லாம் பொய்யா? ஹெலிகாப்டர்இ குண்டுவெடிச்சதுஇ ஆர்மிக்காரங்க செக் பண்ணதுஇ ரைஃபிளை தூக்கிட்டு ஓடினது..
விக்ரம்: இதெல்லாம் ஒரு மாதிரி... ஒரு மாதிரி எக்சர்ஸைசம்மா.
அமுதா: ஜனங்கள் ஓடினது?
விக்ரம்: ஒருவேளை ஏதாவது சந்தைத் திருவிழா பார்க்க ஓடியிருக்கலாம்.
அமுதா: அன்னிக்குப் பார்க்ல அந்தப் பையன் வெடிச்சது.. அதுகூட எக்சர்ஸைசா?
விக்ரம் (மௌனம்)
அமுதா: இதெல்லாம் எங்க ஊர்ல இல்லை அங்கிள்.
விக்ரம்: உங்க ஊர்ல வேற மாதிரி சண்டைம்மா?
அமுதா: அங்கிள் ப்ளீஸ். பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு சொல்ல இஷ்டமில்லைன்னா.
விக்ரம்: (சுதாரித்து) சொல்றேம்மா என்ன தெரியணும்.
அமுதா: இந்தச் சண்டை எந்த நாட்டுக்கும் எந்த நாட்டுக்கும்...
விக்ரம்: ரெண்டு நாடு இல்லை. ஒருநாட்டின் ரெண்டு ஜனங்களுக்குள்ள. இதுக்கு சிவில் வார்னு பேரு.
அமுதா: யாரும் யாரும் போட்டுக்கறாங்க.
விக்ரம்: தமிழ் பேசறவங்களும் சிங்களா பேசறவங்களும்.
அமுதா: ஏன்? ஒருத்தர் சொல்றது ஒருத்தருக்கு புரியலையா?
விக்ரம்: யோசித்துப் பாத்தா அதான் காரணமோன்னு தோணுது. புரிஞ்சுக்க விரும்பலைன்னு கூட சொல்லலாம்.
அமுதா: தமிழர்களுக்கும் சிங்களாக்கும் என்ன வித்தியாசம்?
விக்ரம்: தமிளர்கள் இந்தியாவிலிருந்து வந்தவங்க.
அமுதா: சிங்களா?
விக்ரம்: அவங்களும் இந்தியாதான். கொஞ்சம் முன்னால வந்தாங்க. இப்ப ஒரு ரயில் வந்து நிக்கறது அதில் முன்னால போய் இடம் பிடிக்கிறதில்லையா.
அமுதா: ரெண்டு பேரும் ரயில்ல போறது.
விக்ரம்: வேணாம் எங்களுக்கு வேற ரயில் வேணும்கறாங்க.
அமுதா: யாரு?
விக்ரம்: தமிளங்க.
அமுதா: அதுக்கா அத்தனை பெரிய சண்டை. நீங்க சிங்களாவா?
விக்ரம்: ஆமாம்.
அமுதா: நான் தமிழ்?
விக்ரம்: ஆமாம்.
அமுதா: கையைக் காட்டுங்க (இருவர் கையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்) ரெண்டும் ஒரே கலர்தானே?
விக்ரம்: கைமட்டும் போதாதும்மா. மனசு ஒரே கலர்ல வேணும்மா.
அமுதா: போங்க அங்கிள். மனசுக்கு கலர் கிடையாது.
விக்ரம்: இருக்குமா! சிவப்புஇ பச்சைஇ மஞ்சள்இ காவிக்கலர்இ கருப்புஇ பழுப்புன்னு பலதும் தமிளு ஆளுங்க சம உரிமை வேணும்னு கேக்கறாங்க. எங்க ஆளுங்க நாங்கதான் அதிக எண்ணிக்கைங்கறாங்க.
அமுதா: அதில யாரு ரைட்டு யாரு தப்பு?
விக்ரம்: (ஆயாசத்துடன்) இந்த டார்ச்சர் கேஜிபி பெண்ணை யாராவது கூட்டிட்டு போங்களேன். இல்லைன்னா இங்க ஒரு கொரில்லா வார் நடக்கும்.
அமுதா: கொரில்லான்னா..? குரங்கா..?
விக்ரம்: ஒண்ணு செய்யறேன். நாளைக்கு காலை பொழுது விடிஞ்சதும் சந்திரிகாவுக்கு போன் பண்ணி அமுதான்னு ஒரு பெண் இருக்குது. அவளை ஒருநாள் ப்ரெசிடெண்டாக போடுங்க. சண்டை தீர்ந்துடும்னு சிபாரிசு பண்றேன்.
அமுதா: போங்க அங்கிள் கேலி பண்றீங்க.
விக்ரம்: நிசமாவே இந்த சண்டை எதுக்குன்னு எங்களுக்கெல்லாம் புரிலைம்மா.
விக்ரம்: ஒருநாள் நின்னுரும்மா.. நிக்கணும்.
நல்லவேளை விடுபட்டது என்பது எனது கருத்து<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இதுதான் அந்த விடுபட்ட காட்சி பற்றி சுஜாதா எழுதியது