01-31-2005, 05:54 PM
kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயா குருவி மேற்படி வாசகங்கள் நாங்கள் சொன்னதில்லை. நீங்களே திருவாய் மலர்ந்தது தான். அது தான் நான் சொன்னேன் .. நீங்கள் எழுதியவற்றை நீங்களே ஒட்டுமொத்தமாக வாசித்துப் பாருங்கள் என்று. நீங்கள் மேற்சொன்ன கருத்துக்கும் கடைசியாக சொல்ல வருவதற்கும் எவ்வளவு முரண்பாடுகள்
என்ன குருவி.. நீங்கள் பேசுவது என்ன என்பது உங்களுக்காவது புரிகிறதா? பெண்கள் உடலியல் ரீதியான பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பெண்களுக்கு சமஉரிமை என்பதெல்லாம் கோரக்கூடாது. உள்ளதை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்றீர்கள். இப்போது என்னவென்றால் எங்களுக்கு விளக்கம் போதவில்லை... நீங்கள் பெண்களுக்கு யாதார்த்த அடிப்படையில் உள்ளதை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். உண்மையில் எனக்கு விளக்கம் போதவில்லைத் தான்..... நீஙகள் முன்னொன்று பின்னொன்றாய் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள.
நாங்கள் சொல்வதைத்தான் நீங்களும் இறுதியில் சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை உங்கள் வாத்திறமையால் நாம் சொல்வதை விட வித்தியாசமாக எதையோ சொல்வது போல பாவ்லா காட்டுகின்றீர்கள்.
இனியும் இதில் கதை வளர்ப்பது எனக்கு நன்றாக படவில்லை. நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி நான் விடை பெறுகின்றேன்.
உடல் உளவியல் என வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெண்கள் ஆண்கள் என தாழ்வு உயர்ச்சி சொல்ல எந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இல்லை. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு அந்த சரியாசனம் வழங்கப்படவில்லை. ஆனால் எமது தேசத்தை பொறுத்த வரையில் பெண்கள் அந்த நிலையை சரியான முறையில் தக்க வைத்து வருகின்றாரகள். பெண்களின் உடலியல் ரீதியான உபாதைகளை காரணம் காட்டி அவர்களின் திறமைகளை கொச்சைப்படுத்த வேண்டாம். அவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இலக்கை அடையும் பக்குவம் பெண்களுக்கு உண்டு. அதை தளபதி சு10சையின் கருத்து மூலம் குருவி அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே
ஆண் பெண் என்பது வெறும் உடலியல் வேறுபாடேயொழிய வேறொன்றில்லை.
.
.!!
.!!


