08-15-2003, 11:27 PM
[size=18]பரதம் பற்றிய ஒரு பார்வை
உலகில் உள்ள ஒவ்வொரு கண்டங்களுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் அவரவர்க்கே உரிய பாரம்பரிய நடன வடிவங்கள் உண்டு. டெனிஸ் மக்களுக்கு குழடமந னயளெந இருப்பதைப்போல இந்திய உப கண்டத்தில் வாழும் மக்களிடமிருந்து உருவான நடன வடிவங்களில் பரதநாட்டியம், கதக் , மணிபுரி, கதகளி என்பன மிகப்பழைய நடனவடிவங்களாகும். இவற்றில் சர்வதேச hPதியாக மிகமிகப் பிரபலமடைந்துள்ள கலை பரதநாட்டியமாகும். இன்று பரதநாட்டியமானது இந்திய உபகண்டத்திற்குள் மட்டுமல்வாது அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் பல்வேறு இன மக்களாலும் விரும்பிக் கற்கப்படுகின்ற நுண்கலையாக இருந்துவருகிறது. பழைய தமிழ் இலக்கியங்கள் இதை கூத்து என்றும், சதிர் என்றும் அழைத்தன. சுமார் அறுபது ஆண்டுகாலமாகத்தான் பரதநாட்டியம் என்னும் பெயர் உலகப்பிரசித்தமடைந்து வருகிறது.
பரத நாட்டியம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனுடன் தொடர்புடையது. சிவனால் மக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்யப்பட்ட அறுபத்து நான்கு கலைகளில் பரதக்கலையும் ஒன்றாகும். சிவன் என்னும் கலைஞர் ஆதிகாலத்தில் மிகச்சிறந்த நடனக்கலைஞராக இருந்திருக்கிறார். ஆடும் தெய்வமாக, தாண்டவமூர்ததியாக எழுந்தருளியிருக்கும் அவரின் நடராஜவடிவான தோற்றத்தின் மூலம் இதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் பிரபஞ்சத்தில் அணுவிலிருந்து, அண்டம்வரை யாவுமே ஓர் தாள ஒழுங்கில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தாளம் நின்றுபோனால் நடனம் நின்றுபோய்விடும். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இதயத் துடிப்பே அவனை இயக்கும் தாளமாக இருந்து வருகிறது. அந்தத் தாளம் நின்றுபோனால் அந்த வாழ்வே நின்றுபோய்விடும். ஆகவேதான் நாம் கண்டு, கேட்டு, அறிந்து கொண்ட விடயங்களெல்லாமே ஓர் நடன ஒழுங்கிலேயே நடைபெறுவதை அறிந்து, நடனத்தையே இறைவனாக்கி, அதற்காக சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அதற்கேற்ப நடனமிடுவதால் இதை தெய்வீகக்கலை என்பார்கள்.
இயற்கையோடு கலந்து, மனித வாழ்வில் வெளிப்பட்ட நடன வடிவங்களைச் செம்மைப்படுத்தி, பரத சாஸ்த்திரம் என்னும் நு}லாகத் தந்தவர் பரத முனிவர். இவருக்கு முன்னரே சயந்தம், அகத்தியம், இந்திரகாளியம் போன்ற நடன நு}ல்கள் இருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும் அவைகள் கைக்குக் கிடைத்தில. பரதநாட்டியம் என்ற பெயர் பரத முனிவரின் பெயரை ஒட்டியே வந்திருக்கிறது. பாவம், ராகம் , தாளம் என்னும் நடனத்தின் மூன்று முக்கிய விடயங்களின் ஆரம்ப எழுத்துக்களான ப,ர,த என்ற எழுத்துக்களின் இணைவே பரதம் என்னும் சொல்லின் உட்கருத்து என்றும் கூறுவர். பரத நாட்டியம் நிகழ்த்தப்படும்போது அதற்குரிய அடிப்படை விதிமுறைகளின்படியே கதையை வெளிப்படுத்தும். நாம் அந்த விதிமுறைகளை எவ்வளவு து}ரம் புரிந்து கொண்டிருக்கிறோமோ அதற்கேற்பவே அந்த நடனத்தின் ஆழத்தையும், செறிவையும் அறிந்து அனுபவித்தல் முடியும். இனி இதற்காகக் கூறப்பட்டுள்ள சில அடிப்படை விடயங்களை சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
பாவம் :
ராகம் :
தாளம் :
நன்றி - அலைகள்.com

nadpudan
alai
alai