01-31-2005, 03:50 PM
வலு இழப்பு வலு விரயம் என்பவற்றை நிறுவனம் எனும் ஒரு தளத்தில் மட்டும் நின்று நோக்குதல் புத்தியுள்ளவருக்கு ஏற்றதன்று. வீடு எனும் தளத்திலும் நின்று நோக்க வேண்டும். நீங்கள் சொல்லவது போல பெண்கள் எங்களால் முடியாது தான். எனவே நாங்கள் வீட்டிலேயே இருக்க நீங்கள் எல்லா வளங்களும் வலுவும் உள்ள றோபோக்கள் உழைத்து கொண்டு வாருங்கள் என இருந்திருக்கலாம். அப்படியா இருக்கிறார்கள். இங்கே புதிய ச10ழநிலையிலும் நிறுவனங்களின் கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுத்து உழைத்து வருகின்றார்கள். இதனால் அந்த வீட்டில் ஏற்படக்கூடிய வலுவேற்றம் பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவான சிந்தனைகள் பற்றித்தான் நாங்கள் இங்கே வாதிடுகின்றோம். அதனால் எங்கள் தனிப்பட்ட தொழில்சார் திறமைகள் பற்றி விளம்பத் தேவையில்லை. குருவி! நீங்கள் வாத்திற்கு இழுப்பதனால் சொல்கிறேன். கனடா இந்தியா இலங்கை டுபாய் நாடுகளில் கிளைகளை கொண்ட நிறுவனமொன்றை நிர்வகித்து வருபவன் நான். பல பெண்கள் பணியாற்றுகின்றார்கள். நீங்கள் சொல்வதைப் போல எந்த வலுவிழப்பும் எனது நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை.
இன்று ஆண்களுக்கு உடல்நம் மேலும் பல காரணங்களால் வேலை இழப்பு ஏற்பட்ட பின்னர் எத்தனை பெண்கள் குடும்ப சுமையை தாங்கி வெற்றிகரமாக குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார்கள். ஒரு சில பெண்கள் விடுகின்ற தவறுகளை ஒட்டுமொத்தப் பெண்களின் தவறு என முத்திரை குத்தி முழுமையான பெண் இனத்தின் திறமைகளையும் உரிமைகளையும் மழுங்கடித்தல் என்பது ஒரு வளர்ந்து வரும் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஏற்றதன்று. தளபதி சு¨10சை கூறிய கருத்தை உங்கள் வாதத்திற்கு துணையாக சேர்த்திருந்தீர்கள். தளபதி சொன்னது பெண்களின் பங்களிப்பு பற்றி விளக்குவதற்கு. இயற்கையாக ஏற்படும் அவ்வாறன அசௌகரியங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பெண்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்கள். நீங்கள் அதன் மறுபக்கத்தை உங்களுக்கு வசதியாக மாற்றிப்போட்ட பெண்களால் இயலாது என்பதாக வாதாட வருகின்றீர்கள். என்னாச்சு குருவி உங்களுக்கு?
இதற்காக பெண்கள் செய்வது எல்லாம் சரி என்பது அல்ல என் வாதம். புலம்பெயர்ந்த மண்ணில் பல சீர்கேடுகளுக்கு பெண்களே மூலகாரணமாக இருக்கின்றார்கள். ஆனால் அவற்றை காரணம் காட்டி ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளையும் அவர்களின் திறமைகைளை கொச்சைப்படுத்துவதையும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதை ஒரு ஆரோக்கியமாக விவாதக் களமாக மாற்ற .. விதண்டாவாத ரீதியில் தர்க்கம் புரிவது தவிர்க்கப்படல் வேண்டும். இல்லையெனிலோ வீண் சர்ச்சைக்களமாக இது மாறுவது இந்த களத்தின் நோக்கத்தி;ற்கு ஏற்றதல்ல.
சரியான விடயத்தை யார் சொன்னாலும் அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதென்பது ஆரோக்கியமான வாதத்திற்கு முக்கிய அம்சம். நான் பிடித்த முயலுக்கு 3 கால் தான் இருந்தது என்றால் யாரால் என்ன தான் செய்ய முடியும்??????????

.
.!!
.!!