01-31-2005, 01:22 PM
<b>மதுரனின் தரவிலிருந்து</b>
Quote:உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீர தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.மனநிறைவுதரும் புதிய செய்தியாக இருக்கிறது.1996ல் கனடாவில் நிகழ்ந்த உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாரதிராஜா அவர்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வழிமொழியும் வகையில் விரைவில் படமொன்றைத் தயாரிப்பேனென சொல்லியிருந்தார்.அது இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சிதான்
இந்தப் படத்தில் வீரத் தளபதியாக யாரை நடிக்க வைக்கலாம். எந்தெந்த கேரக்டர்கள் இடம் பெற வேண்டும். எங்கே படிப்பிடிப்பு. இயக்கத் தளபதி பிரபாகரனுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
அண்மையில் இலங்கைக்கு வந்த இவர் அப்படியே தமிழீழத்துக்கும் ஒரு நடை நடந்திருக்கிறார். அப்போது தான் பிரபாகரனை சந்திந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை படமாக்குவது பற்றி பாரதிராஜாவிடம் விவாதித்திருக்கிறார். நல்ல முயற்சி!
-

