Yarl Forum
பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டக் கதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டக் கதை (/showthread.php?tid=5514)



பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டக் கதை - Mathuran - 01-31-2005

புரட்சிகரமான வரலாற்றுப் படம். அடைகாக்கப்படுகிறது. தமிழன் என்ற இன,மொழி பற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் உரிமைக்காக அவர்கள் வதைபட்டார்கள். தாயை இழந்தார்கள். தாரம் தொலைத்தார்கள் தலைமுறை சொல்லும் வேர்களுமிழந்தார்கள்.

இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என எல்லாம் இழந்தார்கள்.

துவேஷ வெறியர்களின் ஆதிக்க பசிக்கு இரையாகிறது தமிழினம். கற்பழிக்கப்பட்ட தாய், தங்கை, அக்கா, அண்ணி என உறவுமுறைப்பட்டியல் நீண்டது தமிழீழத்தில்.

உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீர தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இந்தப் படத்தில் வீரத் தளபதியாக யாரை நடிக்க வைக்கலாம். எந்தெந்த கேரக்டர்கள் இடம் பெற வேண்டும். எங்கே படிப்பிடிப்பு. இயக்கத் தளபதி பிரபாகரனுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அண்மையில் இலங்கைக்கு வந்த இவர் அப்படியே தமிழீழத்துக்கும் ஒரு நடை நடந்திருக்கிறார். அப்போது தான் பிரபாகரனை சந்திந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை படமாக்குவது பற்றி பாரதிராஜாவிடம் விவாதித்திருக்கிறார். நல்ல முயற்சி!

நன்றி வீரகேசரி

நன்றி சூரியன் இணயத்தளம்

அன்புடன்
மதுரன்


- Manithaasan - 01-31-2005

<b>மதுரனின் தரவிலிருந்து</b>
Quote:உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீர தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இந்தப் படத்தில் வீரத் தளபதியாக யாரை நடிக்க வைக்கலாம். எந்தெந்த கேரக்டர்கள் இடம் பெற வேண்டும். எங்கே படிப்பிடிப்பு. இயக்கத் தளபதி பிரபாகரனுடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

அண்மையில் இலங்கைக்கு வந்த இவர் அப்படியே தமிழீழத்துக்கும் ஒரு நடை நடந்திருக்கிறார். அப்போது தான் பிரபாகரனை சந்திந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை படமாக்குவது பற்றி பாரதிராஜாவிடம் விவாதித்திருக்கிறார். நல்ல முயற்சி!
மனநிறைவுதரும் புதிய செய்தியாக இருக்கிறது.1996ல் கனடாவில் நிகழ்ந்த உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாரதிராஜா அவர்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வழிமொழியும் வகையில் விரைவில் படமொன்றைத் தயாரிப்பேனென சொல்லியிருந்தார்.அது இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சிதான்


- Danklas - 01-31-2005

²§Çöööö À¡Ã¾¢Ã¡º¡... Å¢øÄ¡Û¸¨Ç §¾Ê ¿£ ±í§¸Ôõ «¨ÄÂò§¾¨Å¢ø¨ÄÂÉ.. ¿õÁÙ «ó¾Á¡¾¢Ã¢ ¬ì¸¨Ç ÅÕìÌÐ... þÄźÁ¡ ¿£ ¦º¡øÄ¢ÌÎ츧Ч¾¨Å¢ø¨Ä «ó¾Á¡¾¢Ã¢ À¢îÍ ±È¢Å¡í¸.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)


- KaviPriyan - 01-31-2005

ஆமாம் இது புதிய செய்தியாகத் தான் இருக்கிறது... ஆனால் எனக்கு ஒரு நாபகம் வருகிறது அவர் ஈழத்திற்கு போகும் போது அண்ணையைச் சந்திக்கவில்லையெக் பேட்டி அளித்துள்ளாரே!!!!

பொறுத்திருந்து பார்ப்போம்...

பாரதிராஐh மாமா வாழ்த்துக்கள்....


- nallavan - 01-31-2005

வீரகேசரி என்ன செய்தி மூலத்தை வைத்துப் போட்டது என்று ஏதாவது தகவல் உண்டா? வீரகேசரிக்கு பாரதிராஜா சொன்னாரா? அல்லது பாரதிராஜா வேறெங்காவது சொன்னதை எடுத்துப் போட்டார்களா? எனக்கு இச்செய்தியில் சந்தேகமுண்டு.


- glad - 01-31-2005

உண்மை எதுவாக இருந்தாலும் எமது வரலாற்றை திரிவுபடுத்தாமல் உண்மையை வெளிக்கொண்டு வருவாராயிருந்தால் மகிழ்ச்சியான வவேற்கலாம் என நினைக்கிறேன்
glad