01-31-2005, 11:24 AM
Niththila Wrote:என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க.?
உடற்பலத்தால் பெண்களை இதுவரைகாலமும் கூட அடக்கியாளும் ஆண்கள் தானே தம்மால் அடக்கி வைத்திருக்கப்படும் பெண்களுக்கு உரிமைகளை கொடுக்க முடியும்? பெண்கள் அவர்களாகவே அடக்குமுறையை உடைத்துக்கொண்டு உரிமை பெற்றால் அந்த தேவை இருக்காது தான். என்ன சொல்கிறீர்கள் நித்திலா?
Niththila Wrote:ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
நாம் தானே வருமானத்திற்காக ஆண்டவனையே படைத்தோம். எங்களுக்கு யாரும் உரிமைகளை தரவேண்டியதில்லையே. அவை ஆண்களாகிய எம்முடையது தானே.
Niththila Wrote:இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
மமதையல்ல, இயற்கை. எளியோரை வலியோர் அடக்குதல் வாழ்வின் நிலைப்பாடு. தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வழியில்லாத கீரையையும், வாழையையும் நாம் வெட்டி கறியாக்கி உண்ணுகினறோம். கோழியையும், மீனையும் கூட கொன்று உண்கின்றோம். மனிதரிடையேயும் எளியோரை அடக்கி வேலைவாங்கி வசதியாக வாழ்கின்றோம். சரி பெண்ணாக பிறந்த உங்கள் கதி? வலியோராக மாறுங்கள். வழி தெரியாவிட்டால் வன்னி சென்று நகர்காவலராக பயிற்சி பெற்று வாருங்கள். மனதிலும் உடலிலும் வலிமை வரும்.

