01-31-2005, 10:44 AM
kuruvikal Wrote:காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம்,
அப்படியாயின் உங்கள் பதில் தான் என்ன? பெண்களால் மனித வலு வீணடிக்க படுகின்றது என்கின்றீர்கள? அப்படியாயின் உங்களுக்கு இங்கே உதாரணம். வடநோர்வேயில் மிகவும் கடினமான வேலை. மீன்வெட்டி சுத்தம் செய்யும் தொழில் அங்கே நமது தமிழ் பெண்களும், ஆண்களுக்கு சரி நிகராக வேலை செய்தார்கள். அதிலும் ஒரு ஆண்டில் மட்டும் நமது நாட்டை சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவரே கூடுதலான மீன்களை வெட்டினார் என்னும் செய்தி இந்நாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்டன. ஏன் ஆண்களால் அந்த பெண்மணியுடன் போட்டி போட முடியவில்லை. பெண்களாலும் எல்லாம் முடியும். இயற்கயாய் அவர்களுக்கு சில இடர்பாடுகள் இருக்கிண்ரது என்பதற்காக. இப்படி அவர்களை தாழ்த்தி பேசுவது நன்றன்று. மனம் உண்டானாலால் இடம் உண்டு. நீங்கள் பெண்களை பற்றி அதுவும் நம் தமிழ்பெண்களை பற்றி அறியவேண்டுமாயின். வடநேர்வே சென்று அங்கே உள்ள் மீன் தொளில்ச்சாலைகளில் விசாரிக்கலாம். ஆண்களும் நன்றாக வேலை செய்தார்கள், ஆனால் நமது பெண்களைப்போலன்று. எனவே இதைவிட என்னால் எதுவும் சொல்லிவிட முடியாது.
அன்புடன்
மதுரனன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 