01-31-2005, 02:22 AM
எனக்கு ஒன்று புரியவில்லை. யார் தான் கடினமான வேலைகளை தெரிவு செய்கிறார்கள். அவர் அவர் தகுதி கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பவற்றில் தானே வேலை தங்கியுள்ளது. தெரிவு செய்ய விட்டால் நான் கூட எனக்குப்பிடித்த இலகுவான வேலையை தான் தெரிவு செய்வேன். ஏன் எந்த முட்டாள் பிள்ளை கூட அப்படித்தான் செய்யும். குருவி நீங்கள் மட்டுமென்ன பெண்கள் செய்யமுடியாத வேலைகளை எல்லாம் உங்கள் தலையில் இழுத்துப்போட்டுக் கொண்டா செய்கின்றீர்;கள். பெண்கள் விடுமுறை கோருவதால் ஏற்படும் மனிதவலு இழப்பு பற்றியெல்லாம் வேதனைப்படுகின்றீர்கள். அந்தந்த நிறுவனங்களே எதுபற்றியும் சிந்திக்காமல் காப்புறுதிகள் அவற்றை ஈடு செய்து லீவு வழங்குகின்றார்கள். நீங்கள் உங்கள் ஊதியத்தை பறித்து அவர்கள் விடுமுறையில் செல்வது போல அதிக சிரமம் எடுக்கின்றீர்கள். இப்போது புரிகிறது..... பெண்கள் ஏன் இந்த பிரச்சனையை சமூப்பிரச்சனையாய் நோக்காது ஆண்களை எதிரிகளாய் பார்க்கின்றார்கள் என்று.
.
.!!
.!!

