01-30-2005, 01:55 PM
குருவிகளுக்கும் தம்பி குளக்காடனுக்கும் பணிவாக நன் தெரிவிப்பது என்னவென்றால் .. நீங்களும் அந்தப் பெண் மாயா போலவே கோசங்களான வாதங்களையே முன் வைக்கின்றீர்கள்.
சரி நீங்கள் சொன்ன வாதங்களுக்கு ஒவ்வொன்றாக வருகின்றேன்
குருவி! நீங்கள் சில தொழில்களைக் குறிப்பிட்டு சொகுசான வேலைகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த வேலைகள் ஆண்களுக்கு கிடைப்பதில்லை என்றும் விசனம் தெரிவித்திருந்தீர்கள். உண்மையில் நடப்பது என்ன தெரியுமரீ அவ்வாறான வேலைகளில் ஆண்களை அமர்த்தினால் கிடைக்க கூடிய ஊதியத்திலும் குறைவான ஊதியமே அப்பெண்களுக்கு கிடைக்கின்றது. எனது நண்பர்கள் பல பேர் அவ்வாறான தொழில்களில் உள்ளனர். உண்மையில் அவர்களை விட மிகவும் சிறப்பாக தொழில்புரியும் பெண்கள் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். நிறுவனங்கள் பெண்களை விரும்பி அவ்வாறான தொழிலுக்கு அமர்த்துவதற்கு காரணங்களில் ஒன்று மேற்படி குறைந்த ஊதியம் என்றாலும் பலருக்கு தெரியாத முக்கிய காரணம் அவர்கள் மூலமாக மற்றைய போட்டி நிறுவனங்களுக்கு எதிரான பல அந்தரங்க வேலைகளை அவர்கள் மூலம் இலகுவில் ஆற்ற முடிகின்றது. அதனால் தான் பல நிறுவனங்களில் பெண்கள் அவ்வாறான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நீங்கள் நினைப்பது போல அவர்கள் சொகுசான வேலைகளில் இலகுவாக சம்பாதிக்கவி;ல்லை.
நீங்கள் சொன்ன மற்றைய வாதம்: சில கடினமான தொழில்களில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்கள் இல்லையென்று. தயவுசெய்து அவ்வாறன பெண்கள் பணியாற்றாத தொழில் துறைகளை எனக்கு பட்டியலிட்டு காட்ட முடியுமா? நான் அந்தந்த துறைகளில் பணியாற்றும் பெண்களின் பெயர்களை பட்டியலிட்டுத் தருகின்றேன். நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்கின்றீர்கள் குருவி. எனக்குத் தெரிய கட்டிட வேலை வீதி அமைக்கும் பணி பார ஊர்தி செலுத்தல் என அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் நுழைந்து விட்டார்கள். இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதனாலேலே பெண்கள் இலகுவாக அந்த தொழில்களில் நுழையக் கூடியதாக உள்ளது. இது பற்றி மேற்கத்தேய பெண்கள் அமைப்புகள் குரல் கொடுப்பது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா?
அடுத்து நீங்கள் சொன்ன வாதம்: பெண்கள் எடுக்கும் அந்த லீவு இந்த லீவு பற்றியது. குருவி! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பெண்களுக்கு அவ்வாறான லீவுகள் வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? இதனை நீங்கள் அதனை அங்கீகரிக்காது போனால் நீங்கள் ஒரு பெண்ணுக்கு மகனாகவோ சகோரனாகவோ கணவனாகவோ இருப்பதற்கு அருகதையற்றவர்.
சரி இனி எனது வாதத்திற்கு வருகின்றேன். மேலே நான் குருவியுடன் தர்க்கம் செய்தது எல்லாம் சட்ட ரீதியாக இன்னமும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி. ஆனால் இவற்றை எல்லாம் காரணங்கள் கூறி நடைமுறையில் எங்கள் பெண்கள் பண்ணுகின்ற லொள்ளுகளுக்கெல்லாம் அடிபணிய வேண்டுமென்பதி;ல்லை. தமிழ் பெண்கள் அதுவும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் ஒன்றை முக்கியமாக உணர்ந்து கொள்ள கடமைப்பட்டவர்கள். உங்களுக்கு கிடைத்திருக்கின்ற இந்த சுதந்திரம் என்பது நீங்களோ அல்லது எங்கள் பரம்பரையோ நினைத்துப்பார்க்காத ஒன்றுதான். அதற்காக அதனை விரயம் செய்யும் உரிமை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு "சந்தனம் மிஞ்சினால் தடவடா......... எனம் கணக்கில் திரிய வேண்டாம்.

.
.!!
.!!