01-30-2005, 01:53 PM
நீண்டகாலம் தங்கியிருக்க அமெரிக்கா திட்டம்
கடல்கோள் அனர்த்த உதவியின் வடிவத்தை மாற்றியிருப்பதாக நேற்று அறிவிப்பு
கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அவசர மீட்பு நிவாரணப் பணிகளுக்கு உதவிய அமெரிக்கா இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கப்போவதாக நேற்று சனிக்கிழமை அறிவித்திருக்கிறது.
ஆரம்ப கட்ட வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் அமெரிக்க இராணுவம் இலங்கையிலிருந்து படையினர் மற்றும் தளபாடங்களின் தொகையைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ள அதேசமயம் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க பொது மக்களின் உதவியை அதிகரிக்கப் போவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஜேம்ஸ் என்ற்விஸ்ரில் நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா அரசியல் ரீதியான தொடர்பு எதனையும் வைத்திருக்கப்போவதில்லையெனவும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமெரிக்கா புனர்நிர்மாண உதவிப் பணியில் ஈடுபடப் போவதில்லையெனவும் தெரிவித்த ஜேம்ஸ் என்ற்விஸ்ரில் புலிகள் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறினார்.
கடல்கோள் அனர்த்தத்தையடுத்து இலங்கைக்கு வழங்கிவரும் அமெரிக்க உதவியின் வடிவம் மாற்றமடைகிறது.
இலங்கையின் ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கென்றும் தனது ஆதரவை வழங்கியது போன்று கடல்கோள் அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்.
அமெரிக்க இராணுவத்தினரின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. புனர்நிர்மாணப் பணிகளில் அமெரிக்காவின் ஏனைய பிரிவினர் கவனம் செலுத்துவர். காலப்போக்கில் அமெரிக்க உதவியின் வடிவம் மேலும் மாற்றமடையும்.
நாங்கள்இ இங்கு நீண்ட நாட்களுக்கு தங்கியிருக்கப் போகிறோம். நாங்கள் போகப் போவதில்லை.
விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள தகவல் உற்சாகமளிக்கிறது.
இது தொடரும் எனவும் தீர்வொன்றிற்கு உதவும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஆசியாவைத் தாக்கிய கடல்கோள் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல்கோளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நாங்கள் சில கணிப்பீடுகளைச் செய்தோம். அமெரிக்க சனத்தொகையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் கணிப்பிட்டோம்.
அமெரிக்க இராணுவம் மிகத் துரிதமாகச் செயற்பட்டுள்ளது.
அமெரிக்கா உதவிய விதம் அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்கும் இடையில் இருந்த உறவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
அதேவேளைஇ இது உறவுகளை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயாராக உள்ளோம்.
இலங்கையுடன் எமக்கு நீண்டகால இராணுவ உறவு உள்ளது.
இலங்கை தனது புனர்நிர்மாணப் பணிகளில் அமெரிக்க இராணுவத்தின் உதவி எதிர்காலத்தில் தேவையெனக் கருதினால் நாங்கள் அதற்கு உதவத் தயாராகவுள்ளோம்.
அமெரிக்க இராணுவம் தற்போது முற்று முழுதாக மனிதாபிமானப் பணிகளையே மேற்கொண்டு வருகின்றது.
கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது வழங்கும் உதவி எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்ற ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது.
எனினும் இலங்கையுடன் எமக்கு மிக நீண்டகால இராணுவ உறவு உள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் பணியாற்றி வரும் இந்திய இராணுவத்துடன் எமக்கு நல்ல உறவும் ஒத்துழைப்பும் உள்ளன. அவர்கள் மிகச் சிறந்த பணியை ஆற்றியிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் தனது புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் வேளை எமது உதவியைக் கோரினால் நாங்கள் உதவி புரியத் தயாராகவுள்ளோம். எமது பணி என்ன என்பதைப் பொறுத்ததாகும். புனர்வாழ்வு புனர்நிர்மாணப் பணிகளுக்கு பின்னாலுள்ள சக்தி இலங்கை அரசாங்கமே. நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்.
எமது படையினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் புனர்வாழ்வு புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வர்.
அமெரிக்க இராணுவம் காலி அம்பாறை யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தனது பணியினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பத் தொடங்கியுள்ளது.
நன்றி: தினக்குரல்