01-30-2005, 09:28 AM
kuruvikal Wrote:சும்மா சமாளிப்புக் கருத்தெழுதாமல் பெண்கள் எங்கெங்கே தமது உரிமைகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள்...அதற்கும் ஆண்களுக்கும் என்ன தொடர்பு... இவற்றை கொஞ்சம் விபரமாகச் சொல்கிறீர்களா...???!
எங்களுக்கென்னவோ பெண்களுக்கு என்று ஒரு சுதந்திரம் தனிய இந்த உலகில் இல்லை...மனிதனுக்கு என்று ஒரு சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவாக உண்டு...அதைப் பாவிக்கும் அனுபவிக்கும் அளவுகள் தான் வேறுபடுகின்றன...! உண்மையில் ஊதிய விடயத்தில் கூட பெண்கள் குறித்த இலக்கை ஆண்களுக்கு ஒத்த வகையில் அடைந்தால் மட்டுமே சம சம்பளம் கோர முடியும்...! ஆனால் உண்மையில் அப்படியாகவா நடக்கிறது...! சும்மா அந்தரங்கச் செயலாளர் என்று அழகான பெண்களை நியமிக்கின்றார்கள்...ஆண்களுக்கு அந்தத் துறையில் வேலை வாய்ப்பே இல்லை...அதேபோல் விமானப் பணிப்பெண்களாக ஆண்களை விடப் பெண்கள் அதிகம் கடமை புரிகின்றனர்...தாதிகளாக...ஆசிரியர்களாக...இப்படிப் பலதைக் குறிப்பிடலாம்...இவையாவும் வியர்வை சிந்தா சொகுசு வேலைகள்...!ஆனால் பொறியியலாளர்களாக...கடின தொழிலாளர்களாக கட்டிடப்பணியாளர்களாக வீதி பராமரிப்பு... சுரங்கப் பணியாளர்களாக ஆண்கள்தான் அதிகம் மாடாய் உழைக்கின்றனர்...இங்கு கூட பெண்கள் வேலைக்கு அமர்ந்தால் இலகு வேலைகள் தான் அளிக்கப்படுகின்றன...ஏன் இந்தப் பாகுபாடு...! சும்மா பெண் சமத்துவம் பெறத் தயாராகி விட்டாள் என்று கூவுவதற்கு முதல் உங்களை உள உடல் ரீதியாக தயாராக்கிக் கொள்ளுங்கள்...ஆண்களுக்கு நிகராக பணிபுரிய...! அதுவரைக்கும் கம் என்று இருக்கிறீங்களா காணும்...!
அதுமட்டுமன்றி பெண்கள் அந்த லீவு இந்த லீவு என்று பல வசதிகளை வேலைத்தளங்களில் பெற்றுக்கொள்கின்றனர்...ஆண்களுக்கு அவற்றில் பாதி கூடக் கிடையாது... தொழிற்சாலைகளில் கடின வேலைகளில் இன்றும் ஆண்கள் தான் செயற்படுத்தப்படுகின்ற பரிதாப நிலை காணப்படுகிறது...குடிப்பதில் புகைப்பிடிப்பதில் விவாகரத்தில் எல்லாம் பெண்கள் தேவைக்கு அதிகமாகவே சுதந்திரம் பெற்றுவிட்டனர்...ஆனால் பெண் என்பதற்காக காலா காலமாக அனுபவிக்கும் சலுகைகளுக்கு ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதும் பெண்கள் அதை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் வருத்தமளிப்பத்துடன் அதற்காக பெண்கள் வருந்துபவர்களாகவும் இல்லை...! அவை ஆண்களை அவர்களின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பதாகவே தெரிகிறது...!
உண்மையில் இப்போ சம உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஆண்கள்தான் தரந்தாழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்...என்பதை எல்லோரும் நிஜ உலக உதாரணங்களை வைத்துக் கவனிக்கத் தவறாதீர்கள்...!hock:
வணக்கம்,
குருவிகளே உங்கள் ஆதங்கம் எமக்கு புரிகின்றது. ஆனால் சமூக சட்டங்களிற்குள் உட்பட்டு தானே பெண்கள் தங்கள் சேவைகளை புரிகின்றார்கள். ஒரு நாட்டின் குடிமகக்களிற்கு அவர்களிற்கு பிடிக்கின்ற வேலைதனை தேர்தெடுக்கும் உரிமை உண்டு. அந்த வேலைதனை ஒரு நபருக்கு வழங்குவதா இல்லையா என்னும் முடிவினை எடுக்கும் அதிகாரமும் வேலை கொடுக்கும் அதிகாரிக்கு உண்டு. அனால் அந்த நபர் அவர் புரிய வேண்டிய வேலைக்கு ஏற்ற தகுதிகள் இருந்தும். அவர் வேறு காரணங்களிற்காக புறக்கணிக்க படுகின்வாரேயானால். வேலை கொடுப்பவர் வேலை விண்ணப்பித்த நபருக்கு சரியான காரணங்களை காண்பிக்க வேண்டும். அன்னால் சம்பள்ம் என்பது செய்யும் வேலைக்கான உதியம். எனவே இரு பாலாரும் ஒரு வேலையினை புரிகின்ற பொழுது, அங்கே ஊதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதனைத்தான் நான் தவறு என்று சொல்லுகின்றேன். ஒரு சமூகத்தில் ஒருமனிதரின் இயலாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். எல்லோராலும் எல்லாம் முடியும் என்பதனை இங்கே யாராலும் சொல்லிவிட முடியாது. சமூகம் சரியான முறையில் செயல் வடிவம் பெற வேண்டுமாயின். எல்லோரையும் இணைத்து பாகுபாடுகள் இன்றி. நிறப்பாகு பாடு, பாலியல் பாகுபாடு, வலியோர் எளியோர் பாகுபாடு இப்படி நீண்டு கொண்டே செல்லும். ஒரு நாடு எல்லோரயும் எந்த பாகு பாடும் இன்றி அணைத்து சென்றாலே. அது நல் நாடு, இல்லையேல் அது வெறும் சுடுகாடு. சட்டங்களை சரியாக வகுத்து, அதன் தர்மத்தின் அடிப்படையில் நேர்மையுடன் நடந்தால். நிச்சயம் நாம் எல்லோரும் நல்ல குடிமக்களாக திகளலாம்.
அன்புடன்
மதுரன்


hock: 