01-29-2005, 04:44 PM
இல்லை நித்திலா. நீங்கள் பிரச்சனையின் ஆழத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். என்பார்வையில் ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் எனும் சொற் பிரயோகங்களே வேறு வேறானவை. இதில் ஆணாதிக்கம் எனும் போது அதற்கு ஆண்கள் தான் காரணகர்த்தாக்களாக முடியும். ஆனால் பெண்ணடிமைத்தனம் ஏனம் போது அது இரண்டு வகையாகப் படுகிறது. 1) ஆண்கள் பெண்களை அடிமைகளாக எண்ணும் எண்ணக்கரு. 2) பெண்களே தங்களை அடிமைகள் போல உருவகம் செய்து கொள்வது.
இதில் இரண்டாவது வகையானதே இப்போது பெரும் பிரச்சனையாக இருப்பது. இதற்கும் காரணம் பெண்களல்ல. சமுதாயம் தான். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என காலத்திற்கு ஒவ்வாத பலவற்றையும் பெண்கள் தலையில் திணித்து வைத்துள்ளது தான். எனவே தான் சொல்கிறேன் ஆண்களை எதிரிகளாக வசை பாடாமல் பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து தீர்வு தேட புறப்பட வேண்டும். இதில் வீணாண கோசங்கள் அவசியமில்லை. காலம் காலமாக கலை இலக்கியம் போன்றவற்றில் பெண்கள் பாடுபொருளாகத் தானே இருந்திருக்கின்றீர்கள். நீங்கள் பாடுபவர்களாக வெளிவாருங்கள். சமுதாயஅந்தஸ்து எனும் கதிரை கைப்பற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பாருங்கள் இந்த உலகம் எப்படியுள்ளது என்பதை.
ஆனால்... நான் சொல்லும் சமுதாய அந்தஸ்து எனும் கதிரையை கைப்பற்றிக் கொண்ட பல பெண்களும் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்பதே என் எண்ணம்.

.
.!!
.!!