01-29-2005, 04:05 PM
மதுரன் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்...இது ஒரு சமூகத்துக்கான போராட்டம். ஆனால் மாயா போன்றவர்கள் இதை தங்களின் குழப்பமான கருத்துகளால் ஆண்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிடுவார்களோ என்பது தான். அப்படி ஒரு நிலைமை எதிர்பார்ப்பதற்கு எதிர்மறையான விளைவுகளையே உண்டு பண்ணும். மேற்கத்தேய நிலைமைகளுடன் எங்களை ஒப்பிட முடியாது. நாங்கள் ஒட்டுமொத்தமாக இன்னமும் ஏராளமான விடயங்களுக்காக போராட வேண்டிய நிலைமையில் உள்ளவர்கள்.
வேண்டிக்கொள்வதெல்லாம்.... பெண்ணியம் பேசும் பெண்கள் எல்லாம் வெறுமனே பேச்சில் நின்று விடாமல் செயலில் காட்ட முன்வரவேண்டும். நான் பார்த்த அளவில்.. பல பெண்களுக்கு பெண்ணியம் பேசுதல் பொழுதுபோக்கு. கல்வி கற்கும் காலத்தில் ஏராளமாக பேசுவார்கள். திருமணம் செய்து Settle ஆனவுடன் ஆட்களை காணவே முடியாது. பின்னர் புதிதாக பெண்ணியம் பேச வருபவர்கள் அவளை கணவன் அடிமைப்படுத்துவதாக றீல் விடுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நீண்டகாலம் இந்த போராட்டத்தை தொடர்ந்து சென்று சமூகம் எனும் கூடத்தில் நிகழ்த்தப்படும் மாற்றங்களை அவதானிக்க கூடிய சரியான வழிகாட்டல் தலைமை பெண்ணியவாதிகளிடம் இல்லை. தங்கள் வாழ்வு சரியாக அமைந்துவிட்டால் கப்சிப் ஆகிவிடுகிறார்கள். இதனால் ஆர்வமுள்ள மற்ற பெண்களும் இவர்கள் காட்டிய பாதையில் ஆண்களை எதிரிகளாக நோக்கும் நிலை. நாமாவது ஏதேனும் இராமரின் அணிலாய் ஏதேனும் செய்யலாம் என்றால் நித்திலா போன்றவர்கள் நீங்கள் யார் எங்களுக்கு விடுதலை பெற்றுத்தர? என்கிறார்கள். இதில் நித்திலாவின் கோபம் நியாயமானது. ஆனால் நீங்கள் தனித்து நின்று இந்த சமூகப்பிணிக்கு மருந்து தேடக்கூடிய மனோபலம் நீண்ட காலம் இதைத்தொடரும் பக்குவம் உங்களுக்கு உண்டாக வேண்டும். என் போன்றவர்கள் உங்களுக்கு என்றும் உறுதுவையாய் இருப்போம். வழிகாட்டிகளாய் அல்ல. வழி தொடர்பவர்களாய். ஏனெனில் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் யார்??????????

.
.!!
.!!