01-29-2005, 07:25 AM
இது ஆரோக்கியமான விவாத தொடக்கமாக தெரிகிறது. எனினும் வாதத்தின் போமு வார்த்தைப் பிரயோகத்தில் கவனம் செலுத்துதல் முக்கியம் என எண்ணுகின்றேன்.
மதுரன் சொல்வது போல் காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்குமான பொதுவலி. காதலில் வரும் தடைகள் எல்லாம் அது எங்கிருந்து வந்தாலும் அந்த இரண்டு மனங்களையும் காயப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். மேலும் தலைப்பிற்கு பொருத்தமாக பார்த்தால்
நாம் வாழும் மேற்க்தேய வாழ்வுமுறையில் ஆண்கள் பாவம் என்றே சொல்லத்தோன்றுகின்றது. காரணம்.... புலம்பெயருகின்ற போதே ஆண்கள் மீது ஒரு சுமை சுமத்தப்படுகின்றது. அது அவர்கள் புலம்பெயருவதற்கான செலவை வந்தவுடன் உழைத்து கொடுக்க வேண்டும். இதனால் ஆண்களால் தமது பொருளாதார வளம் பற்றி மட்டுமே சிந்திக்க முடிகிறது. அவர்களால் படிப்பதற்கோ வேறு தொழில் அறிவை வளர்ப்பதற்கோ முடியாமல் போகின்றது. ஆனால் பெண்களின் நிலை வேறு. ஏற்கனவே புலம்பெயர்ந்த உறவினர் ஒருவரால் வரவழைக்கப்படுகிறாள். எனவே பெண்களால் இங்குள்ள வசதிகள் வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வி தொழில் போன்றவற்றில் இலகுவாக முன்னேற முடிகிறது.... இங்குதான் ஆரம்பமாகிறது காதலுக்கான ஆப்பு. இந்த இடத்தில் நான் பெண்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை. ஆண்களிலும் பலர் இன்னமும் பழைய பஞ்சாங்க நடைமுறைகளையும் கொண்டு வந்து பெண்கள் தலையில் சுமத்த நினைக்கிறார்கள். இதனை காதல் எனும் பெயரில் பெண்கள் மௌனமாக ஏற்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் தாங்கள் பெற்றுள்ள பாடசாலைக்கல்வி எல்லா இடங்களிலும் தங்களை முன்னுக்கு வைத்துள்ளதாக எண்ணி.... காதலனை வழி நடத்த விழைகிறாரகள். இவ்வாறான நடைமுறைப்பிரச்சனைகளில் ஏற்படுகின்ற தெளிவின்மை தான் மனமுறிவுக்கு காரணமாகிறது. நான் நினைக்கிறேன் யாரும் இவருடன் அல்லது இவளுடன் பழகிவிட்டு ஏமாற்ற வேண்டும் என திட்டமிட்டு ஏமாற்றமாட்டார்கள். நடைமுறையில் தான் எங்கோ பிரச்சனை.
இந்த பிரச்சனைகளை வைத்துக் கொண்டு ஆண்கள் இப்பிடித்தான் பெண்கள் இப்பிடித்தான் என கோஸங்களாக வாதங்களை முன்வைத்தல் ஆரோக்கியமான இராது. இதை ஒரு சமூகப்பிணியாக நினைத்து மருந்து தேடுவது நம் எல்லோரினதும் பணியாகும்.
கடைசியில் ஒன்று சொல்கிறேன்.... தனது காமத்தேவை முடிவடைந்ததும் காதலை துச்சமாக மதித்த ஆண்கள் பற்றி தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம. அதற்கு இப்போது பழிவாங்கப்படுகின்றதோ என்னமோ.... என் செவியில் வந்து விழும் செய்திகள் ஆரோக்கியமாய் இல்லை

.
.!!
.!!