01-29-2005, 05:44 AM
தாயே! எமையே சிதைத்ததேன்?
நீயே! பகையாய் அழித்ததேன்??
வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!!
வல்லமை நீயே தந்தாய்.
உந்தன் மடி ஏறிநின்று
உலகையே ஆழ வைத்தாய்.
உறவாக நீயிருந்தாய்
உதறிடவேன் மனம் துணிந்தாய்?
தீதென்ன செய்தோம் நாமோ
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?
தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம்
இரந்துண்டு வாழ்வதா?
கடல்வென்று ஆண்ட மண்ணை
கடல்கொண்டு போவதா?
பகைவென்று வீரம் செய்தோம்
பகைநீயாய் ஆவதா?
வசந்தத்தை வரமாய் கேட்டோம்
வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ?
தயா ஜிப்ரான்
நீயே! பகையாய் அழித்ததேன்??
வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!!
வல்லமை நீயே தந்தாய்.
உந்தன் மடி ஏறிநின்று
உலகையே ஆழ வைத்தாய்.
உறவாக நீயிருந்தாய்
உதறிடவேன் மனம் துணிந்தாய்?
தீதென்ன செய்தோம் நாமோ
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?
தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம்
இரந்துண்டு வாழ்வதா?
கடல்வென்று ஆண்ட மண்ணை
கடல்கொண்டு போவதா?
பகைவென்று வீரம் செய்தோம்
பகைநீயாய் ஆவதா?
வசந்தத்தை வரமாய் கேட்டோம்
வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ?
தயா ஜிப்ரான்
.
.!!
.!!

