01-29-2005, 03:47 AM
வணக்கம்,
திருவாட்டி மாயா அம்மயார் அவர்கள் சித்தரிப்பது போல ஒட்டுமொத்த ஆண்களும் காதலித்தவளை ஏமாற்றும் கூட்டத்தவர் அல்லர். அதே போன்று பெண்களை காதலித்து ஏமாந்த ஆண்களும் உண்டு. ஏன் பெண்களால் காதலிக்கபட்டு தற்கொலை செய்துகொண்ட ஆண்களும் உண்டு. என்ன சிலவேளை உங்களைப் போன்றவர்கள் சொல்ல்க் கூடும், விகிதாசாரப்படி பார்த்தால் ஆண்களை விட பெண்ளே கூடுதலாக பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் என்று. அத்தோடு இக் கட்டுரையை எழுதத்தொடங்கியதுமே. இப்படியான கருத்துக்களை முன்வைதுள்ளீர்கள் " பண்பும் , நற்குடிப் பிறப்பும், படிப்பும் நிறைந்தவர்தான் நல்ல மணமகள் அல்லது நல்ல மணமகன் என்ற நிலை போய், இன்றும் பணமும், தொழிலும் திருமணம் செய்யும் காலம் இது" அப்படியாயின் நீங்கள் சொல்ல வரும் விடயம்தான் என்ன்? நல்ல பண்பும், படிப்பும், நல்ல குடியில் பிறந்தவர்களும், கூடவே நானும் ஒன்றை சேர்த்துக்கொள்ளுகின்றேன் அழகும் இருப்பவர்கள்தான் காதலிக்கும் தகுதி உடயவர்கள் என்கின்றீர்களா? அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், என்னை போண்ரவர்கள் உங்கள் கருத்துடன் முறன்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது.
அடுத்து நான் இன்னும் ஒரு விடயத்தை இங்கே கூற வேண்டி உள்ளது. காதல் என்பது மனதால் ஏற்படும் இணக்கப்பாடு. நீங்கள் குறிப்பிட்டதனை போன்று. ஒரு வாலிபனுக்கு இரண்டு வயதில் மூத்த சகோதரிகள் இருந்ததாகவும், அப்படி இருக்கையில் அந்த வாலிபன் வேறு ஒரு பெண்ணை காதலித்தாகவும். பின்னாளில் அந்த வாலிபன் குடும்பப் பாரத்தினை கருத்திற்கொண்டு அந்த காதலினை தவிர்த்ததாகவும் கூறினீர்கள். அந்த வலிபன் அப்படி செய்திருந்தால் அது தவறுதான். அனால் அந்த வாலிபனை பற்றி கொஞ்சம் சிந்தித்தீர்களா? அவனும் ஒரு சாதாரண ஆண்மகன் தானே, அவனுக்கும் ஆசா பாசங்கள் இருந்திருக்கும் அல்லவா? இளவயதில் அவனுக்கும் காதல் வந்திருக்கலாம். அவன் மீது தமிழ் சமூகத்தால் சுமத்தபட்டுள்ள சீதணம் என்னும் கொடிய சுமைதனை பற்றி சிந்தித்தீர்களா? இன்றய எமது சமூகத்தில் பெண்ணிற்கும் கொடுக்க வேண்டிய சீதணத்தை அந்த இளம் வாலிபன் தானே சுமக்க வேண்டி உள்ளது. அந்த வாலிபன் மீது உஙளுக்கு அனுதாபம் வரவில்லையா?
நீங்கள் இப்படி சொல்லி இருக்கலாம், பெண்களுக்கு எதிரான அடக்கு முறையை எதிர்த்து போராட வேண்டும் என்று. அதற்காக என்னை போன்றவர்களும் கைகோர்த்து நின்றிருப்பார்கள். காதல் என்பது இரு பாலாருக்கும் இருக்கக் கூடிய வலியே. இரு பாலாரும் ஏமாற்றப்படுகின்றார்கள். எத்தனையோ காதலர்கள் கண்ணியமாக வாழ்கின்றார்கள். உடலில் ஏற்படுகின்ற இரசாயன தாக்கங்களுக்கு இரு பாலருமே பாதிக்க படுகின்றார்கள். சமூகத்தில் சில ஆண்கள் விதிவிலக்கு அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களை சமூகம் தண்டிக்கும்.
ஒரு விரல் செய்யும் தவறிற்காக எல்லா விரல்களையும் வெட்டுவது நன்றன்று.
அன்புடன்
மதுரன்