01-28-2005, 04:58 PM
இந்தியாவின் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடையே முரண்பாடு வலுக்கிறது.
(வெள்ளிக்கிழமை 28 சனவரி 2005 நடேசன்)
இந்தியாவின் தென்கிழக்காசிய மற்றும் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக இந்தியத் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கையில் ஏற்பட்ட இயற்கையழிவும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கையில் தரையிறங்கியமையும் இந்த முரண்பாட்டை மேலும் வலுவடையச் செய்துள்ளதாகத் தெரியவருவதுடன் இந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தெற்காசியவியல்துறைப் பேராசிரியர் சகாதேவன் ஊடகம் ஒன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்கா இலங்கையில் தரையிறங்குவது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கையரசு கலந்தாலோசிக்காமை பாரிய சர்ச்சையினை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவிடம் தெற்காசியப் பிராந்தியக் கொள்கை வகுப்பில் தற்போது சரிசமமான கொள்கைகள் பேணப்படுவதில்லையென்றும் இந்திய அரசியல் தலைமையில் இது பலமுறையெடுத்துக் கூறப்பட்டும் சீர் செய்யப்படாத ஒரு விடயமாகக் காணப்படுவதாகவும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களிடையே பாரிய முரண்பாடு இருப்பதாகவும் இவை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் பிராந்தியங்கள் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுமென்றும் எச்சரித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக புலனாய்வு நிபுணர் நாராயணன் நியமனம் - இலங்கை விவகாரங்களில் பரிச்சயமிக்கவர்.
(வெள்ளிக்கிழமை 28 சனவரி 2005 அருள்)
இலங்கை விடயங்களில் பரிச்சயமிக்க புலனாய்வு நிபுணரான கே.நாராயணன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் விசேட ஆலோசகரும் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவருமான கே.நாராயணன் (வயது-70) இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இப் பதவியிலிருந்த கே.என்.டிக்சிற் இம்மாத ஆரம்பத்தில் காலமானார். அதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. நாராயணன் பாதுகாப்புத் துறையின் ஒரு நிபுணர். இலங்கை விடயங்களில் விசேட நிபுணத்துவம் பெற்றவர் என்று தெரிவிக்கப்படு கின்றது. 1989-90 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு அலுவலகத் தலைவராக நாராயணன் கடமை யாற்றினார். இந்தக் காலப்பகுதியில் இந்தியப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் புலனாய்வு கூட்டுக் குழுத் தலைவரானார். அதன்பின் 1991இல் மீண்டும் புலனாய்வு அலுவலகத் தலைவரானார். அடுத்த ஆண்டில் ஓய்வுபெற்றார்.
இந்தியாவில் தற்போதைய அரசு பதவிக்கு வந்த உடனேயே கடந்த மேமாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவரை உள்நாட்டு பாதுகாப்புக்கான விசேட ஆலோசகராக நியமித்திருந்தார்.
நன்றி: நிதர்சனம்