Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மரத்தினால் வடிவமைக்கப்பட்ட ..
#5
தென்னாபிரிக்க கடலோரத்தில் கரை சேர்ந்த இலங்கை அனுமன்.

சுனாமி பேரலையில் சிக்கி இலங்கையில் இருந்து தென்னாபிரிக்கா சென்ற அனுமன் சிலை கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் வடக்கு கடலோரத்தில் 2 பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கடற்கரையில் ஒரு சிலை ஒதுங்குவதைக் கண்டனர். அதை அவர்கள் வெளியே எடுத்து வந்தனர். அந்த சிலை அனுமன் கடவுள் சிலை என்பது தெரிய வந்தது. இது 25 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இது முழுவதும் கலர் பூசப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் ".சிறிலங்கா" என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த அனுமன் சிலை இலங்கையில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் இலங்கை கடலோரத்தை சுனாமி பேரலைகள் தாக்கிய போதுää இந்த அனுமன் சிலை கடலுக்குள் இழுத்து வரப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக கடலில் மிதந்தபடி இது பயணம் செய்துள்ளது.

கடல் அலைகளின் போக்கில் போன இந்த சிலை கடைசியில் தென் ஆபிரிக்காவில் கரை ஒதுங்கி உள்ளது. இது சுனாமி அலைகளால் இழுத்து வரப்பட்டது தான் என்பதை தென்னாபிரிக்காவில் உள்ள கெப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியை ஒட்டி உள்ள நாடுகளை துவம்சம் செய்த சுனாமி அலைகள் நிறைய உடைமைகளையும் கடலுக்குள் வாரி சுருட்டி சென்று விட்டது. அந்தச் பொருட்களுடன் செருப்புää உடைகள் போன்றவை கடல் அலைகளில் மிதந்தபடி உலகின் மற்ற கண்டங்களுக்கும் சென்றுவிட்டன.
பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் இந்த உடைமைகள் மிதப்பதாகத் தெரியவந்துள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 01-26-2005, 06:11 PM
[No subject] - by aathipan - 01-26-2005, 07:34 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 11:49 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:36 PM
[No subject] - by kuruvikal - 01-28-2005, 04:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)