01-27-2005, 12:30 AM
பீதுருதாலகால மலையில் அமெரிக்க கண்காணிப்பு மையம் ?
அமெரிக்க படைகள் இலங்கையின் அதி உயர் பிரதேச மலைச்சிகரமான பீதுருதாலகால மலையில்
அமெரிக்க கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வான்பரப்பில் பறப்பில் ஈடுபடும் வானூர்திகளை கண்காணிப்பதற்கான நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு அனுமதி கோரியே கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புகளினாலும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அமெரிக்க படைகளின் கோரிக்கையினை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள் நாட்டின் பல பாகங்களிலும் அதிசக்தி மிக்க தொலைத் தொடர்பு சாதனங்களை பொருத்தியுள்ளதாகவும் இதனால் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என இந்திய பாதுகாப்பு தரப்பு கருதுவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சூரியனில் புதினம் கூறியதாக