Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#53
சுனாமி - அரசியல் பேரலை

இலங்கையின் ஒன்றன்பின் ஒன்றாகத் தாக்கிய சுனாமிப் பேரலைகள் மிகவும் பெரியன. அதேபோன்றே இலங்கையை தற்பொழுது தாக்கும் சுனாமி அரசியலும் மிகப்பெரியதாகவே உள்ளது. ஆனால சுனாமி அரசியலின் வளைவுகளை தற்பொழுது மதிப்பீடு செய்தல் என்பது சாத்தியமானதாகவில்லை தற்பொழுது ஆரம்பித்துள்ள இச்சுனாமி அரசியலின் விளைவானது எத்தனை காலத்துக்குப் பாதிப்புக்களை விளைவிக்கும் அன்றி இச்சுனாமி அரசியலே இலங்கையின் ஏன் இப்பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் ஒன்றாகிவிடுமா என்பதை தற்பொழுது அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது.

சுனாமி அரசியலானது உள்நாட்டு அரசியலில் இருந்து சர்வதேச அரசியல் வரையில் வியாபித்ததாகவும் தாக்கம் விளைவிப்பதாகவும் உள்ளது அதாவது சிறிலங்காவில் கட்சி சார்ந்து நிவாரணப்பொருட்கள் வழங்குதல் தமிழர் தாயகப்பகுதி நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் புறந்தள்ளப் படுதலில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆயுதப்படைகள் கடற்படைக்கலங்கள் விமானப்படை உலங்குவானுர்திகள் என்பன இலங்கையில் தரையிறங்கியதன் மூலம் இப்பிராந்தியத்தின் இராணுவச்சமநிலையில் புதியசமன்பாடு தேடப்படவேண்டியதானவரையில் நிலைமையைத் தோற்றிவித்துள்ளன.

தற்பொழுது இலங்கைக்குத் துருப்புக்களை அனுப்பியுள்ள சகல நாடுகளும் மனிதாபிமானப் பணிக்கே துருப்புக்களை அனுப்பிவைத்திருப்பதாகவும் அவை தமது பணிமுடிந்ததும் மீளப்பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவுப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால்... எந்தவொரு நாடும் தம்மால் மேற்கொள்ளப்படும் நிவாரணப்பணிகள் குறித்த வரையறைகள் எல்லைகள் மற்றும் படையணிகள் வெளியேறுவதற்கான காலஎல்லை என்பன பற்றி எதையுமே கூறவில்லை.

இதேவேளை இலங்கை தொடர்பாக இச்சுனாமி அரசியல் அணுகுமுறையில் அமெரிக்கா போன்ற சிலநாடுகளின் நிலைப்பாடு பார்வை என்பனவற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டு;ள்ளன. அதேவேளை இந்தியா போன்ற நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடத்தக்கதென்னவெனில் தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை அதாவது இராஜதந்திர அணுகுமுறையில் மாற்றம் செய்தவை சில முன்னேற்றங்களை கண்டுகொண்டுள்ளன. மாற்றம் செய்யாத நாடுகள் சிலநெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ள வேண்டியதாகியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க அரசு விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் நிவாரணப்பணிகள் குறித்து அக்கறைகொண்டுள்ளதாகக் காட்டிக்கொண்டுள்ளது போன்று இந்தியஅரசுகாட்டிக்கொள்ளவும் இல்லை. அது குறித்து அக்கறை வெளிப்படுத்தியதாகவும் இல்லை. இது ஒரு வகையில் இந்திய அரசு இராஜதந்திரரீதியிலான பின்னடைவை சந்தித்துள்ளதோ என்றே எண்ணவைக்கிறது

சுனாமிப் பேரலைகளினால் இலங்கையும் மாலைதீவும் தாக்கப்பட்ட போதும் இந்தியா விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது நிவாரணப் பொருட்கள்ää மீட்புப் பணியாளர்கள் சுகாதார சேவையினர் ஆகியோரை அனுப்பிவைத்திருந்தது தமது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தைக் கவனத்திற் கொண்டதைவிடத் தென்னாசியப் பிராந்திய நாடுகளில் அதி தீவிர அக்கறை கொண்டது ஏனெனில் இப்பிராந்தியத்தில் தனது மேலாண்மையையும் ஏனைய நாடுகளின் பிரவேசத்திற்கு அவசியமில்லை என்பதை வெளிப்படுத்துவதுமே நோக்கமாகும்.

ஆனால் சுனாமியால் விளைந்த பேரனர்த்தம் பெரிதாகவும் மேற்குநாடுகள் இதில் காட்டிய அக்கறையும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மேற்கு நாடுகளின் நிவாரணங்களையும் படையணிகளையும் வரவேற்கத்தயாராக இருந்தமையும் இந்தியாவின் விருப்பு வெறுப்புக்களையும் மீறி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

அதாவது இந்தியா அதிகளவு மீட்புப் பணியாளர்களையும்ää உதவிகளையும் வழங்கிய போதும் தற்போதைய சு10ள்நிலையில் அதாவது சுனாமி அரசியலில் இந்திய இராஜதந்திரம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பதே யதார்த்தமானதாய் உள்ளது. அதாவது அமெரிக்க உள்ளிட்ட அதன் சார்பு நாடுகளின் பிரவேசத்தை இந்தியா தடுத்து நிறுத்தவோ அன்றி மட்டுப்படுத்தவோ முடியாத நிலையே உருவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய அரசியலைக் கையாள்வது என்பது தனியாக சிறிலங்கா அரசாங்கத்தை கையாள்வது என்பதாகமாட்டாது. இலங்கைத் தீவில் உள்ள இருவேறு சக்திகளை கையாள்வது தவிர்க முடியாததாகும். இதுவே யதார்த்தமும் கூட இது சுனாமி அரசியலுக்கும் பொருத்தப்பாடான தொன்றே.

ஆனால் இந்திய அரசாங்கம் இதனைப் புரிந்துகொண்டதாக இருக்கவில்லை. இலங்கைத்தீவில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் இரு சக்திகளில் ஒன்றை இந்தியா தொடர்ந்தும் புறக்கணித்தே வந்துள்ளது. இத்தனைக்கும் சுனாமி அலைகளின் தாக்கம் இவ்விரு சக்திகளின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த தென்பதும் மனிதாபிமான நிவாரணப்பணி என்பது இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியவையாகவும் இருந்தன.

ஆனால் இந்தியா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கான நிவாரணப் பணி குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியிருந்த போதும்- இந்தியத் தூதுவர் நிருபாமாராவ் புலிகள் தம்மிடம் எதனையும் கோரவில்லையெனக் கூறத்தட்டிக் கழித்திருந்தார். அதுமட்டுமின்றி அரசிடம் மட்டுமே நிவாரணப் பொருட்கள் உதவிகள் வழங்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

இதேவேளை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் குறிப்பிடத் தக்கதானதொரு மாற்றம் தென்படவே செய்தது. அதாவது இந்தியா போன்று அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடாக இருந்தபோதும் அமெரிக்கா முன்னைய நிலைப்பாட்டில் இருந்து தனது அணுகு முறையில் சிறு சிறுமாற்றத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் தென்படும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் இம்மாற்றம் வெளிப்படத்தொடங்கியது. இது அமெரிக்க ஊடகங்களினால் சுனாமி பேரலையின் பின்னரான அவதானிப்பின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றமா? அன்றி அமெரிக்க அரசின் பார்வையில் ஏற்பட்ட மாற்றமா? என்பதை எம்மால் தற்பொழுது உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் அமெரிக்காவின் சி.என்.என். போன்ற தொலைக் காட்சிகள் அமெரிக்காவின் தேசியக் கொள்கையை சர்வதேசம் தொடர்பான பார்வையை வெளிப்படுத்துபவை எனப் பொதுவாகவே கருதப்படுவதுண்டு. இத்தொலைக்காட்சியானது சுனாமி பேரலை அழிவுகள் குறித்து முதன்மைப்படுத்தியதோடு தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டதோடுää அவை விடுதலைப்புலிகளினதும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடு குறித்து பாராட்டும் தெரிவித்திருந்தது. அது மட்டுமல்ல தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடக உதவிகள் வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதேசமயம் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைப் பார்வையிட்ட வோஷிங்டன் ரைம்ஸ் பத்திரிக்கையில் ஏ.பி செய்தியாளர் எழுதிய கட்டுரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமக்கென ஒரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் அது திறம்படச் செயற்படக் கூடியதாகவுள்ள தென்பதையும் வெளிக்காட்டியிருந்தார்.

அவர் விடுதலைப் புலிகளது மீட்புப் பணி நடவடிக்கைகள் அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல் இவ்வாறானதொரு சிரமம் மிக்கதான பணியை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனி நாட்டுக்கொள்கைக்கு முன்னோடியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உள்ளதென்பதை நீரூபித்துள்ளது எனத் தனது கட்டுரையில் தெரிவிக்கின்றார்.

இதேவேளை சிக்காக்கோ ரிபுயன் சஞ்சிகையின் வெளிநாட்டுச் செய்தியாளர் கிம் பாக்கர் விடுதலைப்புலிகள் குறித்த பார்வை மாறியுள்ளதாகத் தெரிவிக்கின்றார். இரண்டு தசாப்த காலயுத்தத்தின் மூலம் சிறப்பானதொரு இராணுவத்துக்குரிய திறமையை பெற்றிருப்பதை சுனாமி அலை பாதிப்புக்குள்ளானவர்களை மீட்கும் பணியிலும் நிவாரண உதவிகளை வழங்குவதிலும் இருந்து தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது எனத் தெரிவிக்கின்றார். இதேவேளை நியஸ்வீக் சஞ்சிகையோ யார் விரும்பியோ விரும்பாமற் போனாலோ விடுதலைப்புலிகள் இயக்கம் நிராகரிக்க முடியாத சக்தி என்பதையும் சிறிலங்கா அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சர்வதேச நாடுகள் புலிகளுடன் உறவு கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது எனத் தெரிவிப்பதோடு அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்துவது போன்றதான சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

இதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபிஅனானை செல்லவிடாது சிறிலங்கா அரசங்கம் தடுத்தமை குறித்து திருப்தி கொள்ளாததோடு சுனாமி பேரலையின் தாக்கத்தின் பின்னர் ஒரு சுமூக நிலையினை அடையக்கூடிய சந்தர்ப்பத்தினை சிறிலங்கா அரசு வீணடித்து வருவதுபோல் தெரிகிறது எனவும் அரசு மீது குறை கூறியுள்ளது.

இந்தவகையில் அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சில கேள்விகளை எழவைக்கின்றது. இதில் முதலில் எழும் கேள்வியானது இவை நிலைமைகளை நேரில் அவதானித்ததன் அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலுமான மாற்றமா? அன்றி அமெரிக்காவின் நிலைப்பாட்டில் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய ரீதியிலான மாற்றமா? என்பதேயாகும்.

ஊடகங்களில் அதாவது சுனாமிப்பேரலைகளின் அழிவையும் தமிழர் தாயகத்திற்கு சிறிலங்கா அரசின் நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்ற மனிதநேய உணர்வின் அடிப்படையிலானது எனின் அது முழுமைக்கும் பொருத்தப்பாடான தொன்றாகத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் துன்பதுயரங்கள் சுனாமிப்பேரலைகளினால் மட்டும் ஏற்பட்டவையல்ல. சுமார் 20 வருடங்களுக்கு மேலாகவே தமிழ்மக்கள் இத்தகைய துன்பதுயரங்களைச் சுனாமியினால் அல்லாது விடினும் யுத்தத்தினால் அனுபவித்தவர்களாகவே உள்ளனர்.

இத்தகைய நிலையில் சுனாமியால் ஏற்பட்ட அழிவினால் மட்டும் ஏற்பட்ட மாற்றமாக இருக்க முடியுமா? இதனால் அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது தனியாக அவற்றின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட என்ற முடிவிற்கு வருதல் பொருத்தப்பாடனதாக இருக்கமாட்டாது. அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் சிறிதளவிலேனும் ஏற்பட்டுள்ள மாற்றமமாகவே கொள்ளத்தக்கது.

இது நியஸ் வீக் சஞ்சிகையின் கட்டுரையிலும் சற்றுவெளிப்படுவதாகவே உள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிலையத்தின் பிரதிநிதிகள் தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளதை சுனாமி நிவாரணப் பணிகளைக் கையாளும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறும் இச்சஞ்சிகை இதனை நாம் அவதானத்துடன் செய்கிறோம் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் சட்டக்கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் நாம் இதனைச்செய்கிறோம். அவர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்பதும்ää நாம் இங்கிருப்பது மனிதாபிமான நோக்கத்திற்காகவே என்பதை அவர்கள் தவறாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறியதாகத் தெரிவிக்கின்றது.

இது அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமெனில் இம்மாற்றம் எதற்காக? என்ற கேள்வியும் எழுகின்றது. அதாவது இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது காலை வலுவாக ஊன்றிக்கொள்ள சுனாமிப் பேரலைகளை பயன் படுத்திக்கொள்ள முற்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றது.

அமெரிக்காவைப் பொறுத்து சிறிலங்காவுடன் நெருக்கமான உறவு உண்டு இந்தியா உடனடியாகப் பெரும் உதவி புரிந்தபோதும் அமெரிக்காவிற்கு ஜனாதிபதி சந்திரிக்கா அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கைக்குத் துருப்புக்களை அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறானால் புலிகள் தொடர்பான கடந்தகால நிலைப்பாட்டில் அமெரிக்கா மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவைதான் என்ன? அங்குதான் இந்திய இராசதந்திரத்திலிருந்து அமெரிக்க இராசதந்திரம் வேறுபடுவது தெரிகிறது. அதாவது விடுதலைப் புலிகள் ஒரு வலுவான சக்தியாகவும் ஒரு சிறந்த கூட்டமைப்பைக் கொண்டதாகவும் இருக்கையில் அவ்வமைப்பை ஓரம் தள்ளுவதன் மூலம் தமது பிரசன்னத்திற்கு இலங்கைத்தீவின் ஒரு பகுதியிலிருந்து ஆட்சேபம் வருவதை அமெரிக்கா தவிர்த்துக்கொள்ள விரும்பியிருக்கக்கூடும். வேறுவிதமாகக் கூறுவதானால் அமெரிக்கப் படையினர் வருவதினால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம் அவநம்பிக்கை போக்கப்பட வேண்டும் என அமெரிக்கா கருதியிருக்கக் கூடும்.

அமெரிக்கா கூறிக்கொள்வது போன்று அமெரிக்க இராணுவம் இங்கு நிலை கொள்ளப் போவதில்லை எனக்கொண்டாலும் கூட அமெரிக்கா இலங்கையிலுள்ள வலுவான சக்தியுடைய சிறுபாண்மையினம் ஒன்றுடன் முரண்படாது இருப்பது தனது எதிர்கால நடவடிக்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்குமென கருதியிருக்க முடியும். இதேவேளை அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரிää அன்றி வேறெந்த உலகநாடுகளாக இருப்பினும் சரி சுனாபிப் பேரலைகளினால் ஏற்பட்டுள்ள வாய்ப்பைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன என்பதை எவருமே நிராகரித்து விடமுடியாது. அதேபேன்று இந்நாடுகளில் சில இப்போட்டியில் வெற்றி பெற்றும் சிலபின்னடைவுகளை சந்திப்பதற்கான வாய்ப்;புக்களும் உண்டு. ஆனால் ஒன்று இச்சுனாமி அரசியலில் வெற்றி பெறப்போகிறவர்கள் இப்பிராந்தியத்தில் இராணுவச் சமநிலையிலும் தாக்கத்தை விளைவிப்பவர்களாக நிச்சயம் இருப்பார்கள். ஆகயினால் இச்சுனாமி அரசியலுக்கென புதிய நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக் கொள்ளுதல் அனைவருக்கும் அவசியமானதாகவே இருக்கும். மாறாக நிலையான அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகள் கொண்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல எத்தகைய விவகாரத்திலும் வெற்றி பெறப்போவதில்லை.

நன்றி ஈழநாதம் & பதிவு
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)