01-26-2005, 03:02 PM
அமெரிக்கப் படை தங்க பொருத்தமான கட்டிடங்கள் தேடப்படுகின்றன
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சிப் பகுதியில்இ மருத்துவ உதவிகளை வழங்குவதாகக் கூறப்படும் அமெரிக்கக் கடற்படையினரை தங்க வைக்க பருத்தித்துறை முனைப் பகுதியில் வசதியான கட்டிடங்கள் தேடப்பட்டு வருகின்றன.
பருத்தித்துறை முனையின் தும்பளைப் பகுதியில் கடற்கரையை அண்டியதாகவும் பிரதான வீதியை அண்மித்ததாகவும் இருக்கக் கூடிய கட்டிடமே இவர்களுக்குத் தேவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த 39 பேர் மந்திகை ஆஸ்பத்திரியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் வாகனங்கள் மூலம் பருத்தித் துறை சென்று மாலை நேரம் திரும்புகின்றனர்.
இரண்டு வாரங்களே பருத்தித்துறையில் தங்கியிருந்து மருத்துவ உதவிகளை செய்யவுள்ளதாக அமெரிக்கக் கடற் படையினர் முதலில் தெரிவித்திருந்த போதிலும்இ தற்போது இவர்கள் பருத்தித்துறையில் தங்குவதற்காக கட்டிடங்கள் தேடப்படுகின்றமையானதுஇ இங்கு இவர்கள் நீண்ட நாட்கள் தங்கும் சாத்தியமிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடற்கோளினால் பருத்தித்துறை முனைப் பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு எஞ்சியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் இந்தப் பகுதியில் தாங்கள் தங்குவதற்கு அமெரிக்கப் படையினர் இடம் தேடுவது குறித்தும் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினக்குரல்