08-14-2003, 08:13 AM
<img src='http://www.thamilan.info/tamil/bilder/cinema/01.jpg' border='0' alt='user posted image'>
அகதிகளுக்காக ஒரு தமிழ்ப்பேனா சிந்திய கண்ணீர்த்துளிகளே விருது பெற்றுள்ளது:
சிறந்த பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து
இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 5ஆவது முறையாகப் பெற்ற கவிஞர் வைரமுத்து, கண்ணதாசன்விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் விடுத்துள்ள அறிக்கை: 5 ஆம் முறையாக தமிழ் மீண்டும் தேசிய விருது பெற்றிருக்கிறது. என் மனதில் பொங்கும் மகிழ்ச்;சியை உலகத் தமிழ் மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்தாம் முறை விருது பெற்றதன் மூலம் இந்திய மொழிகளுள் தமிழ் உச்சத்தை எட்டியிருக்கிறது. தமிழ் கூறு நல்லுலகத்தின் தோள்களில் இந்த வெற்றி மாலையைக் காணிக்கையாக்குகிறேன்.
கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்கள் வெறும் படம் சார்ந்த பாடல்கள் அல்ல. உலகமெங்கும் அல்லல்படும் அகதிகளுக்காக ஒரு தமிழ்ப் பேனா சிந்திய கண்ணீர்த் துளிகள் அவை. எந்த நாட்டு குடிமகனும் சொந்த நாட்டை இழந்து அகதியாகிவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பாடல்களின் கதறல்.
உலக அமைதிக்காக இந்தியா உயர்த்திப்பிடிக்கும் வெள்ளைக்கொடியென்றும் இந்தவிருதைக் கருதுகிறேன். திரை உலகில் என்னை விதைப்பவர், வளர்த்தவர், காப்பவர் அனைவருக்கும் நனைந்த உள்ளத்தோடு நன்றி சொல்கிறேன்.
நன்றி - http://www.thamilan.info/tamil/html/cinema...ma/cinema_1.htm

nadpudan
alai
alai