01-25-2005, 07:39 AM
தென்றலின் குறும்பு
உயிரை மெதுவாய்
உரசிப் பார்க்கும்
மலரின் மணத்தைத்
திருடப் பார்க்கும்
இலையின் பேச்சை
ஒட்டுக் கேட்கும்
இறகை சிறகை
கோதிவிடும்
திரையை மெள்ள
விலக்கிப் பார்க்கும்
கவிதைத் தாளைத்
தள்ளி விடும்
காதலர் நடுவில்
நுழையப் பார்க்கும்
காதலின் வாசம்
முகரப் பார்க்கும்
களைத்த அனைத்தையும்
தாலாட்டும்
தொட்டிலின் மணியை
ஆட்டிப் பார்க்கும்
குழந்தையின் போர்வையை
விலக்கப் பார்க்கும்
பண்ணிய பணியில்
களைத்துப் போய்
தூங்கும் இமைமேல்
தூங்கிப் போகும்.
உயிரை மெதுவாய்
உரசிப் பார்க்கும்
மலரின் மணத்தைத்
திருடப் பார்க்கும்
இலையின் பேச்சை
ஒட்டுக் கேட்கும்
இறகை சிறகை
கோதிவிடும்
திரையை மெள்ள
விலக்கிப் பார்க்கும்
கவிதைத் தாளைத்
தள்ளி விடும்
காதலர் நடுவில்
நுழையப் பார்க்கும்
காதலின் வாசம்
முகரப் பார்க்கும்
களைத்த அனைத்தையும்
தாலாட்டும்
தொட்டிலின் மணியை
ஆட்டிப் பார்க்கும்
குழந்தையின் போர்வையை
விலக்கப் பார்க்கும்
பண்ணிய பணியில்
களைத்துப் போய்
தூங்கும் இமைமேல்
தூங்கிப் போகும்.
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

