Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள்
#3
Mathan Wrote:ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள். - செங்குட்டுவன்.

யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் அப்பக்கடையொன்றை நடத்திவருவது தெரிந்ததே. இந்த அப்பக்கடை சில மாதங்களின் முன்பு பொதுமக்களால் அடித்து நெருக்கப்பட்டதும் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டு தற்போது சுடச் சுட அப்பம் (HOT HOT HOPPER) என்ற விளம்பரப்பலகை நிறுத்தப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

எப்பொழுதும் எவரையாவது சுட்டே பழக்கப்பட்ட ஆமிக்காரர்கள் இப்பொழுது சமாதான காலத்தில் சுடுவதற்க்கு அதாவது துப்பாக்கியால் சுடுவதற்கு வாய்ப்பு குறைந்து போய் விட்டதால் அப்பம் சுட வெளிக்கிட்டு விட்டார்கள்.

HOT HOT HOPPER என்று எழுதுவதற்கு பதிலாக SHOOT SHOOT HOPPERஎன்று எழுதியிருந்தால் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் ஒரு ஓய்வு பெற்ற அரசஊழியர். அதுவும் சரிதான்?!

பெயர்தான் அப்பக்கடையேயொழிய அது உண்மையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் சேகரிப்பு மையம்தான். அதுமட்டுமல்ல அங்கிருந்தே சமூக விரோத சக்திகளும் தேசவிரோதக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் இராணுவ மற்றும் ஏனைய படைத்தரப்பு அபிலாi~களை நிறைவேற்ற கலாசார சீரமிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது உண்மைதான்.

மக்களோடு மக்கள் போல் அங்கு அப்பம் சாப்பிட வருபவர்கள் போல் இருக்கும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அங்கிருந்த வண்ணம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வாந்திகளை கட்டவிழ்த்து விடுவதுடன் தேசவிரோதச் சக்திகளை அவர்களின் பலவீனங்களை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் உளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் அப்பம் வாங்கச் சென்ற சிறுவன் ஒருவன் மீது அங்கிருந்த சிவில் உடைதாரி ஒருவர் பாலியல் துபிரயோகம் மேற்கொள்ள முயன்றதாக தெரிகிறது. அவ்வேளை பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வழியால் வரவே அந்தச் சிறுவன் தப்பி ஓடியிருக்கிறான்.

இப்போது இதுபோன்ற அப்பக்கடைகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பரவலாக அமைக்கத் தொடங்கியுள்ளனராம். மீசாலையில் இப்படியொரு முயற்சிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது.

அப்பக் கடையை நோக்கி அப்பாவிமக்கள் அதிகம் வர அப்பக்கடையில் வெளிப்புறத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து இலவசமாக திரைப்படங்களை காட்டவும் திட்டமுட்டுள்ளதாம்?

இது தொடர்பாக அப்பகுதியில் வாழும் வயதான அம்மாவிடம் கேட்டபோது?.!

ஓமோம்?.அவை ஆக்களைச் சுட்டு சுட்டு களைச்சுப்போய் அப்பம் சுட வெளிக்கிட்டினம்... வெட்கங்கெட்டு நக்கிப் பிழைக்கிறதுகள் தான் அங்கைபோய் சாப்பிடும்?! என்றார் சினத்துடன்.

Eelanaatham
:evil: :evil: :evil:
. .
.
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 01-24-2005, 07:20 PM
Re: ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் - by Niththila - 01-24-2005, 08:40 PM
[No subject] - by aathipan - 01-24-2005, 09:13 PM
[No subject] - by sinnappu - 01-24-2005, 09:55 PM
[No subject] - by Niththila - 01-24-2005, 10:13 PM
[No subject] - by aswini2005 - 01-24-2005, 11:29 PM
[No subject] - by thamizh.nila - 01-25-2005, 02:59 AM
[No subject] - by Thaven - 01-25-2005, 03:02 AM
[No subject] - by KATPUKKARASAN - 01-25-2005, 03:48 AM
[No subject] - by Mathan - 01-25-2005, 04:18 AM
[No subject] - by sinnappu - 01-25-2005, 08:12 AM
[No subject] - by tsunami - 01-25-2005, 10:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)