Yarl Forum
ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் (/showthread.php?tid=5640)

ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் - Mathan - 01-24-2005

ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள். - செங்குட்டுவன்.

யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் அப்பக்கடையொன்றை நடத்திவருவது தெரிந்ததே. இந்த அப்பக்கடை சில மாதங்களின் முன்பு பொதுமக்களால் அடித்து நெருக்கப்பட்டதும் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டு தற்போது சுடச் சுட அப்பம் (HOT HOT HOPPER) என்ற விளம்பரப்பலகை நிறுத்தப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

எப்பொழுதும் எவரையாவது சுட்டே பழக்கப்பட்ட ஆமிக்காரர்கள் இப்பொழுது சமாதான காலத்தில் சுடுவதற்க்கு அதாவது துப்பாக்கியால் சுடுவதற்கு வாய்ப்பு குறைந்து போய் விட்டதால் அப்பம் சுட வெளிக்கிட்டு விட்டார்கள்.

HOT HOT HOPPER என்று எழுதுவதற்கு பதிலாக SHOOT SHOOT HOPPERஎன்று எழுதியிருந்தால் இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் ஒரு ஓய்வு பெற்ற அரசஊழியர். அதுவும் சரிதான்?!

பெயர்தான் அப்பக்கடையேயொழிய அது உண்மையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் சேகரிப்பு மையம்தான். அதுமட்டுமல்ல அங்கிருந்தே சமூக விரோத சக்திகளும் தேசவிரோதக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் இராணுவ மற்றும் ஏனைய படைத்தரப்பு அபிலாi~களை நிறைவேற்ற கலாசார சீரமிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது உண்மைதான்.

மக்களோடு மக்கள் போல் அங்கு அப்பம் சாப்பிட வருபவர்கள் போல் இருக்கும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அங்கிருந்த வண்ணம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வாந்திகளை கட்டவிழ்த்து விடுவதுடன் தேசவிரோதச் சக்திகளை அவர்களின் பலவீனங்களை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் உளவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் அப்பம் வாங்கச் சென்ற சிறுவன் ஒருவன் மீது அங்கிருந்த சிவில் உடைதாரி ஒருவர் பாலியல் துபிரயோகம் மேற்கொள்ள முயன்றதாக தெரிகிறது. அவ்வேளை பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வழியால் வரவே அந்தச் சிறுவன் தப்பி ஓடியிருக்கிறான்.

இப்போது இதுபோன்ற அப்பக்கடைகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பரவலாக அமைக்கத் தொடங்கியுள்ளனராம். மீசாலையில் இப்படியொரு முயற்சிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது.

அப்பக் கடையை நோக்கி அப்பாவிமக்கள் அதிகம் வர அப்பக்கடையில் வெளிப்புறத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து இலவசமாக திரைப்படங்களை காட்டவும் திட்டமுட்டுள்ளதாம்?

இது தொடர்பாக அப்பகுதியில் வாழும் வயதான அம்மாவிடம் கேட்டபோது?.!

ஓமோம்?.அவை ஆக்களைச் சுட்டு சுட்டு களைச்சுப்போய் அப்பம் சுட வெளிக்கிட்டினம்... வெட்கங்கெட்டு நக்கிப் பிழைக்கிறதுகள் தான் அங்கைபோய் சாப்பிடும்?! என்றார் சினத்துடன்.

Eelanaatham

- KULAKADDAN - 01-24-2005

நன்றி ... இது 4/5மாதத்துக்கு முந்தி வந்ததெண்டு நினைக்கிறன்.....

Re: ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள் - Niththila - 01-24-2005

Mathan Wrote:ஆக்களைச் சுட்டவர்கள் அப்பம் சுடுகிறார்கள். - செங்குட்டுவன்.

:evil: :evil: :evil:

- aathipan - 01-24-2005

எனக்கு இந்தச் செய்தி தெரியாது. இதை வெளியிட்டதற்கு நன்றி மதன். எப்படியோ ஆமியை அப்பக்காரன் ஆக்கிய பெருமை எம் மக்களைச்சாரும். வரலாற்றில் இச்செய்தி நகைச்சுவையுடன் நினைவு கூறப்படும்.

- sinnappu - 01-24-2005

எடயப்பா எப்பிடியும் ஒரு கள்ளுக்கொட்டிலையும் போடச்சொல்லுங்கோடாப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Niththila - 01-24-2005

ஏனப்பு நீங்கள் எப்படி இங்கயிருந்து அங்க போய் கள்ளுக் குடிக்கப் போறியளே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- aswini2005 - 01-24-2005

sinnappu Wrote:எடயப்பா எப்பிடியும் ஒரு கள்ளுக்கொட்டிலையும் போடச்சொல்லுங்கோடாப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்புவுக்கு எங்கெ போனாலும் கள்ளுக்கொட்டில் ஞாபகம்தான்.

ஏனணையப்பு கள்ளிலை அப்பிடியென்னணை சுவையைக் கண்டியள்.

எணை ஆச்சி உந்தக்கிழவன் கள்ளடிச்சே கைலாயம் போகப்போகுதணை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thamizh.nila - 01-25-2005

நீங்கள் தேவையில்லாமல் அப்புவை பற்றீ கவலைபடுறியள்...அப்புக்கு கள் அடிக்காட்டித்தான் கைலாசம்.. :mrgreen:

தகவலுக்கு மிக்க நன்றி.

- Thaven - 01-25-2005

தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - பட்டினத்தார்

அப்பத்தில நஞ்சு இல்லாவிட்டாலும் அவர்களின் மனங்களில் நஞ்சு இருக்கும்
யாழ்ப்பாணத்தவர்களே கவனம் அப்பம் வீட்டைச்சுடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- KATPUKKARASAN - 01-25-2005

உவங்களுக்கு இப்ப தான் விளங்குது, தாங்கள் அப்பம் சுடத்தான் லாயக்கு எண்டு

- Mathan - 01-25-2005

KULAKADDAN Wrote:இது 4/5மாதத்துக்கு முந்தி வந்ததெண்டு நினைக்கிறன்.....

நான் நேற்று காலையில் தான் பார்த்தேன், முன்பே வெளிவந்திருக்கலாம்.

- sinnappu - 01-25-2005

Quote:KULAKADDAN

இணைந்தது: 30 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 422

எழுதப்பட்டது: திங்கள் தை 24, 2005 7:20 pm Post subject:

நன்றி ... இது 4/5மாதத்துக்கு முந்தி வந்ததெண்டு நினைக்கிறன்.....
_________________
SEEK GOOD DO GOOD BE GOOD

FROM CHC

எது அப்பமோ இல்லையப்பு அது வந்து கனநாள் ஆச்சு என்ர பாட்டியும் சுடுறவா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tsunami - 01-25-2005

எங்கட சனத்தைப்பற்றி அறியத்தானாம் என்று ஒரு கதை
ஆனால் பாருங்கோ யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில பலர் அவர்களுடைய வீட்டுக்குப்போய் (சிங்களவன் வீட்டுக்கு இல்லை வெள்ளைக்காரன் வீட்டுக்குப்போய்) சொல்லிக்கொடுக்கினமாம்...

பிறகு அதை அவர்கள் சிங்களவருக்கு சொல்லி கொடுப்பினமாம்
இன்று தான் இந்த விடயம்

www.tamilsociety.com இல் பார்த்தன்
நான் கடலுக்குள்ளோயே இருந்திருக்கலாம் போலிருக்கு...
என்னைச்சுற்றியே என்ன நடக்குது என்று எனக்கு யோசிக்க பயமாயிருக்கு...
இந்த காலத்தில யாரை நம்புறது யாரை விடுறது என்று தெரியவில்லைப் பாருங்கோ.....