Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரதிபலிப்பு
#11
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை? என்ற எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்?
காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம், வானம் அளவு யோசிப்போம்,
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்!
லட்சம் கனவு கண்ணோடு, லட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை, உறுதியோடுப் போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதைப் போடு, மரமாகும்;
அவமானம் அடைந்தால் நீ, எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன? என் தோழா!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே,
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே,
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ, அது பனியோ? நீ மோதிவிடு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=105
ஹரியண்ணா பாடல்களை இந்தப்பக்கத்தில் போட்டால் எல்லாப்பாடல்களைப் பார்க்கவும் இலகுவாக இருக்கும்.

அருமையான பாடல்வரிகள். தமிழில் இணைத்தமைக்கு நன்றிமன்னா
----------
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 01-22-2005, 08:15 AM
[No subject] - by kavithan - 01-22-2005, 08:28 AM
[No subject] - by aswini2005 - 01-22-2005, 12:22 PM
[No subject] - by kuruvikal - 01-22-2005, 02:05 PM
[No subject] - by hari - 01-22-2005, 05:05 PM
[No subject] - by tamilini - 01-22-2005, 07:54 PM
[No subject] - by kavithan - 01-23-2005, 01:52 AM
[No subject] - by tamilini - 01-23-2005, 01:30 PM
[No subject] - by hari - 01-23-2005, 03:29 PM
[No subject] - by வெண்ணிலா - 01-23-2005, 03:35 PM
[No subject] - by kavithan - 01-23-2005, 05:35 PM
[No subject] - by tamilini - 01-23-2005, 07:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)