01-23-2005, 11:23 AM
வணக்கம். எனது அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டிலுள்ள லொத்தர் நடத்தும் கம்பனி ஒன்று எனக்கு கணணி மூல சீட்டிழுப்பில் பெருந் தொகை கிடைத்திருபதாக கடித மூலம் அறிவித்து எனது விபரங்களை கோரி இருந்தது. அதில் குறிப்பிட்ட தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அங்கிருந்து ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். அதன் பின் அந்த கம்பனியின் விபரத்தினை கூகிளில் தேடியபோது அப்படி அது பலரிடம் மோசடி செய்ய முயற்சித்ததாக பலரது செய்திகளையும் பார்த்ததால் நான் தப்பித்தேன். அந்த கொம்பனியின் பெயர் லொடேரியா பிரிமரிவா. அது பற்றிய எச்சரிக்கையில் தமிழ் உறவு ஒன்றின் பெயரும் இருந்தது. ஆதலால் இத்தகைய சர்வதேச ஏமாற்று நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
glad
glad

