Yarl Forum
lottery - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: lottery (/showthread.php?tid=5667)



lottery - glad - 01-23-2005

வணக்கம். எனது அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டிலுள்ள லொத்தர் நடத்தும் கம்பனி ஒன்று எனக்கு கணணி மூல சீட்டிழுப்பில் பெருந் தொகை கிடைத்திருபதாக கடித மூலம் அறிவித்து எனது விபரங்களை கோரி இருந்தது. அதில் குறிப்பிட்ட தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அங்கிருந்து ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். அதன் பின் அந்த கம்பனியின் விபரத்தினை கூகிளில் தேடியபோது அப்படி அது பலரிடம் மோசடி செய்ய முயற்சித்ததாக பலரது செய்திகளையும் பார்த்ததால் நான் தப்பித்தேன். அந்த கொம்பனியின் பெயர் லொடேரியா பிரிமரிவா. அது பற்றிய எச்சரிக்கையில் தமிழ் உறவு ஒன்றின் பெயரும் இருந்தது. ஆதலால் இத்தகைய சர்வதேச ஏமாற்று நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
glad


- kanapraba - 01-23-2005

கவனமாக இருக்கவும்


- Niththila - 01-23-2005

இப்படி ஏமாற்ற என நிறைய இணைய தளங்களும் கைத்தொலைபேசி நிறுவனங்களும் உள்ளன எனவே நாங்கதான் கவனமாக இருக்கோணும்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.


- kasthori - 01-23-2005

ஆகா glad திருநெல்வேலிக்கே அல்லாவா? உங்களுக்கே real விடப்பாக்கிறாங்களா? செமக்கில்லாடியள்தான்.


- kasthori - 01-23-2005

மன்னிக்கவும் அல்வாவா என்பது அல்லாவா எனத் தட்டச்சாகிவிட்டது.


- kavithan - 01-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Kishaan - 01-23-2005

உது மாதிரி எனக்கும் 2 நாட்களுக்கு முன்னர்தான் வந்தது...
நான் இருக்கிற நாட்டிலை கன தமிழாக்களை சுரண்டிப்போட்டுத்தான் விட்டிருக்கிறாங்கள்..

8) நான் Alert


- vaseekaran - 01-23-2005

ennakum intha lother kaditham veetta vanthathu ithukku pathil poda venam personnel information onraym kodukka venam ithu oru mafia group in velayam kavanama irrungal