01-22-2005, 02:05 PM
கவிதைகள் நன்று...!
ரணங்கள் நிறைந்த இதயங்கள்
இதமாக இவ்வரிகள் போதுமா...??!
அன்பை அறுத்து
இதயத்தைக் குத்திக்கிழிக்கும்
சோகங்கள் தரும் பிசாசுகளே
கொஞ்சம் நில்லுங்கள்.. கேளுங்கள்..
இந்த நினைவுகளின் சோகங்களை...!
ஈரமிருந்தால் கசிந்திருக்கும்
பாறை கூட உவமையில்லை உமக்கு
ஈரமிருந்தால் துருக்கும் அந்த
இரும்புமில்லை உவமை உமக்கு
சுனாமி போல் எழும்
சுயநலமே இதயமாய் உமக்கு...!
உங்களை அடையாளம் காட்ட
வழியுமில்லை எமக்கு...!
எச்சரிக்கிறோம்...
இந்தச் சுனாமிகளை தடுக்க
இன்றே ஒரு தடைச் சுவர்
இதயத்துள் கட்டுங்கள் காளையரே...!
காதலலை கொண்ட அன்பு அலைகளாய்
வேசம் கொண்டெழும்
ஆர்ப்பரிக்கா சுனாமி அலைகள்
உங்களை "நன்றாய்" கண்டதும் எழும்
ராட்சத சுயநலச் சுனாமி அலைகளாய்
தூக்கி வீசும் உங்கள் இதயப்படகுகளை
வாழ்வெனும் கரைதனில் தூரவே...!
சோகங்கள் விளைவாகும்
சோகராகங்கள் காதோடு கவிபாடும்
இதயத்தை முள்ளாய்த் தைக்கும்
நினைவுகள் வசிப்பிடமாகும்
வேண்டாம் நமக்கு இந்த விளைவுகள்
சாதிக்க இருக்கு ஆயிரம்
அவை தவிர்த்து சாவதோ வீணே....!
விளிப்போடிருங்கள்...
கடலை கொண்டெழும்
சுனாமிகள் மட்டுமாய் அன்றி
காதலலைகள் தரும்
சுனாமிகள் குறித்துமே...!
ரணங்கள் நிறைந்த இதயங்கள்
இதமாக இவ்வரிகள் போதுமா...??!
அன்பை அறுத்து
இதயத்தைக் குத்திக்கிழிக்கும்
சோகங்கள் தரும் பிசாசுகளே
கொஞ்சம் நில்லுங்கள்.. கேளுங்கள்..
இந்த நினைவுகளின் சோகங்களை...!
ஈரமிருந்தால் கசிந்திருக்கும்
பாறை கூட உவமையில்லை உமக்கு
ஈரமிருந்தால் துருக்கும் அந்த
இரும்புமில்லை உவமை உமக்கு
சுனாமி போல் எழும்
சுயநலமே இதயமாய் உமக்கு...!
உங்களை அடையாளம் காட்ட
வழியுமில்லை எமக்கு...!
எச்சரிக்கிறோம்...
இந்தச் சுனாமிகளை தடுக்க
இன்றே ஒரு தடைச் சுவர்
இதயத்துள் கட்டுங்கள் காளையரே...!
காதலலை கொண்ட அன்பு அலைகளாய்
வேசம் கொண்டெழும்
ஆர்ப்பரிக்கா சுனாமி அலைகள்
உங்களை "நன்றாய்" கண்டதும் எழும்
ராட்சத சுயநலச் சுனாமி அலைகளாய்
தூக்கி வீசும் உங்கள் இதயப்படகுகளை
வாழ்வெனும் கரைதனில் தூரவே...!
சோகங்கள் விளைவாகும்
சோகராகங்கள் காதோடு கவிபாடும்
இதயத்தை முள்ளாய்த் தைக்கும்
நினைவுகள் வசிப்பிடமாகும்
வேண்டாம் நமக்கு இந்த விளைவுகள்
சாதிக்க இருக்கு ஆயிரம்
அவை தவிர்த்து சாவதோ வீணே....!
விளிப்போடிருங்கள்...
கடலை கொண்டெழும்
சுனாமிகள் மட்டுமாய் அன்றி
காதலலைகள் தரும்
சுனாமிகள் குறித்துமே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

