Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உளரீதியான பயிற்சி அவசியம்
#7
<b>பல குடும்பங்கள் உள ரீதியாகப் பாதிப்பு</b>

யாழ் நிருபர் வெள்ளிக்கிழமை, 21 சனவரி 2005 22:32 ஈழம்

யாழ் குடாநாட்டில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதக யாழ் பல்கலைக்கழத்தின் உளநல மருத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர்,

அனர்த்தகால உளநல மருத்துவ பிரிவின் செயலனிக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

ஆழிப்பேரலை காரணமாக பல குடும்பங்கள் சிதைவடைந்து போயுள்ளன. உயிரிழப்புகள்ää உடமை இழப்புகள், தொழில் இழப்புகள் என பல்வேறு இழப்புக்களை இந்த குடும்பங்கள் சந்தித்துள்ளமையினால் இக் குடும்பங்கள் உள ரீதியாகப் பாதிப்படைந்து விரக்தியடைந்துள்ளன.

இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள். 2 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

இதனைத் தவிர மற்றும் பலர் முகாம்களில் வாழ்வதால் மதுவிற்கு அடிமையாகின்றார்கள். எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்கள்.

இந் நிலையில் இவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதென்றால் மீள் குடியேற்றம் மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது உடனடித் தேவையாக உள்ளது.

இவற்றிற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 01-20-2005, 06:09 AM
[No subject] - by kavithan - 01-20-2005, 06:13 AM
[No subject] - by tsunami - 01-20-2005, 07:41 AM
[No subject] - by hari - 01-20-2005, 09:01 AM
[No subject] - by hari - 01-20-2005, 06:08 PM
[No subject] - by hari - 01-22-2005, 05:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)