Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் நடக்கிறது....
#76
வாசிக்க சிரமப்படுபவர்களுக்காக



சமீபத்தில் நடந்த விஷயம். ரொம்பவே உறுத்தியது. நிச்சயதார்த்தம் நடந்துஇ பத்திரிகைகள் அடிக்கப்பட்டுஇ திருமணம் இன்னும் நான்கு நாளில் என்ற நிலையில் அந்தப் பெண் ஏற்கெனவே விரும்பியவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டு இருக்கிறாள்.
‘இது என்ன புதுசுஇ ஓடிப் போறதெல்லாம் ரொம்ப சகஜம்தானே’ என்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் இதுபோன்ற நிலையில் செல்லும் பெண்ணின் மனோநிலை பற்றித்தான் குறிப்பிட விரும்புகிறேன்.
அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருக்கலாம். சொன்னால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்இ அல்லது மிரட்டித் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருப்பார்கள் என்ற கதைகள் எல்லாம் கூட இருக்கலாம்.

ஆனால் திருமணத்துக்கு நாலு நாட்களுக்கு முன்பு காணாமல் போவது என்பது ஒரு பெற்றோருக்குக் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை என்றுதான் தோன்றுகிறது. காதலிப்பதும்இ விரும்பியவனை மண முடிக்க எந்தக் கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்வது என்ற திடசித்தமும் சரிதான்.

ஆனால் எல்லோரும் அறிய நிச்சயதார்த்தம் நடத்திஇ நிறையப் பேருக்கு ‘என் பெண்ணுக்குக் கல்யாணம்’ எனப் பத்திரிகை அனுப்பித் தெரிவித்த பிறகு திருமணம் நிறுத்தப்பட வேண்டிய சூழ் நிலை வருகிறது. இந்த நிகழ்ச்சி முன்னமே நடந்திருந்தால் கூட அவர்கள் நெருங்கிய சொந்தங்களோடு போய் விடும் விஷயம்இ இப்போது அத்தனை பேருக்கும் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டியதாகிறது. ‘என் பெண் இப்படிச் செய்து விட்டாள்இ அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்’ என அழைப்பிதழ் கொடுத்த அத்தனை பேருக்கும் கூப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவல நிலையை விட பெற்றவர்களுக்கு வேறென்ன கொடிய தண்டனை வேண்டும்?

எத்தனையோ விஷயங்களில்இ கல்வியில்இ சிந்தனையில்இ நாகரிகத்தில் முன்னேறி விட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்கள்இ மகள்கள் இதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? இந்தக் கலாசாரம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? ‘ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கலாமாஇ பிள்ள குட்டி பெத்துக்கிட்டு ஓடிப் போலாமா’ என்ற பாட்டு திருமண ரிசப்ஷனில் பாடப்படுகிறது. நிறைய வாண்டுகள்இ ஏன் சில பெரியவர்களே கூட கூச்சநாச்சமின்றி அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்!

அவரவர்களுக்கு வரும்போது மட்டுமே வலியின் ரணமும்இ தீவிரமும் பாதிக்கிறது. மற்றபடி இதுபோன்ற நச்சு சூழ்ந்த கலாசார சீரழிவைப் பற்றிஇ டீ.வி.யைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்து விட்டுப் போகின்ற சூழ்நிலைதான் நிறைய இருக்கிறது.

இன்றையச் சூழ்நிலையில் காதலிப்பது என்பது சர்வசாதாரணமாகி விட்ட நிலைதான். ஆண் பெண் ஒன்றாகப் படித்து வேலை பார்க்கும் சூழலில் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்படுவது சகஜம்தான். ஆனால் இந்த உணர்வுகளை முறைப்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதில்தான் அவர்களுடைய ஆளுமையே வெளிப்படுகிறது எனலாம்.

அந்தக் காலத்தில் காந்திஜிஇ இராஜாஜி குழந் தைகள் ஒருவரை ஒருவர் விரும்பிய கதை மிகப் பிரபலமானது. பெரியவர்கள் விதித்த நிபந்தனை களை ஏற்று அவர்கள் வென்றார்கள். எத் தனையோ பேர் தங்கள் பெற்றோர் சமாதானம் ஆகும்விதமாகச் செய்து இணைகிறார்கள். வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொள்பவர் களும் இருக்கிறார்கள்.

ஆனால் பெற்றவர்களை கூனிக் குறுகச் செய்து திருமணம் செய்து கொள்வது என்பது எப்பேர்ப்பட்ட நிலை! இது தனிப்பட்ட ஒரு பெண்ணின் முடிவு என்று கூட எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இன்றைய பொறுப்பற்ற சமுதாயச் சூழலில் முளைக்க ஆரம்பித்திருக்கும் நச்சுக் காளான் என்றுதான் நினைக்க வேண்டும்.

குடும்பத்திலே ஒருவருக்கொருவரான ஆழ மான பிணைப்பு என்பது கொஞ்சம் கொஞ்ச மாகத் தகர்க்கப்பட்டு வருகிறது. தன் நாடுஇ தன் சமுதாயம்இ தன் குடும்பம்இ தன் பெற்றோர் இவை யெல்லாம் தங்களுக்குக் கிடைத்த வரம் என்றல் லவா பெருமைப்படவேண்டும்! ‘எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்று பெருமிதமாகப் பாடினார்கள். எங்க அப்பாஇ அம்மா மாதிரி உண்டா என்று பெருமைப்பட்டார்கள்.

ஆனால் இன்று...? ‘‘டேய் அப்பா...’’ எனக் கூப்பிடச் சொல்லித் தரப்படுகிறது. ‘‘காயத்ரீ...’’ எனத் தன்னை அழைத்த மகனை வாரியணைக் கும் அம்மாஇ ‘‘இது மட்டும் டீ காயத்ரீன்னு கூப் பிடாம போனானே!’’ என்று பெருமைபடச் சொல்கிறாள்!

சிறு வயதிலேயே இங்கு சொல்லித் தரப்பட வேண்டியவைகள்இ கண்டிக்கப்பட வேண்டியவை கள் செய்யப்படுவதில்லை. ஒரு பிரபல நகைக் கடைக்காரரின் மனைவி ரொம்ப வருந்தி சமீபத் தில் ஒரு விஷயம் சொன்னார். ஒரு அப்பா வும்இ பெண்ணும் வந்தார்கள். அந்த டீன் ஏஜ் பெண் கடைச் சிப்பந்தியிடம் தன் தொப்புளைக் காட்டிஇ ‘‘இங்கே போட்டுக்கற நகை இருக்கா?’’ என்று கேட்டாளாம்! அப்பா பக்கத்தில் ந்¤ற்க கடைச் சிப்பந்தி தலைகுனிந்து கொண்டாராம். இது கற்பனையல்லஇ நிஜம்!

கூச்சம் என்பது இல்லாமல் போனதற்கு நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கலாசார சீரழிவுச் சாக்கடையல்லவோ காரணம்! புள்ள குட்டி பெற்றுக் கொண்டு ஓடிப் போவதைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது என்றால் இதை விடக் கேடுகெட்ட உதாரணமாக வேறு எதைச் சொல்ல முடியும்?

எதுவுமே சகஜம்இ எல்லாமே சாதாரணம் என்ற நிலைதான் இங்கு வந்து கொண்டிருக் கிறது. அதனால்தான் பெற்றவர்களைப் பற்றிய பெருமிதம் குழந்தைகளுக்கும் இல்லை. குழந்தை களை வளர்க்க வேண்டிய விதத்தையும் பெற் றோர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

போலி கௌரவம்இ போலி ஆடம்பரம்இ போலி ஜபர்தஸ்திற்காக இங்கு எவ்வளவு அலட்சியமா கச் செலவு செய்யப்படுகிறது? ‘‘என் மகன் இன்ஜீனியரிங் படிக்கிறான்’’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

‘‘யு.எஸ்.ஸில் இருக்காள்’’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அதற்கா கத் தேவையோஇ தேவையில்லையோ எத்தனை இலட்சங்கள் செலவுஇ இழப்பு!

குடும்பமே இங்கு முகமூடிகளை அணிந்து கொண்டு நடமாடுவது போல இருக்கிறது. பெற்ற வர்களின் சிந்தனைகளும் மேன்மையாக இருப்பதில்லை. பிள்ளைகளின் போக்கும் நேர்மையாக இருப்பதில்லை. எனவே ஒவ்வொருவரும் முகமூடி களைப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.

இந்த முகமூடிகள் களையப்பட வேண்டிய காலகட்டம் ஒன்று வருகிறது. ஏதேனும் அவசரம்இ ஆபத்துஇ இக்கட்டான சூழ்நிலை இவைகள் ஏற்படும் போது ஒவ்வொருவரின் முகமூடியும் அவிழ்ந்து விடுகிறது. போலி கௌரவத்திற்காக ஆரம்பத்தி லிருந்து அன்னிய கலாசாரத்தைப் புகுத்தியவர் கள் பிற்காலத்தில் அன்பிற்காக அவஸ்தைப்படுகிறார்கள்.

உள்ளத் துணிவுஇ நேர்மைஇ திடசங்கல்பம் இவையெல்லாம் கொண்டு இரும்பு போல நிற்க வேண்டிய இளைஞர்கள் ஏதோ மயக்கத்திலே வாழ்க்கைச் சிக்கலிலே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள். சிக்கல் மேலும் வெளியே வர முடியாத சிறையாக மாறி விடுவதுதான் பரிதாபத்திற்கு உரியது.

இன்றையச் சூழ்நிலையில் வெளியிலேதான் பல்வேறு விதமாக நாடகமாட வேண்டியுள்ளது. வீட்டிற்குள்ளேயாவது போலி கௌரவம்இ தேவை யற்ற சிந்தனைகள் இவற்றைக் களைந்து உண்மையான அன்பும்இ அக்கறையும் ஒருவர்பால் ஒருவருக்கு இறுக பார்த்துக் கொள்ள வேண்டாமா?

சுற்றுப்புறத் தூய்மைஇ சுகாதாரம் இதெல்லாம் ரொம்பப் பார்க்கிறோம். ஒரு ஈ பண்டத்தில் உட் கார்ந்து விட்டால் அருவெறுப்பு வருகிறது. ஆனால் எத்தனை ஈக்கள் கண்ணுக்குத் தெரியா மல் குடும்பத்தை மொய்த்துக் கொண்டு இருக் கின்றன. வேண்டாம் இந்தக் கொடுமை நமக்கு.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதை தான். நம் குடும்பத்தின் அற்புதமான பண்புகளைக் கொடுத்துஇ மலிவான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். குடும்பமே சிதறிப் போய் விட்டால் அப்புறம் என்ன நாகரிகம்இ பண்பாடு இருக்கும்?

இன்றும் அழகிய சித்திரத்தை வீட்டிற்குள் வரையலாம். அதற்குக் கொஞ்சம் கவனமும்இ கண்காணிப்பும் இருந்தால் போதும். அதற்குத் தேவை தெளிவான சிந்தனைஇ மனம்!
Reply


Messages In This Thread
[No subject] - by Mullai - 07-20-2003, 12:44 PM
[No subject] - by Kanani - 07-20-2003, 12:48 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 01:01 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 01:14 PM
[No subject] - by Paranee - 07-20-2003, 01:43 PM
[No subject] - by Manithaasan - 07-20-2003, 04:03 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 04:27 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 04:42 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 05:16 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 07:05 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 07:25 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 07:41 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 07:42 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 07:47 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 07:54 PM
[No subject] - by Guest - 07-20-2003, 07:57 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 08:05 PM
[No subject] - by TMR - 07-20-2003, 08:11 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 08:12 PM
[No subject] - by TMR - 07-20-2003, 08:17 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 08:25 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:30 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 08:37 PM
[No subject] - by TMR - 07-20-2003, 08:47 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 12:06 AM
[No subject] - by kuruvikal - 07-22-2003, 09:13 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 09:49 PM
[No subject] - by Paranee - 07-23-2003, 06:20 AM
[No subject] - by Paranee - 07-23-2003, 06:21 AM
[No subject] - by kuruvikal - 07-23-2003, 07:50 AM
[No subject] - by kuruvikal - 07-26-2003, 07:30 AM
[No subject] - by Mullai - 07-26-2003, 08:13 AM
[No subject] - by kuruvikal - 07-26-2003, 10:07 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 10:22 AM
[No subject] - by kuruvikal - 07-26-2003, 11:14 AM
[No subject] - by Mullai - 07-26-2003, 04:22 PM
[No subject] - by Paranee - 07-27-2003, 06:46 AM
[No subject] - by sethu - 07-27-2003, 04:04 PM
[No subject] - by Manithaasan - 08-01-2003, 10:13 AM
[No subject] - by GMathivathanan - 08-01-2003, 12:50 PM
[No subject] - by kuruvikal - 08-06-2003, 02:19 PM
[No subject] - by GMathivathanan - 08-06-2003, 02:37 PM
[No subject] - by Manithaasan - 08-06-2003, 03:37 PM
[No subject] - by Mullai - 08-06-2003, 04:35 PM
[No subject] - by kuruvikal - 08-07-2003, 09:56 AM
[No subject] - by Manithaasan - 08-07-2003, 10:27 AM
[No subject] - by kuruvikal - 08-07-2003, 11:26 AM
[No subject] - by Paranee - 08-07-2003, 01:20 PM
[No subject] - by Alai - 08-07-2003, 10:49 PM
[No subject] - by Alai - 08-07-2003, 10:55 PM
[No subject] - by sethu - 08-08-2003, 07:46 PM
[No subject] - by Mathivathanan - 08-09-2003, 08:51 AM
[No subject] - by Mullai - 08-09-2003, 09:51 AM
[No subject] - by Mathivathanan - 08-09-2003, 10:03 AM
[No subject] - by kuruvikal - 08-09-2003, 11:47 PM
[No subject] - by sOliyAn - 08-10-2003, 12:29 AM
[No subject] - by Mullai - 08-10-2003, 08:45 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 08:58 AM
[No subject] - by Alai - 08-10-2003, 09:17 AM
[No subject] - by Alai - 08-10-2003, 09:31 AM
[No subject] - by kuruvikal - 08-10-2003, 10:28 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 11:07 PM
[No subject] - by sOliyAn - 08-10-2003, 11:14 PM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 12:05 AM
[No subject] - by kuruvikal - 08-11-2003, 07:18 AM
[No subject] - by sOliyAn - 08-11-2003, 07:32 AM
[No subject] - by sethu - 08-11-2003, 08:05 AM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 10:13 AM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 10:19 AM
[No subject] - by sethu - 08-11-2003, 10:50 AM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 11:13 AM
[No subject] - by sethu - 08-11-2003, 07:35 PM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 07:40 PM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 08:31 PM
[No subject] - by Guest - 08-11-2003, 09:07 PM
[No subject] - by sethu - 08-11-2003, 09:29 PM
[No subject] - by kuruvikal - 08-12-2003, 01:47 PM
[No subject] - by Mathivathanan - 08-12-2003, 02:53 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 07:39 AM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 07:41 AM
[No subject] - by sethu - 08-16-2003, 09:09 AM
[No subject] - by sOliyAn - 08-17-2003, 04:45 AM
[No subject] - by Mathivathanan - 08-17-2003, 07:36 AM
[No subject] - by Mathivathanan - 08-17-2003, 07:37 AM
[No subject] - by sethu - 08-17-2003, 07:43 AM
[No subject] - by sOliyAn - 08-17-2003, 10:24 PM
[No subject] - by Mathivathanan - 08-17-2003, 10:32 PM
[No subject] - by Kanani - 08-17-2003, 10:47 PM
[No subject] - by sOliyAn - 08-18-2003, 12:26 AM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 08:21 AM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 09:18 PM
[No subject] - by Guest - 08-19-2003, 08:58 AM
[No subject] - by sethu - 08-19-2003, 07:44 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)