01-20-2005, 07:40 PM
kuruvikal Wrote:பிரித்தானியா கூட ஐநா விதிகளுக்கு அமைவான அகதிகள் கொள்கையத்தான் அடிப்படையாகக் கொண்டு சட்டவரைபுகளை வைத்திருக்கிறது...!
பெரும்பான்மையான மேற்கத்தைய நாடுகள் ஐநாவின் அகதிகளுக்கான ஜெனீவா உடன்படிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் சட்ட வரைபுகளை வைத்திருந்தாலும் அவற்றை அமுல் படுத்தும் முறைகளை வேறுபட்டவை. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் மற்றய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரித்தானியா இந்த விடயத்தில் நெகிழ்வு போக்கை காண்பிக்கின்றது. ஒரே அடிப்படையாக இருந்தபோது இவை எல்லாம் வேறுபாடுகள் தானே.
kuruvikal Wrote:சிறிய சிறிய சட்ட நெகிழ்வுகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...தொழிற்கட்சி கொண்டு வந்த சட்டமாற்றம் கூட நாட்டின் நன்மை கருதியதே அன்றி அகதிகளின் என்று முற்றாகக் கூற முடியாது...!
குறிப்பாக குடும்பமா இருந்தும் அகதியாக இருந்து அரச பணத்தைச் சுரட்ட அனுமதிப்பதைவிட நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கி பிழைப்புக்கு அனுப்புறது அரசுக்கு இலாபம்...! தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை தந்ததே ஒழிய அடிப்படை சட்டங்கள் மாற வாய்ப்பில்லை...
சிறிய சட்ட நெகிழ்வாக இருந்த போதும் குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வதிவுரிமை பெற்றனர். அவை நாட்டின் நன்மை கருதி இருந்தாலும் சரி அகதிகள் நலன் கருதி இருந்தாலும் சரி வதிவிட உரிமை கிடைத்தது தானே. மக்கள் வேலை அனுமதி இன்றி களவாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்துக்கும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதிலும் பார்க்க வதிவிட உரிமையுடன் அதிக சம்பளத்துக்கு வேலை செய்யலாம் அல்லவா? அரசுக்கும் வரி கிடைக்கும் மக்களுக்கும் வேலை சம்பளம் கிடைக்கும்.
kuruvikal Wrote:எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து அகதிகளுக்கான ஒரு பொது சட்ட வரைபைத் தீட்டும் திட்டத்தை பிரிட்டன் பரிசீலித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இந்த பொது வரைவு வந்தால் அதி நிச்சயம் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பாதகமாக அமையும் :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: 