Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காத்திருப்பு
#1
அவள் வீட்டு கதவு
தானே திறக்கும்
உள்ளே அணைப்பதற் கென்றே
ஏற்றப்பட்ட விளக்கெளியில்
உரிவதற்காய் உடுத்திய
சேலையில்
கலைப்பதற்கென்றே செய்த
ஒப்பனையில்
கசக்குவதற்காக சில மலர்களை
காதேரம் வைத்து
காத்திருக்கிறாள்.
உடம்பில் எங்கும்
உணர்சியில்லை வயிற்றைதவிர
என்வாயிற்று இன்று
ஆணினமே அழிந்துவிட்டதா
சுனாமி வந்து
சுத்திக்கொண்டுபோய்வட்டதா
படுக்கைவிரிப்பு
பத்திரமாய் இருக்கிறதே
வைத்தபொட்டு
வைத்தபடியே இருக்கிறதே
அதுஅழியா விட்டால் அவளிற்கு
அமங்கலமல்லவா
செல்லாத இராத்திரி
சிறுகச் சிறுக
விடியும்பகல்
பட்டினிபகலா
எங்கோ ஒருகட்சி தலைவன்
தேர்தல் வாக்குறுதி
நான் ஆட்சிக்கு வந்தால்
அதை சட்டப்படி செய்யலாம்
அவள் நிமிர்கிறாள்
ஆகா அதுமடடும் நடந்துவிட்டால்
அரசாங்கமே ஆளனுப்புமா????
; ;
Reply


Messages In This Thread
காத்திருப்பு - by shiyam - 01-20-2005, 06:34 PM
[No subject] - by Kishaan - 01-20-2005, 07:12 PM
[No subject] - by kuruvikal - 01-20-2005, 07:27 PM
[No subject] - by kavithan - 01-20-2005, 11:21 PM
[No subject] - by shiyam - 01-21-2005, 02:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)