Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருப்பாச்சி
#70
திருப்பாச்சி


"காதால் கேட்பதை காதோடு விட்டுடணும். கண்ணால் பார்ப்பதை பார்ப்பதோடு விட்டுடணும். அதையே மூளைக்கு கொண்டுவந்தால் ஆபத்து"


'திருப்பாச்சியில்'வரும் வசனம் இது. இயக்குனர் பேரரசு படம் பார்ப்பவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.


அமைதியாக இருக்கும் ஒருவன் தனக்கு ப்ரியமானவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது ஆக்ரோஷமாக மாறும் அரதபழசு கதை. அமைதியாக விஜய். அவர் தங்கையாக மல்லிகா. அண்ணன் தங்கை என்றால் பாசம் இருக்க வேண்டுமே? இருக்கிறது. தங்கைக்கு வில்லன்களால் ஆபத்து ஏற்பட வேண்டுமே? ஏற்படுகிறது. இதைப்பார்த்து அண்ணனுக்கு ஆவேசம் வர வேண்டுமே? வருகிறது... ஆனால் இங்கு சின்ன ட்விஸ்ட். தங்கைக்குப் பதில் நண்பனை (பெஞ்சமின்)வில்லன் கோஷ்டி போட்டுத் தள்ள, சிவகிரியான விஜய் கிரிவலம் என்ற பெயரில் ரவுடிகளை தேதி குறித்து பாடை கட்டுகிறார்.


பட்டறை தொழிலாளி விஜய், தங்கையை பட்டணத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என பாசத்தில் உருகுவதும், பாதி படத்திற்கு மேல் ரவுடிகளை பந்தாடுவதுமாக இருவித நடிப்பையும் அனாயாசமாக செய்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளில் எக்ஸ்ட்ரா பவர்! போலீசுக்கும் ரவுடிகளுக்கும் அவர் மாறி மாறி சவால் விடும் போது, திருமலை,கில்லி, மதுர என அரை டஜன் விஜய்கள் மனசுக்குள் வந்து போகிறார்கள். இளைய தளபதி கொஞ்சம் சேஞ்ச் பண்ணக்கூடாதா?


அண்ணன் சட்டையை மாட்டிக் கொண்டு திரியும் கிராமத்து பெண்ணாக மல்லிகா. ரவுடிகள் அராஜகம் செய்ததை மென்று விழுங்கியபடி விஜய்யிடம் டெலிபோனில் சமாளிக்கும் காட்சி.... மிகையில்லாத யதார்த்தம். அலட்டலில்லாத நடிப்பு மூலம் மனதில் இடம் பிடிப்பவர்கள், விஜய்யின் நண்பனாக வரும் பெஞ்சமினும், மாமாவாக வரும் அறிமுக நடிகர் சீனிவாசனும்.


ஹீரோயின்? மூன்று பாடல்களுக்கு ஆடினால் ஹீரோயினா.. அய்யோபாவம் திரிஷா! வளரும் காமெடி நடிகருக்கு போனால் போகிறது என்று ஒன்றிரண்டு வசனம் கொடுப்பார்களே.. அப்படி ஒரு ரோல் லிவிங்ஸ்டனுக்கு! வில்லன்களில் தப்பிப் பிழைப்பவர் பசுபதி. வழக்கமான வில்லன் ரோலை குரல் மாடுலேஷன் மூலம் வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார்.
படத்தின் நிஜ ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ். கதையே இல்லாத பிற்பகுதியை ஆக்ஷ்னில் தூக்கி நிறுத்துகிறார். அவருக்கு பக்கபலமாக எடிட்டர் வி. ஜெய்சங்கர்.


கிராமம், சிட்டி என இரு லொகேஷன்களிலும் கண்களை உறுத்தாத பின்னணியை உருவாக்கியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் எம். பிரபாகர். எஸ். சரவணின் கேமரா கிராமத்தில் கவிதை.. ஆக்ஷ்னில் காட்டாறு!


தினாவின் இசையில் பாடல்கள் 'டகர டகர' ரகம். மிஞ்சுவது 'கண்ணும் கண்ணும் கலந்தாச்சு' பாடல் மட்டுமே; இசையும் படமாக்கிய விதமும் பரவாயில்லை என சொல்ல வைக்கின்றன. சாயாசிங் ஆடும் 'கும்பிடபோன தெய்வம்' பாடல் ஆடி மாதம் அம்மன் கோவிலில் கூழ் ஊத்தும் போது போடும் மலிவு விலை கேசட். பாடல்களில் தான் உறுமி சத்தம் என்றால் பின்னணியிலும் உறுமியை உறும விட்டு காதை பதம் பார்க்கிறார்கள்.


கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் பேரரசு. 'சென்னை வெறும் தலைநகரம் மட்டுமல்ல.. அது அமைதியாக இருந்தால் மொத்த தமிழ்நாடும் அமைதியாக இருக்கும்' என்பதை சொல்ல வந்திருக்கிறார். ஆனால் அரிவாளும், கழுத்தில் அரைக்கிலோ நகையுமாக திரியும் ரவுடிகளும் தான் வன்முறை என்று அவர் புரிந்து வைத்திருப்பது படத்தின் முதல் சறுக்கல். ரவுடிகள் அராஜகம் செய்யும் போதெல்லாம், இதோ விஜய் பொங்கி எழப் போகிறார் என ரசிகர்களின் பிளட் பிரசரை அதிகரிக்க செய்தது மட்டுமே திரைக்கதையின் ஒரே பிளஸ்.


'மக்களுக்கு பிடிக்காதவங்களை நாம பிடிக்கிறது இல்ல. மக்களுக்கு பிடிக்கிறவங்களை நாம உடனே பிடிச்சிடறோம்.' என போலீஸ் அதிகாரி லிவிங்ஸ்டன் பேசுவது போன்ற 'ரெட்டோரிக்' வசனங்களை படம் முழுவதும் அள்ளி தெளித்திருக்கிறார்கள். இவை பல இடங்களில் பொங்கல், சில இடங்களில் வெறும் கல்.


அமைதியான கிராமத்து இளைஞன் ஓவர் நைட்டில் அல்ட்ரா மார்டனாக மாறி, 'சிட்டியில் ஒரு போலீஸ் கமிஷனர், ரெண்டு டெபுடி கமிஷனர்ஸ், முந்நூறு இன்ஸ்பெக்டர்கள்' என்று ரமணா ஸ்டைலில் பட்டியலிடுவது டிபிக்கல் சினிமா ஹீரோயிசம். பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை என மூன்று வில்லன்கள். பட்டாசு பாலுவின் (பசுபதி) பின்னால் அடியாள்கள் பண்டல் பண்டலாக பட்டாசுகளுடன் திரிவது, போலீஸ் அதிகாரியின் மகனை கொன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போட்டு விட்டு 'என் ஆளை ரிலீஸ் பண்ணலைன்னா உன் அடுத்த மகனும் குளோஸ்' என அவரிடமே சவடால் விடுவது என்று திரைக்கதையில் ஒரு முழு அண்டா திருநெல்வேலி அல்வா கிண்டியிருக்கிறார்கள். இதில் உச்ச பட்ச அபத்தம் கிளைமாக்ஸ்.


பொதுவாக காதில் பூ சுற்றுவார்கள். திருப்பாச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக கத்தி சொருகியிருக்கிறார்கள்.

ப்ளஸ்..(+)
விஜய்
ஆக்ஷ்ன்
வசனம்

மைனஸ்.. (-)
திரைக்கதை
இசை
ஹீரோயின்


tamil.cinesouth.com
Reply


Messages In This Thread
திருப்பாச்சி - by Mathan - 12-19-2004, 06:09 PM
[No subject] - by Vaanampaadi - 12-19-2004, 06:11 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:17 PM
[No subject] - by KULAKADDAN - 12-19-2004, 06:19 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:22 PM
[No subject] - by KULAKADDAN - 12-19-2004, 06:23 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:28 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:35 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 07:38 PM
[No subject] - by sinnappu - 12-19-2004, 08:22 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 11:28 PM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 12:35 AM
[No subject] - by Haran - 12-20-2004, 03:51 AM
[No subject] - by shiyam - 12-20-2004, 01:36 PM
[No subject] - by tamilini - 12-20-2004, 01:51 PM
[No subject] - by Mathan - 12-20-2004, 05:22 PM
[No subject] - by Mathan - 12-21-2004, 02:21 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 05:02 AM
[No subject] - by MEERA - 01-16-2005, 02:51 PM
[No subject] - by வியாசன் - 01-16-2005, 04:35 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 05:09 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 05:29 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 05:47 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 06:02 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 06:24 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 07:57 PM
[No subject] - by tamilini - 01-16-2005, 07:58 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 08:25 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 08:35 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 08:44 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 08:51 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 08:54 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 08:55 PM
[No subject] - by tamilini - 01-16-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 01-16-2005, 08:58 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 08:58 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 08:59 PM
[No subject] - by tamilini - 01-16-2005, 09:00 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 09:02 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 09:04 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 09:04 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 09:05 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 09:07 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-16-2005, 09:07 PM
[No subject] - by Mathan - 01-16-2005, 09:10 PM
[No subject] - by MEERA - 01-16-2005, 09:11 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 10:51 PM
[No subject] - by kuruvikal - 01-16-2005, 11:06 PM
[No subject] - by kavithan - 01-17-2005, 12:26 AM
[No subject] - by kuruvikal - 01-17-2005, 12:32 AM
[No subject] - by kavithan - 01-17-2005, 12:49 AM
[No subject] - by வெண்ணிலா - 01-17-2005, 11:38 AM
[No subject] - by Mathan - 01-17-2005, 04:20 PM
[No subject] - by Mathuran - 01-18-2005, 08:31 AM
[No subject] - by tamilini - 01-18-2005, 12:32 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 12:41 PM
[No subject] - by shiyam - 01-18-2005, 03:06 PM
[No subject] - by Mathan - 01-18-2005, 11:22 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 11:39 PM
[No subject] - by Mathan - 01-18-2005, 11:58 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 12:16 AM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 09:43 AM
[No subject] - by kavithan - 01-19-2005, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 01-19-2005, 03:12 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 03:42 PM
[No subject] - by vasisutha - 01-19-2005, 10:07 PM
[No subject] - by vasisutha - 01-19-2005, 10:13 PM
[No subject] - by Kishaan - 01-19-2005, 10:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)