01-19-2005, 12:44 PM
பட்ட மரம் தானாகி
பரிதவிக்கும் கவியே
பட்டது அது மரம் அல்ல
உன் புத்தி....!
முளை விடும் தளிரை
கிளை விடும் நிலையில்
கிள்ளி எறிய ஒரு பறவை
சிந்தம் கொண்டதாய்
சரித்திரம் இல்லை...!
பசுமை இழந்து
தனிமரமாய் நீ நிற்க
தாங்காத சோகம் கொண்டு
கூடி நின்று தேற்றும் பறவையது
பறவாபிமானம் பார்க்க மறந்தனையோ....!
வேண்டாத கற்பனை கொண்டு
பழி சேர்த்தனையோ....!
மனிதாபிமானம் தொலைத்த
மனிதரிடத்து கொண்டதோ
இந்த மரபாபிமானம்....!
மரத்துக்கிடக்கு உன் உள்ளம்
ஈரம் இழந்து
மனிதரைப் போலே....!
தோப்புக்கள் என் வாழ்விடம்
அதற்காய் தப்புக்கள் என் வாழ்வல்ல
பறவையாயினும் பார்
சிந்திக்கத் தவறவில்லை...!
சிறகடிக்க முதல்
நீ முளைவிடக் காத்திருக்குது
உன் பசுமை கண்டதும்
அது பறப்பது உறுதி...!
அதற்காய்...
ஏங்காதே மரமே
நீ பட்ட மரமும் அல்ல
தோப்பிழந்த தனி மரமும் அல்ல
முளை விரிய
கிளை பரப்பி நீயும்
ஒரு நாள் தோப்பாவாய்..!
அன்று உன் கனவு நனவாக
அகம் மகிழ்ந்திருப்பாய்
அப்போ இந்தப் பறவை
எங்கேயோ...???!
இந்தப் பறவை
உனக்கு மட்டுமல்ல
உன்னைப்போல் ஏங்கும்
அனைத்துக்கும் ஓர் உறவு
அன்பின் தூதன்...!
தேற்றிக் கொள்
வேண்டாத கற்பனைகள்
பறவையை அல்ல
நிரந்தரமாய் உன்
பசுமையை பாதிக்கலாம்
பதறாமல் பக்குவம் கொள்
பசுமரமாய் நீ வாழ்வாய்...!
[b](சுட்டித் தங்கையே உங்கள் கவிதை அருமை.. காட்சியும் கற்பனையும் கவியும் ஒருங்கிணையும் அற்புதம் கண்டோம் வாழ்த்துக்கள்...!)
பரிதவிக்கும் கவியே
பட்டது அது மரம் அல்ல
உன் புத்தி....!
முளை விடும் தளிரை
கிளை விடும் நிலையில்
கிள்ளி எறிய ஒரு பறவை
சிந்தம் கொண்டதாய்
சரித்திரம் இல்லை...!
பசுமை இழந்து
தனிமரமாய் நீ நிற்க
தாங்காத சோகம் கொண்டு
கூடி நின்று தேற்றும் பறவையது
பறவாபிமானம் பார்க்க மறந்தனையோ....!
வேண்டாத கற்பனை கொண்டு
பழி சேர்த்தனையோ....!
மனிதாபிமானம் தொலைத்த
மனிதரிடத்து கொண்டதோ
இந்த மரபாபிமானம்....!
மரத்துக்கிடக்கு உன் உள்ளம்
ஈரம் இழந்து
மனிதரைப் போலே....!
தோப்புக்கள் என் வாழ்விடம்
அதற்காய் தப்புக்கள் என் வாழ்வல்ல
பறவையாயினும் பார்
சிந்திக்கத் தவறவில்லை...!
சிறகடிக்க முதல்
நீ முளைவிடக் காத்திருக்குது
உன் பசுமை கண்டதும்
அது பறப்பது உறுதி...!
அதற்காய்...
ஏங்காதே மரமே
நீ பட்ட மரமும் அல்ல
தோப்பிழந்த தனி மரமும் அல்ல
முளை விரிய
கிளை பரப்பி நீயும்
ஒரு நாள் தோப்பாவாய்..!
அன்று உன் கனவு நனவாக
அகம் மகிழ்ந்திருப்பாய்
அப்போ இந்தப் பறவை
எங்கேயோ...???!
இந்தப் பறவை
உனக்கு மட்டுமல்ல
உன்னைப்போல் ஏங்கும்
அனைத்துக்கும் ஓர் உறவு
அன்பின் தூதன்...!
தேற்றிக் கொள்
வேண்டாத கற்பனைகள்
பறவையை அல்ல
நிரந்தரமாய் உன்
பசுமையை பாதிக்கலாம்
பதறாமல் பக்குவம் கொள்
பசுமரமாய் நீ வாழ்வாய்...!
[b](சுட்டித் தங்கையே உங்கள் கவிதை அருமை.. காட்சியும் கற்பனையும் கவியும் ஒருங்கிணையும் அற்புதம் கண்டோம் வாழ்த்துக்கள்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

